nalaeram_logo.jpg

(3902)

கெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள நாளும்

கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்

விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்

தடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே.

பதவுரை

கேசவா என்ன இடர் ஆய எல்லாம் கெடும்

-

கேசவ நாமத்தைச் சொன்ன வளவில் துன்பமானவை எல்லாம் தொலைந்துபோம்

விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான்

-

நச்சரவினனை மேல் விரும்பிப் பள்ளி கொள்ளுமவன் வர்த்திக்கிற

நாளும் கொடுவினை செய்யும்

-

நிரந்தரமாகக் கொடுமைகளைச் செய்ய நிற்கிற

சுரும்பு அலற்றும் தடம் உடை வயல்

-

வண்டுகள் ஆரவாரிக்கின்ற தடாகங்கள் நிறைந்த கழன்கிளையுடைய

கூற்றின் தமர்களும் குறுககில்லார்

-

யமபடர்களும் அணுகமாட்டாது ஓடிப்போவர்கள்; (ஆன பின்பு)

அனந்தபுரம் நகர்

-

திருவனந்தபுரமாகிற திவ்ய தேசத்தை

இன்றே புகுதும்

-

இன்றே போய்ப் புகுவோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * *...... ப்ராப்யமான திருவனந்தபுரத்திலே சென்று சேருகைக்கு இடையூறுகள் பல உண்டே; அவையெல்லாம் திருநாமஸங்கீர்த்தனம் பண்ணின வளவிலேயே தொலையும்; அங்கே புக வாருங்கோள் என்று அநுகூலரையழைக்கிறார். கேசவாவெள்ள இடராய வெல்லாம் கெடும்... கேசவா வென்று மூன்றெழுத்தைச் சொன்ன வளவிலே இடரென்று பேர் பெற்றவையெயல்லாம் கெடும். * மேருமந்தர மாத்ரோபி ராசி, பாபஸ்ய கடாமண கேசவம் வைத்யமாஸாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி* என்ற ப்ரமாணம் இங்கு அநுஸந்திக்கதாகும். ’கேசவன்’ என்னுந் திருநாமத்திற்குப் பல பொருள்களுண்டானாலும் கம்ஸனது ஏவுதலால் தன்னை நலியக் குதிரை வடிவு கொண்டு திருவாய்ப்பாடியிலே வந்து கேசி என்னுமஸுரனை வதஞ் செய்தவனென்று பொருள் கொள்ளுதல் இங்கு ப்ரகரணத்திற்றுச் சேரும். “அவன் ஒரு விரோதியைப் போக்கினபடியைச் சொல்ல, விரோதி என்று பேர்பெற்றவை எல்லாம் நசிக்கும்’’ என்பது ஈடு. ப்ராரப்த கருமங்கள் ஸஞ்சித கருமங்கள் என்று பாகுபாடுற்றவை எல்லாம் கெடுமென்பது தோன்ற “இடராய எல்லாம்’’ எனப்பட்டதென்ப.

நாளுங் கொடுவினை செய்யுங கூற்றின் தமர்களும் குறுககில்லார்..... நமன் தமராலுமாராயப்பட்டறியாரென்றபடி. எல்லாவிடரும் கெடுமென்ற போதே நரக வேதனைகளும் கெடுமென்று சொல்லிற்றாகத் தேறாதோ? * கூற்றின் தமர்களுங் குறுககில்லாரென்று தனிப்படச் சொல்லவேணுமோ என்று சங்கை தோன்றும்; பொதுவாகச் சொல்லுமதில் சேர்ந்தவற்றையும் தனிப்படச் சொல்லுவதானது ஒரு விசேஷத்தைக் காட்டி நிற்கும்; மிக்க கொடிய நரக வேதனைகளை அனுபவித்தே போக்க வேணுமென்று நினைக்க வேண்டர் கேசவா வென்ற வளவிலே அவையும் கெடுமென்றதாயிற்று. * நரதே பச்யமாநஸ்து யமேக பர்பாஷதா கிம் த்வயா நார்ச்சிதோ தேவ: கேசவ: க்லேச நாசந* என்ற ப்ரமாண வசனத்தை அடியொற்றி இரண்டாமடி அவதர்த்ததென்க. நரக வேதனைகளை அனுபவிக்க அங்கே சென்று யமபபடர்களால் பசனம் பண்ணப்படும் போது யமன் கேட்கிறானாம். ’ஸமஸ்த க்லேசங்களையும் நாசஞ்செய்யவல்ல கேசவனை நீ அர்ச்சிக்கவில்லையோ- என்று. அதனால் கேசவனை  அர்ச்சித்தவர்களுக்கு நரக வேதனை நேராதென்பது காட்டப்பட்டதாம். கேசவ நாமத்தை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் கேசவனை அர்ச்சித்தாகுமென்று ஆழ்வார் திருவுள்ளம்.

பின்னடிகளால் திருவனந்தபுரத்தின் பரம யோக்யதையைத் தொவித்து அத் திருப்பதியிலே சென்று புக நியமித்தருளுகிறார். முன்னடிகளிலே சொல்லப்பட்ட அதிகாரிகளுக்கு ப்ராப்யஸ்தானம் திருவனந்தபுரமென்றதாயிற்று. எம்பெபருமானது படுக்கையயமைந்த திருவனந்தாழ்வார்க்கு வடமுடமையை ஒரு சிறப்பாகச் சொல்ல வேணுமோவெனில்; * ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு* என்ற திருமழிசைப் பிரான் பாசுரத்தின் படியே அஸ்தாநே கலங்கி (விரோதி வர்க்கங்கள் எம் பெருமாளுக்குத் தீங்கு செய்ய நெருங்கி வந்ததாக ப்ரமித்து) விஷாக்னியைக் கக்குகை பர்வின் மிகுதியைக் காட்டுமதாகையாலே சொல்லிற்றென்க.

English Translation

All our obstacles will vanish on uttering the name Kesava; the wicked Yama's messengers too shall not come near, So let us go anon to Tiruvanatapura-Nagar, Surrounded by happy fields, where the Lord reclines on his venomous serpent couch

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain