nalaeram_logo.jpg
(2241)

ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,

ஈருருவன் என்பர் இருநிலத்தோர், ஓருருவம்

ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,

நீதியால் மண்காப்பார் நின்று.

பதவுரை

ஓர் உருவம் அல்லை

(எம்பெருமானே) பரத்வமேவடியாக இருப்பவனன்று நீ,

ஒளி உருவம்

ஆச்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம

நின் உருவம்

உனது வடியாம் (இப்படி ஆச்ரிதபாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)

இரு நிலத்தோர்

இப்பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்

ஈர் உருவன் என்பர்

பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்

ஓர் உருவம்

ஆச்ரிதபாரதந்திரிய மாகிய ஒரு வடிவே

ஆதி ஆம் வண்ணம்

எல்லார்க்கும் உஜ்ஜீவநஹேதுவாயிருக்கு மென்பதை

அறிந்தாரவர் கண்டீர்

தெரிந்துகொள்ளுமவர்களே

நீதியால்

நியாயப்படி

நின்று

நிலைத்து நின்று

மண் காப்பார்

உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்பாட்டிற் கூறியபடி எம்பெருமான் தன்பெருமையைப் பாராமல் எளிமையையே பிரகாசப்படுத்தித் தம்மை விஷயீகரித்த நீர்மையை அநுஸந்திக்கையாலே, எம்பெருமானுக்கு ஸ்வாதத்திரியமே வடிவு என்று நினைத்திருக்கும் நினைவுதவிர்ந்து அவனுக்கு ஆச்ரித பாரதந்திரியமே வடிவு என்று அனைவரும் நினைக்க வேணு மென்கிறாரிதில்.

இப்பாட்டு எம்பெருமானை நோக்கிக் கூறுவதாம். விளி வருவித்துக்கொள்க நீ ஒருருவனல்லை – உனக்குப் பரத்வமே வடிவு என்று சாஸ்த்ரங்களைக்கொண்டு பலர் பேசுவர், அஃது அப்படியன்று. பரத்வத்தையே நீ வடிவாகவுடையையல்லை யென்றபடி. இதில் ஓருரு என்றது பரத்வமாகிற வடிவைக் கருதினபடி எனக்குப் பரத்வம் வடிவன்றாகில், பின்னை எது வடிவு என்கிறாயோ? ஒளியுருவம் நின்னுருவம் –இருட்டறையில் விளக்குப்போலே இவ்விருள் தருமா ஞாலத்தில் ஒளிபெற்று விளங்குமதான உனது ஸௌப்ய குணமே உனக்கு வடிவாயிருக்கும். நீ ஸ்வதந்திரனன்று, ஆச்ரிதபரதந்திரன் என்கை.

ஆழ்வீர் எனக்கு ஆச்ரிதபாரதந்திரியமே ஸ்வருபமென்று நீர் சொல்லுகின்றீரே, இது நீரொருவர்மாத்திரம் சொல்லுகிறவார்த்தையா? மற்றுள்ளாரெல்லாரும் இப்படியே கருதியிருக்கின்றார்களா? என்று எம்பெருமான் கேட்டருள, அதற்கு உத்தரமுரைக்கின்றார் ஈருருவனென்ப ரிருநிலத்தோர் என்று, உன்னுடைய ஸௌப்யகுணம் என்மேல் ஏறிப் பாய்ந்தபடியாலே இவ்வுண்மையை நானொருவன் தெரிந்து சொல்லுகிறேனத்தனை இக்குணத்தைக் கனவிலுங் கண்டறியாத உலகத்தவர்கள் உன்னைப் பரத்வமே வடிவாக வுடையனாகத்தான் சொல்லுகின்றனர் என்கை. இதில் சருருவன் என்றவிடத்து ஈர் என்றது ‘இரண்டு‘ என்னும் பொருளில் வந்த்தன்று, ‘பெருமை‘ என்னும் பொருளில் வந்தது. பரத்வமாகிற பெரிய வடிவுள்ளவனாக இவ்வுலகத்தவர் உன்னைச் சொல்லுகின்றனர் என்கை.

ஸௌலப்ய குணத்திலீடுபடாத உலகத்தவர்கள் கிரஸித்திருக்கிறபடி யல்லாமல் அக்குணத்தை அநுபவித்த தாம் அறிந்திருக்கிறபடியே ‘எம்பெருமானுக்கு ஆச்ரிதரிட் வழக்காயிருக்குந் தன்மையே நிலைநின்ற வடிவு‘ என்று எவர் தெரிந்து கொள்வரோ அவர்களே இவ்வுலகில் மேம்பட்டிருப்பர் என்கிறார் பின்னடிகளில்.

இப்பாட்டுக்கு மற்றொருவதையாகவும் பொருள் கொள்ளலாம் – ஒருருவனல்ல – “உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தா யிமையோர் தலைவா!“ என்கிறபடியே அடியவர்களைக் காத்தருள்வதற்காக நீ பலபல யோதிகளில் திருவவதரித்தாயாதலால் பரவாஸுதேவனாயிருக்கையாகிற ஒரு உருவத்தையே நீ உடைமையல்லை ஒளியுருவம் நின்னுருவம் – மீனாகவும், ஆமையாகவும் பன்றியாகவும் பலவுருக்கள் நீ கொண்டாலும் அவை அழுக்குடம்பு அல்ல, நீ பிறக்கு முருவங்களும் சுத்த ஸத்வமயமாய்க் கொண்டு நிரவதிகதே ஜோரூபமாகவே யிருக்கும். ஈருருவனென்ப நிருநிலத்தோர் – ஆக விப்படி அஸாதாரண விக்ரஹம், அவதார விக்ரஹம் என்று இருபடிப்பட்ட திருமேனியையுடையனாக உன்னை இவ்வுலகத்தவர் தெரிந்து கொண்டிருக்கின்றனர். ஆயினும் அஸாதாரண விக்ரஹத்திற்காட்டிலும் அவதார விக்ரஹமே ஸகலலோக உஜ்ஜீவந ஹேது என்று அறிந்து கொள்வதே சிறப்பு என்கிறார் பின்னடிகளில்.

English Translation

He is not of one form, since he is light-effulgent, he manifests himself and is spoken of as pairs-of-opposites in the world.  Only the one primeavel form is spoken of in the texts.  Those who realise him thus are rulers of the Earth.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain