nalaeram_logo.jpg
(2382)

நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்

தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான்முகமாய்

அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,

சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து.

பதவுரை

நாராயணன்

-

பரமபுருஷனானவன்

நான்முகனை

-

பிரமனை

படைத்தான்

-

ஸ்ருஷ்டித்தான்

நான்முகனும்

-

அந்தப் பரமனும்

தான்

-

தானே

முகம் ஆய்

-

முக்கியனாயிருந்து

சங்கரனை

-

சிவனை

படைத்தான்

-

ஸ்ருஷ்டித்தான்

ஆழ்பொருளை

-

(ஆகவே, முழுமுதற் கடவுள் ஸ்ரீமந்நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை

யான்

-

அடியேன்

முகம் ஆய்

-

முக்கியமாக

அந்தாதி மேல் இட்டு

-

இத்திருவந்தாதி மூலமாக

அறிவித்தேன்

-

உங்கட்கு அறிவிக்கத்தொடங்குகின்றேன்

நீர்

-

நீங்கள்

தேர்ந்து

-

ஆராய்ந்து

சிந்தாமல் கொள்மின்

-

(இவ்வர்த்தத்தைக் குறையற நெஞ்சில் தேக்கிக் கொள்ளுங்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இவ்வாழ்வாருடைய காலத்தில் தேவதாந்தர பரத்துவம் கொள்ளும் மாதாந்தரஸ்தர்கள் மலிந்திருந்ததனால் அவர்களைத் திருத்தி வழிப்படுத்த வேண்டுவது அவசியமாயமைந்தது, ஆகவே, தொடங்கும்போதே ஸ்ரீமந்நாராயண பரத்வத்தை அழுத்தமாகப் பேசுகின்றார், இப்பிரபந்தம் தலைக்கட்டுமிடத்தும் “இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்குந் தெய்வம், இனியறிந்தேனெம் பெருமானுன்னை” என்று தலைக்கட்டுவராதலாலும், இடையிலும் பலபல பாசுரங்களினால் தேவதாந்தரங்களின் அபூர்த்தியையும் பரமபுருஷனுடைய பூர்த்தியையுமே பேசுவராதலாலும் இப்பிரபந்தம் பெரும்பாலும் பரதத்வஸ்தாபநத்தில் நோக்குடைத்தாயிருக்கும்.

நாராயணன் நான்முகனைப் படைத்தான் – காரியப் பொருள்கள் யாவும் பெயருமுருவமும் பகுத்தறிய வொண்ணாதபடி தன் பக்கலிலெலயடைந்து தானொருவனுமே காரணபூதனாய்க்கொண்டு உளனாய்நின்ற நாராயணன் “***..” என்கிற தன் ஸங்கல்பத்தாலே ஸமஷ்டிபதார்த்தங்களை ஸ்ருஷ்டித்து, நான்முகக் கடவுளைக் கொண்டு வ்யஷ்டிபதார்த்தங்களை ஸ்ருஷ்டிக்கவேண்டி,

1. ”உய்யவுலகு படைக்கவேண்டி உந்தியில் தோன்றினாய் நான் முகனை” என்கிறபடியே தனது திருநாபிக் கமலத்தில் நான்முகனைப் படைத்தருளினன் என்கை.

பிரமன் ஸ்ருஷ்டிகள் செய்தது வேதங்களைக்கொண்டே யாதலாலும், அந்த வேதங்கள் நால்வகைப்பட்டிருத்தலாலும், அந்நால் வகை வேதங்களையும் உச்சரிப்பதற்காகவே பிரமன் நான்கு முகங்களை யுடையவனாகப் படைக்கப்பட்டன்னாதலாலும், இங்குப் “பிரமனை” என்னாது ‘நான்முகனை’ என்றார்.

நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் – ஸ்ரீமந்நாராயணனால் பிறப்பிக்கப்பட்ட அந்த நான்முகன் தானே தலைவனாய் நின்று ஸம்ஹாரக் கடவுளாகிய சங்கரனைப் படைத்தான். புத்தரின் விநயமற்று வழிகெட நடந்தால் அவனைத் தந்தை விலங்கிட்டு வைப்பது வழக்கம், அதுபோல, எம்பெருமானை ஆராதித்து உய்வு பெறுதற்கென்றே படைக்கப்பட்ட இவ்வுலகம் வழி கெட நடந்து அநர்த்தத்தை விளைத்துக்கொள்ளாமாகில் விலங்கிட்டு வைப்பதுபோன்ற கரணகளேபரவிநாசம் செய்து தீரவேண்டுவதொன்றாதலால் அதற்காகச் சங்கரனைப் படைத்தன்னென்க. சங்கரன் என்றசொல் (‘***.’ என்னும் ஸம்ஸ்க்ருத  வ்யுத்பத்தியால்) நன்மை செய்பவன் எனப் பொருள்படும், மேன்மேலும் கேடுகளை விளைத்துக்கொள்ள வொண்ணாதபடி கரணகளே பரங்களை ஒடித்துவைப்பதாகிற ஸம்ஹாரம் நன்மையேயாதலால் இதுதோன்ற இங்கு ‘உருத்திரனை’ என்னாது ‘சங்கரனை’ என்றார்.

ஆகவிப்படி ஸ்ரீமந்நாராயணனொருவனே உத்பாதகன் (உண்டாக்குபவன்) என்றும், ப்ரஹ்மருத்ராதிகள் உத்பாத்யர்களே (உண்டாக்கப்படுபவர்கள்) என்றும் உண்மைப் பொருளுணர்ந்தால் ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனைத் தவிர்த்துப் பிறிதொன்றையும் பரதெய்வமாகக் கொண்டாட வழியில்லை, ஆயினும் இவ்வுலகத்தவர் இவ்வுண்மைப் பொருளுணரப் பெறாமையாலே நசித்துப் போகிறார்கள்; இதனை நாம் கல்வெட்டும் செப்புவெட்டும் போலே பிரபந்தப்படுத்திப் பகர்வோமாயின் பலரும் தெளியலாகுமென்று திருவுள்ளம்பற்றி, ‘இவ்வாழ்பொருளைத் திருவந்தாதிப் பிரபந்த முகத்தால் உங்கட்கு அறிவிக்கின்றேன், ஸம்ஸாரத்தின் பொல்லாங்கையும் நான் சொல்லுகிற அர்த்தத்தின் அருமை பெருமைகளையும் ஆராய்ந்து, இவை நெஞ்சில் நின்றும் நழுவி மங்கிப் போகாதபடியாக உள்ளத்தே தேக்கிக்கொள்ளுங்கள்’ என்று துடைதட்டி யுணர்த்துகிறார் பின்னடிகளில்.

இவ்வாழ்வார் ஆழ்பொருளை அறிவிக்கத் தொடங்கும்போதே “அறிவித்தேனாழ்பொருளை“ என்று இறந்தகாலத்தாற் கூறினது – தம்மைக்கொண்டு அறிவிக்க விரும்பிய எம்பெருமான் ஸத்யஸங்கல்பனாகையாலும், எம்பெருமானுடைய பரத்துவத்தைப்பற்றிப் பாசுரங்கள் பேசித் தலைக்கட்டியே தீரும்படியான தம் உறுதியினாலும் இப்பிரபந்தம் தலைக்கட்டியாய்விட்டதாக நினைத்தென்க. இதனைத் தமிழர், தெளிவினால் எதிர்காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி என்பர்.

இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையிலே – “ப்ரஹ்மாதிகள் ஸம்ஸாரத்தை ப்ரவர்த்திப்பிக்க ப்ரதாநரானாற்போலே தந்நிவ்ருத்திக்கு ப்ரதாநனானேன் நானென்கிறார்“ என்றருளிச்செய்துள்ள ஸ்ரீஸூக்தியின் சீர்மை வாசா மகோசரம், இதன் கருத்தாவது – நாராயணன் நான்முகனைப் படைத்துவைத்தான், அந்த நான்முகனும் மற்றுள்ள ஸ்ருஷ்டிகளை பண்ணிப் போனான், ஆக அவ்விருவரும் இப்படி ஸம்ஸாரத்தை வளரச்செய்து வைத்தார்களேயன்றி அடியறுக்கப் பார்த்தாரல்லர், நான் அங்ஙனன்றியே உங்களுடைய ஸம்ஸாரம் வேரறும்படியாக ஆழ்பொருளிச் செய்வதாக.

English Translation

Narayana created the four-faced Brahma. Brahma created siva from himself. I dole out this deep truth through my Andadi song.  Take it without spilling.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain