nalaeram_logo.jpg
(2389)

இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற

சிலைகொண்ட செங்கண்மால் சேரா - குலைகொண்ட

ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த

கூரம்பன் அல்லால் குறை.

பதவுரை

என் நெஞ்சை

-

எனது மனமே!

ஈசனை வென்ற

-

ருத்ரனை ஜயித்த

சிலைகொண்ட

-

வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட

செம் கண் மால்

-

புண்டரீ காக்ஷனாகிய தன்னை

சேரா

-

பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த

குலை கொண்ட ஈரைந் தலையான்

-

கொத்துப்போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய

இலங்கையை

-

லங்காபுரியை

ஈடு அழித்த

-

சீர்கெடுத்த

கூர் அம்பன் அல்லால்

-

கூர்மைதாங்கிய அம்புகளையுடையவனான இராமபிரானைத் தவிர்த்து

குறை

-

விரும்பத்தகுந்த

மற்ற துணை

-

வேறொரு துணைவன்

இலை

-

நமக்கு இல்லை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விரோதி நிரஸநமே இயற்கையாகவுள்ள எம்பெருமானைத் தவிர்த்து வேறொருவரும் துணையாகவல்லாரில்லையென்று தம் திருவுள்ளத்துக்கு உபதேசிக்கிறாரிதில்.

ஈசனைவென்ற சிலைகொண்ட செங்கண்மால் – ஒரு ஸமயத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு ருத்ரனை ஒரு சிலையால் வென்றான், அந்த வில் பரசுராமனிடத்தில் வந்து சேர்ந்திருந்தது; அதனை ஸ்ரீராமவதாரத்தில் மிதிலையில் நின்று மீண்டெழுந்தருளும்போது அப்பரசுராமனிடத்திற் கொண்டான், (இவ்வரலாற்றை விரித்துரைப்போம்) முன்னொரு காலத்தில் தேவசில்பியான விச்வகர்மாவினால் நிருமிக்கப்பட்ட சிறந்த இரண்டு விற்களும் ஒன்றைச் சிவபிரானும் மற்றொன்றைத் திருமாலும் எடுத்துக் கொண்டார்கள். பின்பு ஒரு காலத்தில் அவ்விற்களுள் சிறந்தது இன்னதென்பதை அறிய விரும்பிய தேவர்களின் வேண்டுகோளால் பிரமன் அரனுக்கும் அரிக்கும் போரை மூட்டிவிட, அங்ஙனமே அவர்கள் அவ்விற்களைக்கொண்டு போர்புரிகையில் சிவபிரானது வில் சிறிது முறிபட்டது, அவ்வாறு இற்றவில்லைச் சிவபிரான் ஜநககுலத்துத் தேவராதனென்னும் அரசனிடம் கொடுத்திட, அது வம்ச பரம்பரையாம் ஜநகமஹாராஜனளவும் வந்தது, இது நிற்க, இறாத வலிய வில்லை விஷ்ணு ரிசீகமுனிவனிடம் கொடுத்துச்செல்ல, அது அவன் குமாரனான ஜமதக்நியினிடத்தும் அவன் குமாரனான பரசுராமனிடத்தும் பரம்பரையாய் வந்தது. முற்கூறிய சிவதநுஸ்ஸை ஸீதைக்குக் கந்யாசுல்கமாக ஜநகன் வைத்திருந்தான், இராமபிரான் அந்த வில்லை முறித்துத் தன் பேராற்றலை விளங்கச்செய்து பிராட்டியை மணந்துகொண்டு மிதிலாபுரியினின்றும் புறப்பட்டு அயோத்திக்கு வரும்போது வழியிடையே செருக்கிவந்த பரசுராமனது கையிலிருந்த விஷ்ணுதநுஸ்ஸை வாங்கி எளிதில் வளைத்து நாணேற்றிக் கணைதொடுத்து “இவ்வம்புக்கு இலக்குஎன்?“ என்று வினாவ, பரசுராமன் அதற்கு இலக்காகத் தனத்து தபோபலம் முழுவதையுங் கொடுக்க, அவன் க்ஷத்ரியை வம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமாயிருத்தல் பற்றி அவனைக் கொல்லாமல் அவனது தவத்தைக் கவர்ந்த மாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளினன் என்ற வரலாறுகள் இதிஹாஸப்ரஸித்தம். ஆகவே, இப்பாட்டில் “ஈசனை வென்ற சிலை“ என்றது பரசுராமன் கையிலிருந்த விஷ்ணுதநுஸ்ஸை. அதனைக் கொண்ட செங்கண்மால் – ஸ்ரீராமபிரான். அப்படிப்பட்ட தன்னை யடிபணிந்து வாழமாட்டாத இராவணனைக் குடும்பத்தோடு கொன்றொழித்த எம்பெருமானைத் தவிர்த்து நமக்குத் துணையாகவல்லார் ஆருமில்லை என்றாராயிற்று.

“ஈசனைவென்ற“ என்ற அடைமொழியைச் சிலைக்கு ஆக்காமல் செங்கண்மாலுக்கு ஆக்கி, பாணாஸுரயுத்தம் முதலியவற்றில் ருத்ரனை ஜயித்த செங்கண்மால் என்னவுமாம்.

இப்பாட்டில் “கூரம்பனல்லால்“ என்றவிடத்துப் பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் – “எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் அசேதநமான க்ரியா கலாபத்தினுடைய கூர்மையை விச்வஸித்திருப்பர்கள், இவர்கள் சக்ரவர்த்தித்திரு மகன் அம்பின் கூர்மையைத் தஞ்சமாக நினைத்திருப்பர்கள்“ என்று அச்சுப்பிரதிகளிற் காணப்படும் வாக்கியம் பிழை. ஓலை ஸ்ரீ கொசங்களை ஆராய்ந்ததில் “எம்பெருமானார் ஸ்ரீபாத்ததை ஆச்ரயித்தவர்கள் அசேதநமான க்ரியா கலாபத்தினுடைய கூர்மையை விச்வஸித்திரர்கள், சக்ரவர்த்தித் திருமகன் அம்பின் கூர்மையே யாயிற்றுத் தஞ்சமாக நினைத்திருப்பது.“ என்று காகிறது. இதுவே பொருத்தமுடைத்து. ஸ்ரீ வைஷ்ணவர்கள் பெற்றுக்கு எம்பெருமான் கைபார்த்திருக்கு மத்தனையொழிய மூக்கைப்பிடித்தல் முதலிய ஸாதநாநுஷ்டாநங்களினால் பேறுபெற நினையார்களென்கை.

English Translation

O Heart! The red-eyed adorable lord Rama took the vishnu-bow from Parasurama, killed the unrelenting fen-headed king and razed the city of Lanka with his fire-arrows. Other than him, we have not constant companion.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain