nalaeram_logo.jpg
(2388)

இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்

நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக

நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே

நீயென்னை யன்றி யிலை.

பதவுரை

நாரணனே

-

நாராயணனே!,

இன்று ஆக

-

இனறைக்காகவுமாம்

நாளையே ஆக

-

நாளைக்காகவுமாம்

இனி சிறிது நின்று ஆக

-

இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்)

நின் அருள்

-

உன்னுடைய கிருபை

என் பாலதே

-

என்னையே விஷயமாக வுடையதாகும்

நன்று ஆக

-

நிச்சயமாக

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்

-

நான் உன்னை யொழியப் புகலில்லாதவன் காண்

நீ

-

நீயும்

என்னை அன்றி இலை

-

என்னையொழிய வேறொரு நகஷ்யனை உடையை யல்லைகாண்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வீர்! மதாந்தரஸ்தர்களை யெல்லாம் ஈனவரேயென்று இழித்துச் சொன்னீர், உமக்குண்டான ஏற்றம் யாது? என்று எம்பெருமான் கேட்க, என்னுடைய ஏற்றம் உனக்குத் தெரியாதோ பிரானே! “உன்னையொழிய எனக்குச் செல்லாது, என்னையொழிய உனக்குச் செல்லாது“ என்னும்படியான உறவை யுணர்ந்து ஸர்வகாலமும் உன்னுடைய திருவருளுக்குப் பரிபூர்ண பாத்ரமாயிருக்கப்பெற்ற வென்னுடைய ஏற்றம் அறியாயோ? என்கிறார் போலும்.

பெருமானே! உன்னுடைய திருவருள் என்மேல் ஏறிப்பாய வேண்டியதேயன்றி வேறொருவயும் விஷயமாக வுடையதன்று, உன்னுடைய அருளுக்கு நானே இலக்கு, என்னுடைய வேண்டுகோளுக்கு உன்னருளே இலக்கு. இன்றைக்கோ நாளைக்கோ, அன்றி இன்னமும் சிலகாலம் கடந்தபின்போ என்றைக்கானாலும் உன்னருள் என்மேல் ஏறிப்பாய்ந்தே தீரக்கடவது என்கிற அத்யவஸாயன் எனக்குத் திடமாகவுள்ளது.

இங்ஙனே நான் சொல்லுவதற்கு யாதுகாரணமென்கிறாயோ? சொல்லுகேன் கேளாய், நான் உன்னையன்றியிலேன் நீ யென்னை யன்றியிலே – “நம்முடைய அருளை யாரிடத்து உபயோகிக்கலாம்!“ என்று நீ தயநீயரைத் தேடியிராநின்றாய், “நமக்கு எம்பெருமான் அருள்புரிவானோ? என்று நான் உன் தயையைத் தேடியிராநின்றேன், உன்னையொழிய எனக்குப் புகலில்லை, என்னையொழிய உனக்குப் புகலிலே. ஆகவே, நின்னருள் என்பாலதே. “*******” என்ற ஸ்தோத்ர்ரத்ந ச்லோகம் இவ்விடத்திற்குச் சார்பாக அநுஸந்திக்க வுரியது. “ நிகரின்றி நின்ற என்னீசதைக்கு நின்னருளின்கணன்றிப் புகலொன்றுமில்லை அருட்குமஃதே புகல்” என்ற அமுதனார் பாசுரமும் காண்க.

பின்னடிகட்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்; நாராயணனே! உன்னை நிரூபிக்கவேண்டில் என்னையிட்டு நிரூபிக்கவேண்டும், என்னை நிருபிக்க வேண்டும், என்னை நிரூபிக்கவேண்டில் உன்னையிட்டு நிரூபிக்கவேண்டும், (அதாவது) “நாராயணன்“ என்றால் நாரங்களுக்கு அயநம் என்றபடி, நாரபதார்த்தங்களில் தாம் சேர்ந்தவராகையாலே தம்மையிட்டு நாராயணனை நிரூபிக்க வேண்டியதாகிறது. தம்மை நிரூபிக்கவேண்டுமானால் பகவச் சேஷத்வத்தையிட்டே அடியானென்று நிரூபிக்கவேண்டியிருப்பதால் நாராயணனையிட்டுத் தம்மை நிரூபிக்க வேண்டியதாகிறது. சேஷசேஷிகளுடைய நிரூபணம் பரஸ்பர ஸாபேக்ஷமாகவே யிருக்குமன்றோ. ஆகவே, சேஷியான உன்னையொழிய எனக்கு ஸத்தையில்லை, சேஷபூதனான என்னையொழிய உனக்கு ஸத்தையில்லை என்றதாயிற்று என்று கொள்ளலாம்.

English Translation

O Lord Narayana! You may grace me today, or tomorrow, or some time later, but your grace is definitely coming.  I cannot be without you, Nor can you be without me.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain