nalaeram_logo.jpg
(2386)

தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,

வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, - உகத்தில்

ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,

அருநான்கு மானாய் அறி.

பதவுரை

தொகுத வரத்தன் ஆய்

-

(தவஞ்செய்து) ஸம்பாதிக்கப் பட்ட வரங்களை யுடையனாய்

தோலாதான்

-

ஒருவரிடத்திலும் தோல்வியடையாதவனாயிருந்த இரணியனுடைய

மார்வம்

-

மார்பை

வகிர்த்த

-

இருபிளவாகப் பிளந்தொழித்த

வளை உகிர்

-

வளைந்த நகங்களைக் கொண்ட

தோள்

-

திருக்கைகளை யுடைய

மாலே

-

ஸர்வேச்வரனே!,

நீ

-

நீ,

உகத்தில்

-

பிரளயகாலத்தில்

உள் வாங்கி

-

(உலகங்களை யெல்லாம்) உபஸம்ஹரித்து உள்ளேயிட்டு வைத்து

ஒரு நான்று

-

(மீண்டும் ஸ்ருஷ்டி காலமாகிற) ஒரு மையத்தில்

உயர்த்தி

-

(அவ்வுலகங்களை யெல்லாம்) வெளியிட்டு வளரச்செய்து

நீயே

-

இப்படிப்பட்ட நீயே

நான்கும்

-

(தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால்வகைப் பொருள்களிலும்

அரு ஆனாய்

-

அந்தராத்மாவானாய்

அறி

-

இதனை அறிவாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “வேறொருவரில்லாமை நின்றானை“ என்றும் “எப்பொருட்கும் சொல்லானை“ என்றும் சொன்னதை விவரிக்கிறது இப்பாட்டு. அனைத்துலகும் அனைத்துயிரும் அமைத்தளித்துத் துடைப்பது நீ நினைத்த விளையாட்டு, கருதரிய வுயிர்க் குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையும் ஒரு தனி நாயகம் நீ, ஆகவே உனக்குச் சொல்லும் ஏற்றமெல்லாம் பொருந்தும் பிரானே! என்றாராயிற்று.

தொகுத்தவரத்தனாய்த் தோலாதான் – தேவன் மனிதர் முதலிய எவ்வுயிர்களாலும் பகலிலும் இரவிலும் வானத்திலும் பூமியிலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் அஸ்த்ர சாஸ்த்ரங்களொன்றினாலும் ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் தனக்கு மரண முண்டாகாதபடி இரணியன் பல வரங்கள் பெற்று ஆங்காங்கு வெற்றியே பெற்றுவந்தானென்க. ப்ரஹ்மஸ்ருஷ்டிக்கு உட்பட்ட எந்த பிராணியினாலும் சாகாதபடி அவன் பெற்ற வரம் பழுது படாமைக்காக நரங்கலந்த சிங்கமாய் ப்ரஹ்மஸ்ருஷ்டியினுட்படாமல் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு தோன்றின்னென்பதும் – அஸ்தர சஸ்த்ரங்களொன்றினாலும் சாகாதபடியும் பெற்றவரம் வீண்போகாமே நகங்களினால் கீண்டு கொன்றன்னென்பதும், பகலிலும் இரவிலும் சாகாதபடி. பெற்ற வரம் பொய்படாதபடி அப்பகலிரவுகளின் ஸந்தியாகிய மாலைப்பொழுதிலே கொன்றனனென்பதும், பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்ற வரம். மெய்யாம்படி தன் மடிமீது வைத்துக் கொன்றன னென்பதும், வீட்டின் அகத்திலும் புறத்திலும் இறவாதிருக்கும்படி பெற்ற வரத்திற்கு விரோதமின்றி வாசற்படிமீது வைத்துக்கொண்டு கொன்றன னென்பதும் இவைபோல்வன பல விசேஷங்களாம். “சுரரசுரர் முனிவர் நரர் கையில் பாரில் சுடர்வானில் பகலிரவில் உள்புறம்பில், பெருபடையில் தான் சாகா விரண்யன்றன்னைப் பிரகலாதன் தர்க்கித்துண்டென்ற தூணில், நர ஹரியாய்ப் பொழுதுபுகுநேரந்தன்னில் நாடியுதித்துயர் வாசற்படி மீதேறி, இரணியனைத் தொடைமிசைவைத் துகிரினாலே இருபிளவாக்கினை யரியே எம்பிரானே!“ என்றார் பின்னோரும்.

உகத்தில் – யுகர்ந்த காலத்தில் என்றபடி. ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கு நீயே கடவனாயிருக்கின்றாய் என்பது பின்னடி களிற் சொல்லப்படுகின்றது. “உயர்த்தி“ என்பதனால் ஸ்ருஷ்டி கர்த்ருத்வமும், “உள்வாங்கி“ என்பதனால் ஸம்ஹார கர்த்ருத்வமும் “நான்கும் அரு ஆனாய்“ என்பதனால் ஸ்திதிகர்த்ருத்வமும் வுறப்பட்டனவாயின. “அரூபி“ என்னும் வடசொல் “அரு“ என்று கிடக்கிறது. 1. இராமடமூட்டுவாரைப்போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும்“ என்கிறபடியே, தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால்வகைப் பொருள்களிலும் பதிந்திருந்து அவற்றின் ஸத்தைக்கு நிர்வாஹகளாயிருக்கின்றாய் என்றவாறு.

English Translation

O Lord who destroyed the boon-intoxicated Hiranya's mighty chest with curved nails and strong arms! You destroy everything, then klyou creat everything, and become the four yogas as well, I know it!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain