(2296)

பணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோத,

பணிந்த பணிமணிக ளாலே - அணிந்து,அங்

கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்

மனந்த னணைக்கிடக்கும் வந்து.

 

பதவுரை

பணிந்து உயர்ந்த

-

தாழ்ந்தும் எறியும் வீசுகின்றவையான

பௌவம் படுதிரைகள்

-

கடலிலுண்டான அலைகளானவை

மோத

-

நாலு பக்கமும் அடிக்க,

பணிந்த

-

(அத்திவலைகள் திருமேனியில் படாதபடி குடை பிடித்தாற்போலே) கவிந்திருக்கிற

பணம்

-

படங்களிலுண்டான

மணிகளாலே

-

மாணிக்கங்களினாலே

அணிந்த

-

அலங்கரிக்கப்பட்டிருக்கிற

அனந்தன்

-

திருவனந்தாழ்வானாகிற

அணை

-

திருப்பள்ளி மெத்தையிலே

கிடக்கும்

-

திருக்கண் வளர்ந்தருளாகிற

அம்மான்

-

ஸர்வேச்வரன் (அந்தப் படுக்கையிற் பொருந்தாதே)

அங்கு

-

அங்கு நின்றும்

வந்து புறப்பட்டுவந்து

அடியோன்தன்

-

அடியேனுடைய

மனம் அணை

-

மனமாகிற படுக்கையில்

கிடக்கும்

-

சயனித்திரா நின்றான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள்கைவிட்டு, நூற்பால் மனம்வைக்க நொய்விதாம்“ என்றருளிச் செய்த ஆழ்வாரைநோக்கி சாஸ்த்ரங்களில் மனம்வைத்து அவ்வழியால்தான் எம்பெருமான் படிகளை அறியவேணுமென்கிறீரே, நீர் அவ்விதமாகத்தான் அறிந்தீரோ? என்று சிலர் கேட்க, எம்பெருமானுடைய நிர்ஹேதுகமான விஷயீகாரத்திற்கு இலக்கானவர்கள் சாஸ்த்ரங்களில் ச்ரமப்படவேணுமோ? அவன் தானே ஒருவரை விஷயீகாரத்திற்கு திருவுள்ளம் பற்றினால் எல்லை கடந்த அன்பு கொண்டு அவன் செய்யும் காரியங்களைத் தடுப்பாருண்டோ? திருப்பாற்படலிலே பாமஸுகமாகக் கண்வளர்த்தருளுமவன் அதனை விட்டிட்டு என்னெஞ்சிலே வந்து கிடக்கிறானே, இது அவனுடைய நிர்ஹேதுக கிருபையினால் வந்த்தன்றோ? இங்ஙனமே அவன் நிர்ஹேதுகமாக விஷயீகரிக்க விரும்பப் பெறுமவர்களுக்கு யாதொரு சாஸ்த்ர பரிச்ரம்மும் வேண்டா, நான் பெற்ற பேறு அவர்களும் பெறுவர்கள் என்ற கருத்தையடக்கி இப்பாசுரமருளிச் செய்கிறார்.

கடலில் அலை வீசும்போது தாழ்ந்தும் வீசுவது இயல்பாதலால் ‘பணிந்துயர்ந்த எனப்பட்டது. “அணிந்தங்கு“ என்றவிடத்துத் தொகுத்தல் விகாரம். அணிந்த அங்கு என்று பிரிக்க. அனந்தன் – வடசொல்.

 

English Translation

He who reclines in the deep ocean of waves, on a called serpent with a thousand hoods and gem-red eyes. Has come to recline in my lowly tossing heart! What a wonder!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain