nalaeram_logo.jpg
(2399)

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு

கூறாகக் கீறிய கோளரியை, - வேறாக

ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்

சார்த்தி யிருப்பார் தவம்.

பதவுரை

மாறு ஆய

-

எதிரிட்டு நின்ற

தானவனை

-

ஹிரண்யாஸுரனுடைய

மார்வு

-

மார்வை

வள் உகிரால்

-

கூர்மையான நகங்களினால்

இரண்டு கூறு ஆக சீறிய

-

இருபிளவாகப் பிளந்த

கோள்

-

அரியை

பெருமிடுக்கனான நரசிங்க மூர்த்தியை

வேறு ஆக

-

விலக்ஷணமாக

ஏத்தி இருப்பாரை

-

துதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்குமவர்களை,

மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே

-

அந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஆச்ரயிதிருக்கும் சரமாதிகாரிகளின் நிஷ்டைவென்று விடும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானிடத்தில் நிஷ்டை யுடையராயிருப்பதற்காட்டிலும் பாகவதர்கள் பக்கலில் நிஷ்டை யுடையராயிருப்பதே சிறந்தது என்று ஸகலசாஸ்த்ர ஸாரப்பொருள் ஒன்றுண்டு, அதனை வெளியிடும் பாசுரம் இது. கருமங்களுக்கிணங்க ஸம்ஸாரியாக்கவும் அருளுக்கிணங்க ஸம்ஸார நிவ்ருத்தியைப் பண்ணித் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளவுமு வல்ல ஸ்வதந்த்ரனான ஈச்வரனைப் பற்றுகை ஸம்ஸாரபந்தத்திற்கும் மோக்ஷப்ராதிக்கும் பொதுவாயிருக்கும். அங்ஙனன்றியே பாகவதரைப் பற்றுகை ஸம்ஸாரபந்தத்திற்கு ஒருகாலும் ஹேதுவாகாதே மோக்ஷப்ராப்திக்கே உறுப்பா யிருக்குமென்பது “***“ (எம்பெருமானைப் பற்றினவர்களுக்குப் பேற்றில் ஸந்தேஹமுண்டு, பாகவதர்களைப் பற்றினவர்கள் ஸந்தேஹப் படாமல் மார்வில் கைவைத்து உறங்கலாம்) இத்யாதி ப்ரமாண ஸித்தம். சத்ருக்நாழ்வான், ஸ்ரீமதுரகவிகள், வடுகநம்பி போல்வார் இவ்வர்த்தத்திற்கு உதாஹரண பூதர்கள்.

“மாறாயதானவனை“ என்று தொடங்கி “ஏத்தியிருப்பாரை“ என்கிறவரையில் பகவத் பக்தர்களைச் சொன்னபடி. தனக்கு உயிர்நிலையான ப்ரஹ்லாதாழ்வானுக்குப் பகைவனான இரணியனைத் தன் பகைவனாகப் பாவித்து அவனது மார்பைக் கூர்மையான நகங்களாலே இருபிளவாகப் பிளந்த நரசிங்கமூர்த்தியை “அந்தியம்போதி லரியுருவாகி யரியை யழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதும்“ என்றுகொண்டு வாழ்த்தியிருக்கும் பகவத் பக்தர்களை, - மற்றவரைச் சாத்தி யிருப்பார் தவம் வெல்லும் – பகவத் பக்தர்களின் நிஷ்டையை பாகவத பக்தர்களின் நிஷ்டை தோற்கடித்துவிடும். எனவே, பகவத் பக்தியிற் காட்டிலும் பாகவத பக்தியே சிறந்தது என்றதாயிற்று. இங்கு விரித்துரைக்க வேண்டுமவற்றை யெல்லாம் ஸ்ரீவசநபூஷணஸாரத்தில் சரமப்ரகரணத்திற் பரக்கச் சொன்னோம். அங்கே கண்டு கொள்க.

இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில் “பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக்கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற (அச்சுப்பிரதி களிற்காணும்) வாக்கியம் பிழையுடையது, “புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் எட்டுப்பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது. “பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது. “ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம், “ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.

English Translation

The ferocious man-lion that fore apart the mighty chest of the Asura Hiranya with sharp nails is out lord.  The worship that his devotees offer easily wins over the praise offered to other gods.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain