nalaeram_logo.jpg
(2248)

கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்

கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்

உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்

மறுநோய் செறுவான் வலி.

பதவுரை

யான்

அடியேன்

கனவில்

ஸவப்நம்போன்ற ஸ்வாநுபவத்திலே

திருமேனி

திவ்ய மங்கள விக்ரஹத்தை

கண்டேன்

ஸேவிக்கப்பெற்றேன்

ஆங்கு

அப்போது

அவன் கை

அவனது திருக்கையிலே

கனலும் சுடர் ஆழி கண்டேன்

ஜ்வலிக்கிற சுடர்மயமான திருவாழியைக் கண்டேன்

உறு நோய் வினை இரண்டும்

மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்

ஒட்டுவித்து

தொலைத்திட்டு

பின்னும்

பின்னையும்

மறு நோய் செறுவான்

மறுகிளை கிளர்ந்து வரக்கூறிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய

வலி

மிடுக்கையும்

கண்டேன்

காணப்பெற்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்பாட்டில் ஆழவார் தம் திருவுள்ளத்திற்கு ஸம்ஸாரதோஸஷ்களை எடுத்துரைக்கக்கண்ட எம்பெருமான் 1. “எம்மாவீட்டுத்திறமும் செப்பம்“ என்றும், 2. “இச்சுவைதவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேணடேன் அரங்கமாநகருளானே!“ என்றும். 3. “என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே“ என்றும் 4. வைகுண்டவாஸேபி நமேபிலாஷ“ என்றும் ஞானிகள் பேசாநிற்க. இவர் இந்நிலத்தை இப்படி இகழ்கிறாரே, நம்முடைய அநுபவம் இவர்க்கு இங்கு நன்கு வாய்த்ததாகில் இவர் இந்நிலத்தை இகழ்ந்து பரமபதத்தை ஒரு பொருளாக விரும்பமாட்டார் – என்றெண்ணி, தன்னுடைய திவ்யாமங்கள விக்ரஷேஸேவையை விலக்ஷணமாகப் பண்ணிக்கொடுக்க ஷேவித்து ஆநந்தம் பொலிப்பேசும் பாசுரம் இது.

ப்ரதயக்ஷ ஸமாநாகாரமான மாநஸ ஸாக்ஷாத்காரத்தைக் கனவு என்கிறது. “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழுமருக்கனணி நிறமுங்கண்டேன் – செருக்கிவரும், பொன்னாழிகண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன். என்னாழிவண்ணன் வாலின்று“ என்ற பேயார் பாசுரத்தின் பொருளை முன்னிரண்ட்டிகளில் அடக்கிப் பேசினாபோது மிவ்வாழ்வார்.

உறுநோய் வினையிரண்டு மோட்டுவித்துப் பின்னும் மறுநோய் செறுவான் வலி கண்டேன் – இப்படி மாநஸ ஸாக்ஷாத்காரம் பெற்றமாத்திரத்திலே தம்முடைய இருவகைக் கருமங்களும் தொலைந்து ருசிவாஸநைகளும் அகன்றொழிந்தனவாகத் தாம் இறுதியிட்டபடியை இதனால் வெளியிடுகிறார். மும்க்ஷுக்களுக்குப் பாபம்போலலே புண்யமும் பிரதிபந்தம் மாதலால் ‘வினையிரண்டு மோட்டுவித்து எனறார். பாவம் நரகத்திலே கொண்டுதள்ளும், புண்யம் சுவர்க்கத்திலே கொண்டு தள்ளும்‘ ஆகவே இருவினைகளும் ஒழிய வேண்டும். “ததா வித்வாந் புண்யபாபே விதூய நிரஞ்ஜந பரமம் ஜாம்யம் உனபதி“ என்று சுருதியும் புண்யபாபங்கள் தொலைந்தபின்பே பரமஸாம்யபத்தி விளைவதாகச் சொல்லிற்று.

அரிசியில் உமிகழிந்தாலும் தவிடானபாகம் ஒட்டிக்கொண்டிருப்பதுபோல் ஆத்மாவில் புண்யபாபங்கள் கழிந்தாலும் சில நாள் வரையில் அவற்றில் நடைதொடர்ந்து வருமாதலால் அதுவும் கழியவேண்டியது முக்கியம், அதனையுங் கழித்துத் தந்தமை சொல்லுகிறது ‘பின்னும் மறுநோய் செறுவான்‘ என்று.

செறுவான் என்பதை வினையாலனையும் பெயராகக் கொள்ளாமல் வான் விகுதிப்பெற்ற வினையெச்சமாகக் கொண்டு உரைப்பதும் ஒக்கும், வாஸநையையும் போக்குகைக்குத்தக்ச வலிவு பெற்றேன் என்றவாறு.

English Translation

I saw a beautiful form in my dream and in it I saw him wielding a radiant discus in his hand. He rid me of my good and bad deeds and ensured my passage without return. I saw in this his power too.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain