(2299)

வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்

நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின் எஞ்சா

இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,

அஞ்சா திருக்க அருள்.

 

பதவுரை

வாமனன் ஆய்

-

வாமநரூபியாகி

மாவலி பால்

-

மஹாபலியினிடத்தில் (சென்று)

வா மொழிந்து

-

(மதுரமான சில) வாய்மொழிகளைச் சொல்லி

மூ அடி மண்

-

மூவடிநிலத்தை (இரந்து பெற்று)

அளந்து கொண்ட

-

அதை அளந்து கொண்ட

நெடு மாலே

-

ஸர்வேச்வரனே!

எஞசா

-

கருங்குதலின்றி

தாலிய

-

ஸர்வவ்யாபியான

நின் இணை அடிக்கே

-

உனது உபய பாதங்களுக்கே

ஏழ் பிறப்பும்

-

எல்லா பிறவிகளிலும்

ஆள் ஆகி

-

நான் ஆட்பட்டவனாகி

அஞ்சாது இருக்க

-

பயங்கெட்டிருக்கும் படி

நீ அருள்

-

நீ கிருபைபண்ணவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகளந்த பெருமானே! உன் திருவடிகளில் எனக்கு நித்யகைங்கர்யத்தைத் தந்தருளி உன்னுடைய அனுபவத்துக்கு இடையூறான ஸம்ஸாரபயத்தையும் மாற்றியருளவேணு மென்கிறார்.

‘நம்முடைய உடைமையை நாம் இழக்கலாகாது‘ என்கிற திருவுள்ளத்தினால் உலகங்களெயெல்லாம் அடிப்படுத்திக்கொண்டதுபோல உன்னுடைமையாகிய அடியேனையும் அடிப்படுத்திக்கொள்ளவேணு மென்கைக்காக இங்கு உலகளந்த சரிதையை எடுத்துக் கூறினரென்க. வாமநனுடைய மழலைச் சொற்களிலேயே மாவலி மதிமயங்கினனாதலால் அது தோன்ற ‘வாய்மொழிந்து‘ என்கிறார். இரண்டாமடியிலுள்ள ‘நீ‘ என்பது ஈற்றடியில் அந்வயிக்கக்கடவது. அஞ்சாதிருக்க – ‘நாளைக்கே‘ இந்த பகவத் கைங்கரியம் மாறிப்போய் ஸம்ஸார தாபத்ரயமே மேலிட்டு விடுமோ? என்று அஞ்சாதிருக்க.

 

English Translation

O! The good day when you came as a manikin, and begged Mabali for three strides of land, then measured the Earth! Grant that I may serve your feet through seven I cs and live without fear.  O , Towering Lord!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain