nalaeram_logo.jpg
(3913)

வேய்மரு தோளிணை மெலியு மாலோ! மெலிவுமென் தனிமையும் யாதும் நோக்கா

காமரு குயில்களும் கூவு மாலோ! கணமயில் அவைகலந்தாலு மாலோ

ஆமரு வினநிரை மேய்க்க நீபோக்கு ஒருபக லாயிர மூழி யாலோ தாமரைக்

கண்கள்கொண் டீர்தி யாலோ! தகவிலை தகவிலையே நீ கண்ணா.

பதவுரை

வேய் மருதோள் இணை

-

வேய் போன்ற தோள்களிரண்டும்

கணம் மயில் அவை கலந்து ஆலும் ஆலோ

-

திரளான மயில்கள் கலந்து கேகாரவம் செய்யா நின்றன அந்தோ!

ஆல்ஓ

-

அந்தோ(அவ்வளவு மன்றிக்கே)

மெலியும் பிரிவாற்றாமையினால் தளர்ந்தன;

-

மருவு ஆ நிரை இனம் மேய்க்களுன்னோடு மருவுகின்ற பசுக்கூட்டங்களை மேய்க்கைக்காக

என் மெலிவும் என் தனிமையும்

-

என்னுடல் மெலிவையும் பிரிவாற்றாத என் தனிமையையும்

நீ போக்கு ஒரு பகல்

-

நீ (காட்டுக்குப்) போகிற ஒரு பகலானது

யாதும் நோக்கா

-

சிறிதும் நோக்காமல்

ஆயிரம் ஊழி ஆலோ

-

ஆயிரம் யுகமாகக் கழியா நின்றதந்

காமரு குயில்களும் கூவும்

-

அழகிய குயில்களும் கூவுகின்றன;                  ;

தாமரை கண்கள் கொண்டு ஈர்தி

-

தாமரை போன்ற திருக்கண்களாலே நோக்கி நோவுபடுத்துகின்றாய்

ஆலோ

-

அநதத் தொனியும் அஸஹ்யமாயிரா நின்ற தந்தேர்

கண்ணா நீ தகவு இலை தகவு இலை

-

கண்ணா! நீ கருணையுடையை யல்லை, திண்ணம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * * .... காலைப் பொழுதானவாறே கண்ணபிரானைப் பிரிய நேர்கின்றதேனென்கிற வருத்தம் செல்லா நிற்க அதற்கு மேலே குயில்மயில் முதலானவைகளின் பாடுதலும் ஆடுதலும் கேட்டும் கண்டும் இன்னமும் வருத்தம் வளர்ந்து செல்லுகிறபடியைச் சொல்லிப் புலம்புகிறாள். தொடங்கும் போதே வேய்மருதோளிணை மெலியுமாலோ என்கிறவிது ’ வீடு நெருப்புப் பற்றி யெரியா நின்றதே!’ என்கிறாப் போல் உள்ளது. கண்ணபிரானை இடைவிடாது அணைத்துக் கொண்டிருக்கத் தக்க தோள்கள் அவருடைய பிரிவை நினைத்து ’ஐயோ! நாம் நம் இரையை இழந்திருக்க வேண்டிவருகிறதே!’ என்று மெலிகிற படியால் அதனைச் சொல்லி வருந்துகிறாளாயிற்று. இப்போது கண்ணபிரான் பிரித்தானல்லன்; கூடவேதானிருக்கிறான்; ஆனாலும் அடுத்த க்ஷணத்திலே பிரிவு விளையப் போகிறது திண்ணமாதலால் அப்பிரிவு இப்போதே விளைந்திட்டதாக எண்ணி அலற்றுகிறபடி.

என் மெலிவும் என்தனிமையும் யாதும் நோக்கா காமருகுயில்களும் கூவுமாலோ.... உலகத்தாருடைய மெலிவும் தனிமையும் போலன்றே என்னுடைய மெலிவும் தனிமையும்; அவர்கள் தங்களுடைய அபிமதவிஷயங்களைப் பிரிந்த பிறகு தனிமையை நினைத்து மெலிவர்கள்; நான் அப்படியோ? தலைவன் கூடியிருக்கச் செய்தேயும் பிரிவை நினைத்துத் தனிமையை நிச்சயித்து மெலிகிறவளன்றோ நான்; இப்படிப் பட்ட என்னுடைய மெலிவையும் தனிமையையும் சிறிதும் கணிசியாமல், காமரு குயில்களும் கூவுமாலோ. அழகிய குயில்களும் பஞ்சமராகத்தைப் பன்னிப்பன்னி என்னுயிரைக் கொள்ளை கொள்கின்றனவே யென்க.  ’காமம் தரு’ என்ற இரண்டு சொற்கள் ஒன்று சேர்ந்து காமரு என விகாரப்பட்டதென்க. பரஸ்பரம் காமரஸத்தை யநுபவிக்கிற என்றபடி; காண்பார்க்கு ஆசையை விளைவிக்கிற என்றபடியுமாம். கணமயிலவை கலந்து ஆலுமாலோ.... கணமயிலென்றது கூட்டமான மயிலென்றபடி. இணை பிரியாமல் கூடியிருக்கின்ற மயில்கள் தன் கண்ணுக்கு விஷம் போலே யிருக்கையிலே முகத்தை மாறவைத்து அவை என்று பரோக்ஷம் போலே சொல்லுகிறாள்; கண் கொண்டு காணப்போகாதபடி ஒரு திரளாக இருந்து மயில்கள கூத்தாடுகின்றமை ஸஹிக்கக் கூடிய துக்கமாக இலலையே! என்றபடி.

கண்ணபிரான் அருகேயிருக்கும் போதே இப்படி அலற்றுகையாலேஅவன் அம்மா! நான் கூடவேயிருக்கச் செய்தே ஏனிப்படி வருந்துகிறாய்? நான் கூடவே யிருப்பது உனக்குத் தெரியவில்லையா? பிரித்தேனாக நினைத்தாயோ?வீணாக ப்ரமிக்க வேண்டர் வருந்தாதே என்று சொல்ல; ஆமருவீன நிரைமேய்க்க நீ போக்கொரு பகல் ஆயிரமுழியாலோ; என்கிறாள் பிரானே! இப்போது நீ கூடியிருக்கிறாயென்பதை அறிந்திலேனல்லேன்; அடுத்த க்ஷணத்திலே பிரியவிருக்கிற நீ இப்போது கூடியிருப்பது ஸம்ச்லேஷமாக எண்ணத்தகுமோ? ஸ்வர்க்கேபி பாதபீதஸ்ய க்ஷயிஷணோர் நாஸ்தி நிவ்ருதி:* என்பதறியாயோ நீ; நீ பசு மேய்க்கப் போவது தவிரப் போகிறாயோ? அந்தணர்கள் ஸ்நாநஸந்தயாவந்தனங்கள் தவிர்ந்தாலும் நீ பசு மேய்ப்பது தவிர மாட்டாயர் போனால் விரைந்து வருமவனோ நீ? ’ ஒரு பகல் தானே நமக்கு பிரிவு என்பாய் நீ; உன் கருத்தாலே ஒரு பகல்; அது எங்கள் கருத்தாலே ஆயிர மூழியாயன்றோ இருக்கிறது; *  த்ருடி யுகாயதே த்வாமபச்யதாம்* என்று காணிருப்பது... என்று சொல்ல; அந்தோ! நாம் பிரியாதிருக்கச் செய்தேயும் பிரிவை நிச்சயித்து இங்ஙனே யலற்றுகிறார்களே, இப்படியுமொரு ப்ரேமஸ்வபாவமுண்டோ என்று வியந்து கண்ணாலே குளிர நோக்கினான்  கண்ணபிரான்; அந்த நோக்கும் பாதகமாக, தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ! என்கிறான். கண்ணா!  என்னை நீ கண்ணாலே உற்று நோக்கிக் கொலை செய்வதிற் காட்டிலும் பிரிந்து போவதே நன்று காண் என்கிறாள் போலும். இப்படிச் சொல்லச் செய்தேயும் அவன் நோக்கை மாறவைத்திலனாக, தகவிலை தகவிலையே நீ கண்ணா என்கிறாள். * பெண்ணின் வருத்தமறியாத பெருமானாயிருந்தாயே; * வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே! என்னும்படியிருந்தாயே; * தருமமறியா’ குறும்பனாயிருந்தாயே; இப்படியும் படுகொலையடிப்பாயோ வென்கிறாள்.

English Translation

Oh, my slender bamboo-like arms droop, as the love-bird koels call!  Oh, these flocking peacocks dance, heedless of my loneliness!  Oh, Krishna! You took your cows to graze, you are heartless, alas!  You kill us with your lotus eyes.  The day stretches into eternity

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain