(2294)

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,

அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம்,

ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,

மாகாய மாய்நின்ற மாற்கு.

 

பதவுரை

பண்டு

-

முன்னொரு காலத்தில்,

உலகம் நீர் ஏற்று

-

பூமி தானம் வாங்கிக்கொண்டு

தாமரை படிவட்டம்

-

தாமரை மலர்ந்தாற் போலே வட்ட வடிவமாயிருக்கிற பூமியை

அடி வட்டத்தால் அளப்ப

-

திருவடியினால் அளப்பதற்காக

மா காயம் ஆய் நின்றமாற்கு

-

பெரிய திருமேனியாய் (த்ரிவிக்ரமனாய்) வளர்ந்து நின்ற எம்பெருமானுடைய,

நீண்ட முடி வட்டம்

-

நீண்ட திருவபிஷேகமானது

ஆகாயம் ஊடு அறுத்து

-

மேலுலகங்களின் வழியாகச் சென்று

அண்டம் போய் நீண்டதே

-

அண்ட கடாஹத்தளவாக வளர்ந்த்தே! இஃது என்ன ஆச்சரியம்!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “நன்கோதி நன்குணர்வார் –நாடோறும் பைங்கோத வண்ணன் படிகாண்பர்“ என்றாரே கீழ்ப்பாட்டில். எம்பெருமான்படியை இன்னவிதமாகக் காண்பரென்பதைக் காட்டவேண்டி இப்பாசுர்ருமளிச் செய்கிறார். இறந்த காலங்களில் நடந்த எம்பெருமானுடைய சரிதங்களெல்லாம் இன்று கண்ணெதிரே தோற்றுவதாக ஸாக்ஷாத்கரிப்பர்கள் என்று காட்டுகிறாரிப்பாட்டால்.

மாவலிபக்கல் மூவடிமண் நீரேற்றுப்பெற்று எம்பெருமான் பெரிய திருவுருவாகி உலகங்களை அளக்கும் போது அவனது திருமுடியானது மேலுலகங்களையெல்லாம் அதிக்ரமித்துச் சென்று அண்டங்களுக்கப்பால் விளங்கிற்று என்கிறார். இவ்விதமாகக் காண்பர்கள் என்றவாறு.

வட்டம் – மண்டலம், படிவட்டம் –பூமண்டலம். எம்பெருமானுடைய ஸுகுமாரமான திருவடிபட்ட விடமென்று பூமியைத் தாமரையாக உபசரித்துச் சொல்லுகிறார். இப்பூமண்டலம் பெரிய தாமரைப்பூ மலர்ந்தாற்போலே வட்டவடிவிருப்பது பற்றியுமாம். திருவடியும் பூமண்டலத்துக்குச் சமமாகப் பரவி நின்றமையால் “அடி வட்டம்“ எனப்பட்டது.

 

English Translation

The Yogic Lord in the yore accepted a gift of land, then grew and strode the Earth.  His crown ripped through space and extended beyond the universe.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain