nalaeram_logo.jpg
(2396)

பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்

மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில்

மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்

நீர்க்கண்டன் கண்ட நிலை.

பதவுரை

பல தேவர்

-

பல தேவர்கள்

எந்த

-

துதிக்கும்படியாக

பழ

-

பூமியை

கடந்தான்

-

அளந்தவனான ஸர்வேச்வரனுடைய

பாதம்

-

திருவடிகளிலே

மலர்

-

புஷ்பங்களை

ஏற இட்டு

-

ஸமர்ப்பித்து

இறைஞ்சி

-

வணங்கி

வாழ்த்த வலர் ஆகில்

-

மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால்,

நீற்கண்டன் கண்ட நிலை

-

நீலகண்டனாகிய ருத்ரனிடத்தில் காணத்தக்க நிலைமை

மாற்கண்டன் கண்ட வகையே

-

மார்க்கண்டேயன் ப்ரத்யக்ஷமாகக் கண்டவிதமாகவே

வரும் கண்டீர்

-

ஸித்திக்குங்கிடீர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ம்ருகண்டு மஹர்ஷியன் புத்திரனான மார்க்கண்டேயன் குமாரப்பருவத்தில் வீதியில் விளையாட நிற்கையில் அவ்விளையாட்டைக் கண்டுகொண்டு மாதா பிதாக்களும் மகிழ்ந்திருக்கும் போது “இப்பிள்ளைக்கு மரணகாலம் குறுகிவிட்டது“ என்று அசரீரி வாக்கியம் ஒன்று திடீரென்று செவியில் விழப்பெற்ற அத்தாய்தந்தையர் மிகவும் பரிதாபங்கொண்டு நிற்க, அதைக்கண்ட மார்க்கண்டேயன் “நீங்கள் சிறிதும் வருந்த வேண்டா, ம்ருத்யுவை நானே பரிஹரித்துக் கொள்ளக்கடவேன்“ என்று சொல்லி அன்று முதலாகப் பரமசிவனை யடிபணிந்து வருகையில், சிவபிரான் “இவனோ நம்மை ரக்ஷகனாக நினைத்து நம்மைத் தொழுதுகொண்டு நம் கை பார்த்திருக்கின்றான், ஸ்ரீமந்நாராயணனே ஸரர்வரக்ஷகன் என்கிற பரமார்த்தம் இவனுக்குத் தெரியவில்லை போலும், அதனை இவனுக்கு நாம் தெரிவிப்பது நன்று, தெரிவியா தொழிந்தோமாகில் அநியாயமாய் இவன் மோசம் போய்விடுவான், மருத்யுவைத் தப்பவேணுமென்று நம்மை வழிபடுகின்ற இவனுக்கு நாமே ஒரு புகலிடம் காட்டிக் கொடுத்தோமாக வேணும்“ என்றெண்ணி “மார்க்கண்டேயா! என்னை நீ ரக்ஷகனாக நினைத்துத் தொழுகின்றாய், நானும் நீயும் ஷமந்நாராயணனுடைய ரகஷ்யவர்க்கத்தில் சேர்ந்தவர்களேயன்றி உனக்கு நான் ரக்ஷகனாக ப்ராப்தனல்லேன், ஸர்வரக்ஷகன் அந்த ஸ்ரீமந்நாராயணனொருவனே, ஆனபின்பு அவனையே அழ பணிந்து நீ அபிமதம் பெறக்கடவாய்“ என்று சொல்லி அவனை எம்பெருமான் திருவடிகளிலே கொண்டு நிறுத்தி “இவனை அநுக்ரஹித்தருளவேணும்“ என்று பிரார்த்தித்து, பகவத்கிருபையாலே நீண்ட ஆயுளைப்பெறுவித்தான் பரமசிவன் – என்பது மார்க்கண்டேயனுடைய வரலாற்றின் சுருக்கம். 1. “புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை, என்றும் 2. “மார்க்கண்டேயனும் கரியே“ என்றும், 3. “கண்டுந்தெளிந்துங் கற்றார் கண்ணற்களான்றி யாவரோ, வண்டுண் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள், இண்டைச்சடைமுடி யீசனுடன் கொண்டு உசாச்செல்லக், கொண்டங்குத் தன்னொடுங் கொண்டுடன் சென்றதுணர்ந்துமே“ என்றும் திருவாய்மொழியில் நம்மாழ்வாரும், 4. “மன்னு நான் மறை மாமுனி பெற்றமைந்தனை மதியாத வெங்கூற்றந் தன்னையஞசி, நின்சரணெனச் சரணாய்த் தகவில் காலைனையுக முனிந்தொழியாப், பின்னையென்றும் நின் திருவடி பிரியாவண்ண மெண்ணிய பொருள்“ என்று பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரும் அருளிச்செய்தவை காண்க.

சில புராணங்களில் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது பரமசிவனே மார்க்கண்டேயனுக்கு அபயமளித்த்தாகக் காணப்படினும் மஹாபாரத்தில் ஆரண்யபர்வத்தில் நூற்றுத் தொண்ணூற்றிரண்டா மத்யாயத்தில் மார்க்கண்டேயன் தானே தருமபுத்திரரை நோக்கிச் சொல்லுமளவில் ஸ்ரீமந்நாராயணனுடைய வார்த்தைகளை அநுவதிக்குமிடத்து “***“ என்றுள்ள ச்லோகத்தினால் இவன் ஸ்ரீமந்நாராயணனைச் சரணம் புகுந்தவனென்பது நன்கு விளங்கும். ஸ்ரீபாகவதத்திலும் பன்னிரண்டாம் ஸ்கந்தத்தில் எட்டாமத்யாயத்தில் – “***“ (கக) என்றது காண்க.

மார்க்கண்டேயனுடைய வரலாறு இப்படிப்பட்டதென்று தெரிந்தபின் இனி இப்பாசுரத்தின் கருத்தை ஆராய்மின் – “உலகளந்த பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களைப் பணிமாறிப் பல்லாண்டு பாட வல்லரானால் நீற்கண்டன் கண்டநிலை மாற்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்“ என்றால் இதற்குக் கருத்து யாதெனில், கேண்மின். மார்க்கண்டேயன் பரமசிவனிடத்தில் (ஸ்ரீவைகுண்ட ப்ராப்தியாகிற) மோக்ஷத்தை விரும்பிப் பணிந்தானல்லன், வாழ்நாளையே விரும்பிப்பணிந்தான், அந்தப் பலனையும் அளிக்க யோக்யதையற்றவனாய் அந்த ருத்ரன் ஸ்ரீமந்நாராயணன் பக்கலில் அவனை ஆச்ரயிப்பது அப்பெருமான் மூலமாக ரக்ஷணம் செய்வித்தான், ஆகவே, “தேவதாந்தரங்கள் பரம்பரயாக ஒருகால் ரக்ஷகங்களாகுமேயன்றி ஸாக்ஷத்தாக ரக்ஷகங்களாக மாட்டா, ஸ்ரீமந்நாராயணனொருவனே ஸாகஷாத் ரக்ஷகனாவான்“ என்று மார்க்கண்டேயன் கைகண்டறிந்த பரமார்த்தம் தேறினதாகும் என்கை. நேராக எம்பெருமானையே நீங்கள் ஆராதிக்கும் பக்ஷத்தில் மார்கண்டேயன் ச்ரம்பட்டுத் தெரிந்துவிட்டதாகத் தேறும் என்றவாறு நீண்டகண்டனாகிய சிவனிடத்துக் காணக் கூடிய நிலைமை (அதாவது-இவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று தெரிந்துகொள்ளக்கூடிய ஸ்திதி), அதை மார்க்கண்டேயன் பண்டு தெரிந்துகொண்டான், நீங்களும் அதை இப்போது தெரிந்து கொண்டீர்களென்னலாம் – ஸாகஷாத்தாக் நீங்கள் எம்பெருமானையே ஆராதிப்பீர்களாகில், என விரிக்க.

இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் “மார்க்கண்டேயன் மஹாதேவனை மோகஷார்த்தமாகச் சென்று ஆச்ரயிக்க, மோக்ஷப்ரதன் ஈச்வரனேயென்று காட்டுமிதுவே உள்ளதென்று ருத்ரன் காட்டக்கண்டு இதுவே இவனுக்குள்ள தென்று மார்க்கண்டேயன் கண்டவகையே ஸித்திக்கும், அவ்யவ ஹிதமாக ஸர்வேச்வரன் திருவடிகளை ஆச்ரயிக்க வல்லராகில் மார்க்கண்டேயன் கண்டவகையே ஸித்திக்கும்,“ என்றிருக்கும் ஸ்ரீஸூக்திகளில் உள்ள மோக்ஷ சப்தம் பரமபதாநாநுபரூபமான மோக்ஷத்தைக் குறிப்பதன்று, “***“ என்று ஒரு தேசவிசேஷத்தைக் குறிக்கொண்டு கீதையிற் சொன்ன கட்டளையிலே, இந்த தேசத்திலேயே ம்ருத்யு இல்லாமையாகிற மோக்ஷத்தைச் சொல்லுகிறதென்று கொள்க. மார்க்கண்டேயன் தான் சிரஞ்ஜீவியா யிருக்கவேணுமென்று உபாஸித்தவனாக இதிஹாஸபுராணங்களிற் வுறப்படுகிறானேயன்றி, புரமபுருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தை விரும்பின்னாகக் வுறப்பட்டிலன். பெரிய திருமொழியில் (5-8-6) “மன்னு நான் மறை மாமுனி பெற்ற மைந்தனை..... பின்னையென்றும் நின்திருவடி பிரியாவண்ண மெண்ணிய பொருள்“ என்றவிடத்து வியாக்கியானத்திலும் இது ஸ்பஷ்டம். அந்த வியாக்கியானமருளிய பெரியவாச்சான் பிள்ளை தாமே இவ்விடத்தில் “மார்க்கண்டேயன் மஹாதேவனை மோக்ஷார்த்தமாகச் சென்று ஆச்ரியிக்க“ என்றது ருத்ரனைப் பற்றின பரிஹாஸோக்தியாக விடுக்கும். “ இவன் ஒரு மஹா தேவனாம், இவனிடத்தில் ஒரு பெரிய மோக்ஷத்தை விரும்பி ஒருவன் வந்து பணிந்தானாம், அப்பப்ப! இந்த மோக்ஷம் நம்மாலாகாது என்று வேற்றுவாசல் காட்டினானாம்“ என்று பரிஹஸித்துச் சொன்னவாறு.

நீற்கண்டன் – “நீலம்“ என்ற வடசொல் “நீல்“ என்று சிதைந்து நீற்கண்டனென்றாயிற்று. “நீலார் கண்டத்தம்மான்“ என்ற திருவாய்மொழி காண்க. அன்றியே, “நீர்க்கண்டன்“ என இடையின ரகரப்படாங்கொள்ளில், விஷஜலத்தைக் கழுத்திலே கொண்டவனென்றதாகும். மார்க்கண்டன் – “மார்க்கண்டேயன்“ என்ற வடசொற்சிதைவு.

இப்பாட்டின் பின்னடிகட்கு மற்றும் பலவகையாகக் கருத்துக்கூற இடமுண்டு. வல்லார்வாய்க் கேட்டுணர்க.

English Translation

If you wish to learn the truth, follow the sure path of Markandeya, who worshipped with flowers and praise the Earth-straddling feet of the Lord praise by the gods.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain