nalaeram_logo.jpg
(2384)

பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,

ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத்

தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்

அருபொருளை யானறிந்த வாறு?

பதவுரை

(எம்பெருமான்)

பாலில்

-

திருப்பாற்கடலில்

கிடந்ததுவும்

-

சயனித்தருளு மழகையும்

அரங்கம்

-

திருவரங்கம் பெரிய கோயிலில்

மேயதுவும்

-

பொருந்தி வாழ்வதையும்

பண்டு

-

முன்பொருகால்

ஆலில்

-

ஆலந்தளிரில்

துயின்றதுவும்

-

பள்ளிகொண்ட விதத்தையும்

ஆர் அறிவார்

-

யார் அறியவல்லார்?

ஞாலத்து ஒரு பொருளை

-

இப்பூமியில் வந்தவதரித்த விலக்ஷண புருஷனாயும்

வானவர்தம் மெய்பொருளை

-

நித்யஸூரிகளுக்குப் பிரத்யக்ஷமாக அநுபவிக்கத் தகுந்த வஸ்து வாயும்

அப்பில் அரு பொருளை

-

(ஸலகலத்துக்கும் காரணமாக முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட) ஜலதத்வத்தினுள் கண்வளரும் அரும்பொருளாயுமிருக்கின்ற எம்பெருமானை

யான் அறிந்த ஆறு

-

அடியேன் அறிந்த விதம் என்ன!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்பாட்டில் “ஆருமறியாரவன் பெருமை“ என்றதை விவரிக்கிறாரிதில். அப்பெருமான் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட விதத்தையும் திருவரங்கத்தில் வந்து சேர்ந்த விதத்தையும் ஆலந்தளிரில் பள்ளிகொண்ட விதத்தையும் ஆர் அறிவார்? என்கிற விதற்குக் கருத்து யாதெனில்;  தன் தாளுந்தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பித் திருப்பாற்கடலில் சயனித்தருளுமழகிலே நான் ஈடுபட்டிருக்கும் வண்ணமாக ஈடுபட்டிருப்பார் ஆருமில்லை, “பாலாழி நீகிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்“ என்றாற்போலே அக்கிடையில் வியாமோஹித் திருப்பவன் நானொருவனே, திருவரங்கம் பெரிய கோயிலில் உபய காவேரீ மத்யத்தில் “என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே“ என்னும்படியே பரம போக்யமாகவும் அத்யந்த ஸூலபமாகவும் ஸந்நிதிபண்ணி ஸேவைஸாதித்தருளுந் திறத்தில் ஈடுபட்டு “இஃது என்ன போக்யதை!  இஃது என்ன ஸெளலப்யம்” என்று அக்குணங்களை வாய்வெருவுகின்றவன் நானொருவனே, உலகங்களைப் பிரளய வெள்ளம் கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்துநோக்கி ஒரு சிற்றாலந்தளிரின் மேல் திருக்கண்வளர்ந்தருளின அகடிதகடநா ஸாமர்த்தியத்தைப் பாராட்டிப் பேசுவார் ஆரேனுமுண்டோ? அந்த சக்தி விசேஷத்தை மெச்சுகிறவன் நானொருவனே – என்பதாம்.

ஞாலத்து ஒரு பொருளை – கார்யரூபமான ஸகலப்ரபஞ்சங்களுக்கும் “***“ என்கிறபடியே துணையற்ற காரணவஸ்துவாயிருப்பவன் என்று முரைக்கலாம்.

வானவர்தம் மெய்ப்பொருளை – தனது திருமேனியை நித்யஸூரிகளுக்குப் பூர்ணாநுபவம் பண்ணக் கொடுத்தருள்பவனென்றவாறு. அப்பிலருபொருளை – வடமொழியில் “அப்“ என்பது ஜல வாசகம் “***“ என்னும் வட்சொல் தமிழில் “அப்பு“ என்றாயிற்றென்றலுமுண்டு. 1. “***“ என்றும் 2. “நன்மைப்பனல்பண்ணி“ என்றும் சொல்லுகிறபடியே முதன் முதலில் ஜலதத்துவத்தை ஸ்ருஷ்டித்து அதிலே கண்வளர்ந்து ஒப்பற்ற காரணப்பொருளாயிருப்பவன் என்கை. ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை அவனது நிர்ஹேதுக கிருபையினால் நான் அறிந்தவிதம் ஆச்சரியம்! என்று தலைக்கட்டினவாறு அன்றியே, யானறிந்தவாறு – யானறிந்த வண்ணமாக, ஆர் அறிவார் -, என்று கீழாடே கூட்டி ஏகவாக்கியமாக யோஜிக்கவுமாம்.

English Translation

The Lord's reclining in the ocean,  his coming to stayin Srirangam, his sleeping on a fig leaf, -all these he reveals to the gods, of himself as the substance of water, Narayana. The way I have understood this, who else can?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain