nalaeram_logo.jpg
(2290)

கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,

மண்ணளந்த பாதமும் மற்றவையே,- எண்ணில்

கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்,

திருமா மணிவண்ணன் தேசு.

பதவுரை

கரு மாமுகில் வண்ணன்

-

கரிய பெரிய மேகம் போன்ற வடிவையுடையவனும்

கார் கடல் நீர் வண்ணன்

-

கரியகடல் நீரின் நிறம்போன்ற நிறமுடையவனும்

திரு மா மணி வண்ணன்

-

அழகிய நீலமணி போன்றவனுமான எம்பெருமானுடைய

தேசு

-

அழகை

எண்ணில்

-

ஆராய்ந்து நோக்குமளவில்,

கண்ணும்

-

திருக்கண்ணும்

கமலம்

-

தாமரைப்பூப்போன்றவை

கைத் தலமும்

-

திருக்கைத்தலங்களும்

கமலயே

-

அத்தாமரைப் பூப்போன்றவையே

மண் அளந்த பரதமும்

-

உலகளந்த திருவடிகளும்

அவையே

-

அத்தாமரைப் பூப்போன்றவையே.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “கண்ணனையே காண்க நங்கள்“ என்று விரும்பிய ஆழ்வாருடைய கண்ணுக்கு எம்பெருமான் ஸேவைஸாதிக்க, ஸேவித்து அவனுடைய வடிவழகைப் பேசியது பவிக்கிறாரிதில். கார்காலத்து மேகம்போலவும் கருங்கடல் நீர்போலவும் நீலமணிபோலவும் விளங்குகின்ற நிறமுடையனான எம்பெருமானுக்குத் திருக்கண்கள் திருக்கைத்தலம் திருவடி எல்லாம் தாமரையே என்னலாம்படியிருக்கின்றன வென்கிறார்.

கண்ணும் கைத்தமும் மண்ணளந்த பாதமும் கமலமே“ என்று ஏகவாக்கியமாகச் சொல்லியிருக்கலாமே, அங்ஙனன்றி “கண்ணுங்கமலம் கமலமே கைத்தலமும், மண்ணளந்த பாதமும் மற்றவையே“ என்று மூன்றுவாக்கியமாகச் சொல்லுவானேன்? மூன்று அவயங்களுக்கும் தாமரையொன்றே உபமாநமாகச் சொல்லப்படுகையாலே ஒரேவாக்கியமாக அமைந்தால் நன்றாயிருக்குமே என்று சிலர் நினைப்பர், ஆநந்தமாக அநுபவம் செல்லுமளவில் சொல்லிலக்கணம் சிக்ஷிக்கப்புகுமவர்கள் அரஸிகர்களாவர் வடமொழியில் ஒரு ச்லோகமுண்டு – “***“ (அதாவது – அநுபவபரீவாஹமாக ஆநந்தம் தலைமண்டைகொண்டு பேசும்போது பொருளின்பத்தில் ஆழ்ந்து அகங்குழைய வேண்டியிருக்க அதில் கரையாதே சொல்லைப் பிடித்துக்கொண்டு மன்றாடுமவர்கள் – சிருங்கார வேளி ஸமயத்தில் ‘இந்தப் புடவை என்னவிலை? எவ்வூரில் நெய்வித்தது? என்ன எடையிருக்கும்? என்று உப்புப்புளிப்பில்லாத விசாரங்கள் பண்ணுவாரைப்போலே அரஸிகர்களாவர் என்றபடி.

“தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலமன்னதாள்கண்டார் தாளேகண்டார் தடக்கைகண்டாரும்மஃதே“ என்றாற்போலே ஒவ்வொரு அவயவத்திலும் வேறொன்றறியாதே மருண்டு நிற்குமவர்களுடைய பாசுரங்களை நாமோ சிக்ஷிப்போம்? திருக்கண்ணழகிலே ஈடுபட்டுக் ‘கண்ணுங் கமலம்‘ என்றுபேசி நெடும் போது கழித்தபின் திருக்கையழகிலே கண்வைத்துக் ‘கமலமே கைத்தலமும்‘ என்றார். அதற்குப்பிறகு நெடும்போது கழித்துத் திருவடியழகிலே தோற்று ‘மண்ணளந்த பாதமும் மற்றவையே‘ என்றார் ஒருபோதும் அழகு குன்றாமலிக்கிற எம்பெருமானுடைய திவ்யாவயவத்திற்கு ஒருநொடிப்பொழுதில் அழகு மாறும்படியான தாமரையை ஒப்புச்சொல்லத்தகுமோ? தகாது தகாது, ஆனாலும் ஒப்பற்ற அவயவத்திற்கு அத்தாமரையல்லது வேறொன்றும் ஒப்பாக வாய்திறக்கவும் போராமையாலே இந்த அஸ்வாரஸ்யந் தோற்ற “பாதமும் மற்றவையே“ என்றார். “கைவண்ணந்தாமரை வாய்கமலம்போலும் கண்ணிணையுமரவிந்தம் அடியுமஃதே“ என்ற திருநெடுந்தாண்டகமும் காண்க.

“***“ என்றருளினர் ஸுந்தரபாஹு ஸ்தவத்திலும் ஆழ்வான்.

திருமாமணி வண்ணனுடைய தேசு – தேஜஸ்ஸானது, எண் இல் – எண்ணமுடியாதது, -இப்படிப்பட்டதென்று சிந்திக்கவும் முடியாத்து என்று பொருள் கூறுதலுமாம். ‘தேஜஸ்‘ என்னும் வடசொல் தேசு எனத்திரிந்தது.

English Translation

His form is the hue of the dark rain-cloud, the dark deep-ocean, the dark mountain-gem.  His eyes are like lotuses. His hands are like lotuses.  His Earth-measuring feet too are like lotuses. Can you imagine such a reality?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain