nalaeram_logo.jpg
(2397)

நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்

தலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர்

போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய

தேராழி யால்மறைத்தா ரால்.

பதவுரை

அந்நான்று

-

பாரதயுத்தம் நடந்த அக்காலத்து

தேவர் தலை மன்னர் தாமே

-

தேவாதிதேவனான தானே

மாற்று ஆக

-

எதிரியாயிருந்து கொண்டு

பல மன்னர்

-

பல அரசர்கள்

போர்

-

யுத்தக்களத்தில்

மாள

-

மடிந்து

வெம் கதிரோன்

-

ஸூர்யன்

மாய

-

(அகாலத்தில்) அஸ்தமிக்கும்படி யாகவும்

பொழில் மறைய

-

பூமண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும்

தேர் ஆழியால்

-

சக்கராயுதத்தினால்

மறைத்தாரால் (ஸூர்யனை) மறைத்த பெருமானாலே

என் நெஞ்சம்

-

எனது (சஞ்சமான) மனமானது

நிலை மன்னும்

-

சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அலைபாய்ந்து கொண்டிருந்த என் மனமானது எம்பெருமான் ஆச்ரிதர்க்காக உழைக்குந் தன்மைகளைக் கேட்டறிந்தவாறே “இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு அடிமைப் பட்டவர்களாக நாம் அமைந்துவிட்டோமான பின்பு இனி நமக்கு யாது கவலை? என்று தேறி நிலைபெற்று விட்டதென்கிறார். “அந்நான்று...தேராழியால் மறைத்தாரால் என்னெஞ்சம் நிலைமன்னும்“ என்று அந்வயம்.

“தேவர் தலைமன்னர்“ என்றது எம்பெருமானை, “***“ என்றும் “அயர்வறும்மரர்களதிபதி“ என்றும் சொல்லுகிறபடியே.

தாமே மாற்றாக – துர்யோதநாதிகளை எம்பெருமான் பாண்டவர்களின் சத்துருக்களென்று நினைத்திலன், தன்னுடைய சத்துருக்களென்றே நினைத்தான், இது எங்ஙனே தெரிகின்றதென்னில், தாது எழுந்தருளினபோது விதுரர் திருமாளிகையிலே அமுது செய்துபோக, அஃதறிந்த துர்யோதனன் “***“ (பிஷ்மாசார்யரையும் த்ரோணாசார்யரையும் என்னையும் விட்டுப் பள்ளிச்சோற்றை ஏன் உண்டாய்?) என்று கண்ணபிரானைக் கேட்க, அதற்கு உத்தரமருளிச் செய்வது காண்மின் – “***“ (சத்ருவின் சோற்றையும் உண்ணலாகாது, சத்ருவுக்குச் சோறும் இடலாகாது, எனது உயிர்நிலையாகிய பாண்டவர்களை “நீ த்வேஷிப்பதனால் எனக்கு சத்துருவே, ஆனதுபற்றியே உன்னிடம் நான் உண்ணவரவில்லை) என்றான். ஆகவே, ஆச்ரிதர்களுடைய பகைவர்களைத் தன்னுடைய பகைவர்களாகவே கொள்ளும் எம்பெருனுடைய அபிஸந்தியை அறிந்து இங்கு “தாமே மாற்றாக“ என்றருளிச் செய்தாரென்க. * மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றம் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்ததன் சிலைவளையத் திண்டோமேல் முன்னின்றதுபற்றிப் “பலமன்னர் போர்மாள“ என்றருளிச் செய்யப்பட்டது.

வெங்கதிரோன்மாயப் பொழில்மறையத் தேராழியால் மறைத்த வரலாறு வருமாறு – அர்ஜுநன் பதின்மூன்றாநாட் போரில் தன் மகனான அபிமந்யுவைக் கொன்ற ஜயத்ரதனை மறுநாள் ஸூர்யன் அஸ்தமிப்பதற்கு முன்னே கொல்வதாகப் பல பிரதிஜ்ஞைகள் செய்ய, அது நிறைவேறக் கூடாதென்று அந்த ஜயத்ரதனை எதிரிகளால் உட்புக முடியாதபடியாக வ்யூஹத்திலே நிறுத்திக் காப்பாற்றிக் கொண்டிருந்த ராஜாக்கள் முன்னே, ஸ்ரீகிருஷ்ணன் பகல் நாழிகை முப்பதும் சென்றதாகத் தோன்றும்படி, நினைவறிந்து காரியஞ்செய்யும் தனது சக்கராயுதத்தைக் கொண்டு ஸூர்யனை மறைக்க, “ஆதித்யன் அஸ்தமித்தான், இனிநமக்குப் பிராணபயமில்லை, அர்ஜுநன் பிரதிஜ்ஞை செய்திருக்கிறபடியே அக்நி ப்ரவேசம் செய்யப்போவதைக் கண்டு களிப்போம்“ என்றெண்ணி ஜயத்ரதன் வெளிப்பட்டு நின்றவளவிலே கண்ணபிரான் ஸுதர்ச நாழ்வானை மீட்டுக்கொள்ள, ஸூர்யன் இன்னும் அஸ்தமிக்கவில்லையென்று உணர்ந்துகொண்ட அர்ஜுநன் உடனே தனது அம்பைக் கொண்டு அந்த ஜயத்ரதனைத் தலையறுத்துவிட்டனன் என்பதாம்.

கோடிஸூர்ய ப்ரகாசான திருவாழியைக் கொண்டு ஸூர்யனை மறைத்தல் எங்ஙனம் கூடுமெனின், ஸூர்யனுடைய ஒளி கண்ணாலே காணலாம்படி அளவுபட்டிருத்தலால் இருட்டைப் போக்கும், அப்படியல்லாமல் திருச்சக்கரத்தினொளி நேராகக் கண்கொண்டு பார்க்கமுடியாதபடி அளவுபடாத மிக்க பேரொளியைக் கொண்டுள்ளதனால் பளபளத்துக் கண்களை இருளப் பண்ணுமெனச் சமாதானங் கூறுவர் பெரியார், மற்றுஞ் சில வகையான ஸமாதானங்களும் கூறுவாருளர்.

English Translation

When the Lord of gods himself fought a war against the mighty kings of yore, killing them in battle, he hid the Sun with a chariot wheel.  My hear finds refuge of him.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain