nalaeram_logo.jpg
(2312)

இவையவன் கோயில் இரணியன தாகம்,

அவைசெய் தரியுருவ மானான், - செவிதெரியா

நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்

பாகத்தான் பாற்கடலு ளான்.

பதவுரை

இரணியனது

-

ஹிரண்யாஸுரனுடைய

ஆகம்

-

மார்பை

அவைசெய்து

-

இருபிஸவாக்க

அரி உருவம் ஆனான்

-

நரசிங்கமாகத் தோன்றினவனும்

செவி தெரியா நாகத்தான்

-

கண்ணையே செவியாகவுடையனாகையாலே தனிப்பட செவி தெரியாமலிருக்கிற ஆதிசேஷனைப் படுக்கையாக வுடையவனும்

நால் வேதத்து உள்ளான்

-

நான்கு வேதங்களுக்கும் பொருளாயிருப்பனும்

நறவு என்றான் பாகத்தான்

-

தேன்போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனான ருத்ரனைத் திருமேனியின் ஒரு பாகத்திலே உடையவனும்

பாற்கடலுளான்

-

திருப்பாற்கடலில் பள்ளி கொள்பவனுமான

அவன்

-

அப்பெருமானுடைய

கோயில் இவை

-

கோயில் கீழ்ப்பாட்டில் சொன்ன திருப்பதிகளாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்த திவ்யஸ்தலங்கள் ஆழ்வார் திருவுள்ளத்தைவிட்டுப் பேராமல் அநுவர்த்திக்கவே, பின்னையும் இவையவன் கோயில் என்கிறார். “கடல் குடந்தை வேங்கடம் என் சிந்தை நிறைவிசும்பு வாய்ந்தமறை பாடகம் அனந்தன்“ என்று கீழ்ப்பாட்டிற் சொன்னவற்றையே இங்கு ‘இவை‘ என்று சுட்டிக்காட்டினார்.

நரசிங்கவுருக்கொண்டு ஹிரண்யாஸுரனுடைய மார்பைப் பிளந்தவனும் சேஷசயனத்தில் திருக்கண் வளர்ந்தருள்பவனும் நான்கு தேங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவனும், அஹங்காரியான ருத்ரனுக்கும் திருமேனியில் இடங்கொடுத்து ஆதரிப்பவனும் திருப்பாற்கடலி லுள்ளபவனுமான எம்பெருமானுக்குக் கீழ்ப்பாட்டிற் சொன்ன தலங்கள் உகந்து வாழுமிடமாயிருக்கின்றன – என்றாராயிற்று.

அவை செய்தல் – இருபிளவாகச் செய்தல். செய்து – எச்சத்திரிபு, செய்ய என்க. அன்றியே, உருபு பிரித்துக்கூட்டி, ‘அரியுருவமாய் இரணியனதாகம் அவையெதான்‘ என்றும் யோஜிக்கலாம். சேவிதெரியா நாகத்தான் – பாம்புக்கு வடமொழியில் ‘சக்ஷுச்சரவஸ்‘ என்றும், தென்மொழியில் ‘கட்செவி‘ என்றும் பெயர் வழங்கும். கண்ணைக்கொண்டே காண்பதும் கேட்பதும் செய்தல் பாம்புஜாதியின் இயல்வாம், ஆகவே செவிகள் தனிப்படத்தெரியா. இங்கு இந்த விசேஷணம் திருவனந்தாழ்வானுக்கு ஏதுக்கு இட்டதென்னில், ஒரு இந்திரியத்தாலே பல இந்திரியங்களின் காரியங்களை நிர்வஹிப்பதுபோல, “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும் புணையாமணிவிளக்காம் பூம்பட்டாம் புலகுமணையாம் திருமாற்கரவு“ என்கிறபடியே ஒரு திருமேனியைக் கொண்டே பல கைங்கரியங்களும் செய்பவன் திருவனந்தாழ்வான் என்று காட்டுதற்கென்க.

நறவேற்றான் – ‘நறவு‘ என்று தேனுக்குப் பெயர், உவகையாகுபெயரால் கங்கையைச் சொல்லுகிறது. வேதத்தில் “***“ என்று எம்பெருமான் திருவடியில் தேன்வெள்ள மிருப்பதாகச் சொல்லியிருப்பது கங்கையைக் குறித்தே என்று நிர்வஹிப்பது முண்டாகையாலே இங்கு ‘நறவு‘ என்று சொல்லியிருப்பது கங்கையை என்னலாம், ஏற்றான் என்றது முடிமீது ஏற்றுக்கொண்டவன் என்றபடி. அன்றியே, ‘ஏறு என்று எருதுக்குப் பேராகையாலே என்றான் என்பதற்கு எருதை வாஹனமாகவுடையவன் என்றும் பொருளாகலாம். கங்கையும் எருதையுமுடையவன் என்க. கங்கையைத் தாங்குமவனாய் எருதால் தாங்கப்படுமவனாயிருப்பவன். இனி, நறவு என்று கள்ளுக்கும் பெயராதலால், கள்ளைக்குடிப்பவனும் எருதின்மேல் ஆதரிப்பவன் என்றும் பொருள் கூறுவர் “***“ என்ற வடசொல் பாகமெனத்திரிந்தது.

English Translation

Even Hiranya's house became his holy abode lwhen he come as a man-lion and fore his chest, He is the lord of the vedas, the lord reclining on a snake in the ocean, the Lord who bears the bull-rider Siva in his frame.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain