nalaeram_logo.jpg

(3909)

கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை

இடவகை கொண்டதென்பர் எழிலணி யனந்தபுரம்

படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண

நடமினோ நமர்களுள்ளீர்! நாமுமக் கறியச்சொன்னோம்.

பதவுரை

எழில் அணி அனந்தபுரம்

-

அழகணிந்த திருவனந்தபுரம் திருப்பதி

படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண

-

படங்களையுடைய வனத்தாழ்வான் மீது பள்ளி கொண்டருளும் அனந்த பத்மநாபனுடைய திருவடிகளை ஸேவிக்க நடவுங்கள்

காமனை பயந்த காளை இடவகை கொண்டது என்பர்

-

மன்மதனுக்கும் உத்பாதகனான பெருமாள் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட தலமென்பார்கள்;

நடமின் நாம் உமக்கு அறிய சொன்னோம்

-

(இதனை) நாம் உமக்குத் தெரிவித்தோம்; (இங்ஙனே செய்தால்)

நமர்கள் உள்ளீர் நம்மோடொரு ஸம்பந்தம் பெற்றவர்களாயிருப்பவர்களே!கடு வினை களையல் ஆகும்

-

கொடிய பாவங்களை எல்லாம் போக்கப் பெறலாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * ..... திருவனந்தபுரத்திலே திருக்கண் வளர்ந்தருளுகிற ஸர்வேச்வரனுடைய திருவடிகளைக் காண நடவுங்கோளென்று ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நியமித்தருளுகிறார். கடுவினை களையலாகு மென்று முந்துற முன்னமே பலனைச் சொல்லுகிறார் ப்ரரோசநார்த்தமாக. எழிலணியனந்தபுரத்தில் படமுடையரவில் பள்ளி பயின்றவன் பாதங் காண நடந்தால் (அந்த உத்யோகத்தளவிலே) கடுவினை களையலாகும்... நம்மால் போக்கவரிய பாபங்களை எல்லாம் போக்கலாம். காமனைப் பயந்த காளை என்று வடிவழகிலேற்றஞ் சொல்லுகிறது. காளை... நித்யயுவா.

பின்னடிகளில் அநுஸந்திக்கு மோர் ஐதிஹ்யமுண்டு; ஆளவந்தார்க்கு ஸகலார்த்தங்களையும் உபதேசித்தருளின மணக்கால் நம்பி, யோகரஹஸ்யம் மாத்திரம் குருகை காவலப்பனிடத்திலே பெறக்கடவீர் என்று ஸாதித்திருந்தபடியாலே ஒரு யோகரஹஸ்யத்தை அருளிச் செய்ய வேணுமென்று வேண்ட, அவரும் ஒரு நாளிட்டுக் கொடுத்து அந்த நாளிலே வந்து உபதேசம் பெறும்படி சொல்லிப் போக விட, ஆளவந்தாரும் நம்பெருமாள் ஸன்னிதிக் கெழுந்தருள, அந்த ஸமயம் திருவத்யநோத்ஸவ ஸமயமாக இருக்கையில் அரையர் கோஷ்டியிலே அந்வயித்திருக்க,* கடுசினைகளையலாகு என்கிற இப்பாட்டளவிலே * எழிலணியனந்தபுரம் படமுடையரசிற் பள்ளி பயின்றவன் பாதங்காண நடமினோ நமர்களுள்ளீர் நாமுமக்கறியச் சொன்னோம்*  என்பதை அரையர் ஆளவந்தார் திருமுகத்தைப் பார்த்து ஊன்றி யுறுத்திப்பாட, ஆளவந்தாரும் இதை கேட்டுக் ’ஆழ்வாருடைய தமர்களிலே நாம் அந்வயிக்க வேண்டில் திருவனந்தபுரஞ் சென்று ஸேவித்து வர ப்ராப்தம்’ என்று சொல்லிக்கொண்டே அப்போதே நம்பெருமாளிடம் விடைபெற்றுப் பயமாகித் திருவனந்தபுரத்திற் எழுந்தருளி அனந்த பத்மநாபனை மங்களாசாஸனம் செய்து அங்கே வாழ்ந்து போருகையில், முன்பு குருகை காவலப்பன் யோகரஹஸ்யோபதேசத்திற்காக நாளிட்டுக் கொடுத்திருந்த சிறுமுறியை எடுத்துப் பார்க்க நேர்ந்து அதுவே நாளாக இருந்தபடியாலே துணுக்கென்று அலமந்து ’ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே’ என்று சோகித் தெழுந்தருளியிருந்தார்.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி:... “ திருவத்யயனம் பாடாநிற்க இத்தைக் கேட்டருளி ஆளவந்தார் ’ நமக்கு ஆழ்வாரோடே ஒரு ஸம்பந்த முண்டாகவேணும்’ என்று அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு எழுந்தருளினார்.’’

English Translation

The beautiful radiant Tiruvanatapura-Nagar, they say, is adopted by the father of karma himself, to undo our karmas.  Get set to see the Lord's feet reclining on the hooded couch.  O Devotees among us, this is my last call

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain