(2300)

அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று

தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத

சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,

முந்தையராய் நிற்பார்க்கு முன்.

 

பதவுரை

இருளாத சிந்தையர் ஆய்

-

அஜ்ஞானவிருள் சேராத நெஞ்சையுடையாய்க் கொண்டு

சே அடிக்கே

-

திருவடிகளுக்கு

செம் மலர் தூய்

-

நல்ல புஷ்பங்களை ஸமர்ப்பித்து

கை தொழுது

-

அஞ்ஜலிபண்ணி

முந்தையர் ஆய் நிற்பார்க்கு

-

‘நான் முன்னே நான் முன்னே‘ என்று நிற்கும் பக்தர்களுக்கு,

முன் அன்று

-

முன்பொருகாலத்தில்

தெருளாத பிள்ளை ஆய்

-

அறியாத சிறு குழந்தையாய்

ஆல் இலைமேல் சேர்ந்தான்

-

ஆலந்தளிரில் சயனித்த பெருமான்

அருளாது ஒழியுமே

-

கிருபைபண்ணாமற்போவனோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அஞ்சாதிருக்கவருள் என்று சொல்லிவிட்டால் தவறாமல் அருள்வனோவென்ன, ‘நம் அருளை எதிர்பார்ப்பார் ஆரேனுமுண்டோ? என்று நோக்கியிருக்கு மெம்பெருமான் அருள்செய்யா தொழியமாட்டான், அருள்செய்தே தீருவன், ஆனால் எல்லார்க்கும் அருள்செய்தால் ஸர்வமுக்தி ப்ரஸங்க முண்டாகி லீலாவிபூதியே அழிந்துபோக நேருமாகலால், இருளாத சிந்தையாய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது முந்தையராய் நிற்பார் எவரோ, அவர்க்கே அருள்செய்யக் கடமைப்பட்டிருக்கிற னெம்பெருமான் என்கிறார். உலகமெல்லாம் பிரளயத்தில் அழிவதாயிருக்கையில் அவற்றையெல்லாம் வாரியெடுத்து வயிற்றினுள்ளடக்கிச் சிறியதோ சாலந்தளிரிலே துயின்றவனாதலால் எம்பெருமானுக்கு அடியார்களைக் காத்தருள்வதில் ஸாமர்த்தியமும் உத்ஸாஹமும் குறையற்றதென்று காட்டுதற்காக ஆலிலைமேலன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் என்றார்.

இருளாத சிந்தையாய் – ரஜஸ்தமோ குணங்கள் கலசாமல் சுத்தஸாத்விகராய் என்கை. முந்தையர் – பகவத் கைங்கரியத்திற்கு முற்பட்டிருக்குமவர்கள்.

 

English Translation

The Lord who swallowed the seven worlds and slept as a child will never deny his grace, But those who come to him first, with a tranqull mind, strewing fresh flowers at his feet with folded hands, will receive his grace first.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain