nalaeram_logo.jpg
(2229)

உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி

மணந்தாய் மலர்மகள்தோள் மாலே. - மணந்தாய்போய்

வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,

மாயிருஞ் சோலை மலை.

பதவுரை

மாலே

ஸர்வேச்வரனே!

மறை நான்கும்

நான்கு வேதங்களையும்

உணர்ந்தாய்

(பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்

நீதி

அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்

ஓதினாய்

(மநுமுதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச்செய்கின்றாய்

மலர் மகள்

பூவிற்பிறந்த பெரிய பிராட்டியாருடைய

தோள்

திருத்தோளோடே

மணந்தாய்

கூடி வாழ்கின்றாய்

வேய் இரும் சாரல்

மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையையுடையதும்

இரு ஞாலம் சூழ்

பரந்த இப்பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான

மாயிருஞ் சோலமலைபோய்

திருமாலிருஞ் சோலைமலையிலேவந்து

மணந்தாய்

திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “உளங்கிடந்த வாற்றாலுணர்ந்து“ என்றதை விவரிப்பது போலும் இப்பாட்டு. ‘அன்பர் மறக்க முடியாதபடி அவர்களுடைய நெஞ்சைக் கொள்ளை கொண்டிருக்கு முபகாரம் நான் என்ன செய்திருக்கிறேன்?‘ என்று எம்பெருமான் கேட்பதாகக் கொண்டு, பிரானே! நீ செய்தருளின மஹோபகாரங்கள் சொல்லாற் கூறும்பரமோ? கண்ணில்லாதவர்களுக்குக் கண் கொடுத்தாற்போலே வேதங்களையெல்லாம் வெளியிட்டருளினாய். அந்த வேதங்களின் அரும்பெரும் பொருள்களை விவரிப்பனவாய் வேதோபப்ரும்ஹணமென்று பேர்பெற்றனவான் ஸ்ம்ருதீதிஹாஸ புராணதிகளையும் முனிவர்களைக் கொண்டு பிரவசதும் செய்தருளினாய், ஆச்ரீதர்களுடைய குற்றங்களையும் நற்றமாக உபபாதிக்கவல்ல பெரிய பிராட்டியான ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதிருக்கின்றாய், திருமலை முதலிய திருப்பதிகளிலே படுகாடு கிடக்கின்றாய், இப்படியாக நீ செய்தருளும் பெருநன்றிகளுக்கு எல்லையுண்டோ, என்றாராயிற்று.

உணர்ந்தாய் மறைநான்கும் – வேதங்கள் எம்பெருமானால் ஸ்ருஷ்டிக்கப்பட்டனவென்று சிலர் மயங்கிக்கிடப்பதுண்டு, ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் எம்பெருமான் நான்முகனுக்கு வேதோபதேசம் செய்வதாகச் சொல்லப்படுகிறதே, ஸ்ருஷ்டிக்கு முன்பு வேதம் இருக்கமுடியாதே, ஆதலால் ஈச்வரனால்தான் வேதம் செய்யப்பட்டிருக்கவேணும் என்று சில வைதிகர்களுங்கூட மயங்குவதுண்டு. உண்மை யாதெனில், வேதத்துக்கு நாம் எப்படி கர்த்தாக்களல்லவோ அப்படியே எம்பெருமானும் கர்த்தாவல்லன், உலகத்தின் ஸ்ருஷ்டியானது ஒன்றன்பின் ஒன்றாக ஆநாதிகாலமாய் நடந்து வருகிறது. ஒவ்வொரு நல்பத்தின் ஆரம்பத்திலும் ஈச்வரன் நான்முகனுக்கு வேதத்தை உபதேசிக்கிறான், ஆனால் முன்கல்பத்தில் வேதம் எவ்விதமான ஆநுபூர்வியோடு இருந்த்தோ, அவ்விதமேயான ஆநுபூர்வியுடையதாகவே மறுகல்பத்தின் ஆரம்பத்திலும் உபதேசிக்கிறான். பூர்வபூர்வ அநுபூர்விகளே அப்படியே எம்பெருமான் திருவுள்ளத்தில் ஸ்மரித்துக்கொண்டிருந்து எவ்விதமான மாறுதலும் செய்யாமல் இப்படியே அநாதிகாலமாக உபதேசித்து வருகிறான். இவ்வர்த்தம் விளங்கவே இங்கு ஆழ்வார் “மறை நான்கும் உர்ந்தாய்“ என்கிறார். ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரசதகத்தில் “ஸம்ஸ்காரம் ப்ரதிஸ்ஞ்சரேஷு நிததத் – வேதா. ப்ரமாணம் தக“ என்ற ச்லோகத்தில் இவ்விஷயம் ஸாரமாக அருளிச் செய்யப்பட்டுள்ளது.

“மாயிருஞ் சோலைமலை“ என்றது திருமாலிருஞ்சோலைமலையை என்றாவது திருவேங்கடமலையை என்றாவது கொள்ளலாம்.

English Translation

O Lord! Your revealed the four vedas. You spoke the Dharma of the life. You took the lotus-dame Lakshmi in your embrace. You have made your abode amid Bamboo groves in the venkatam hills!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain