nalaeram_logo.jpg
(2215)

வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,

புகையால் நறுமலாரால் முன்னே, - மிகவாய்ந்த

அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு,

என்பாக்கி யத்தால் இனி.

பதவுரை

முன்னே

-

முற்காலத்திலே

வகையால்

-

உபாயத்தினால்

அவனி

-

பூமியை

இரத்து

-

(மாவலிபக்கல்) யாசித்து

அளந்தாய்

-

அளந்து கொண்டவுன்னுடைய

பாதம் புகையால்

-

திருவடிகளை தூபங்கொண்டும்

நறுமலரால்

-

நல்ல பரிமளமுள்ளபுஷ்பங்களைக்கொண்டும்

மிக வாய்ந்த அன்பு ஆக்கி

-

மிகுதியாக (நன்றாக)ப் பொருந்தின ப்ரீதியுடனே

எத்தி

-

துதித்து

இனி

-

மேலுள்ள காலமெல்லாம்

என் பாக்கியத்தால்

-

நீ என்மேல் பண்ணின விசேஷ  கடாக்ஷமாகிற பாக்யத்தாலே

உனக்கு அடிமைப்பட்டேன்

-

உனக்குத் தொண்டனாய் விட்டேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழருளிச் செய்தபடி தம்முடைய மதோவாக்காயங்கள் எம்பெருமான் பக்கலிலேயே ஊனமுற்றதற்குக் காரணம் - அந்த எம்பெருமான் மஹாபலியிடத்தினின்று பூமியை  மீட்டு இந்திரனுக்குத் தருவதென்கிற வியாஜத்தாலி எல்லார் தலையிலும் திருவடியை வைத்து வாழ்வித்தது போல,  தம் தலைமேலும் திருவடிகளை வைத்து விசேஷகடாக்ஷஞ் செய்தருளின தேயாமென்பது இப்பாட்டில் தோன்றும்.

வகையால் - தந்திரத்தாலே யென்றபடி; இராவணன் போலவே மாவலியும் தேவர்களுக்குத் தீங்கிழைத்தவனாதலால் ராவணனைக் கொன்றொழித்தது போலவே இவனையுங் கொல்ல வேண்டியிருந்தும், இவன் உதாரகுணமொன்றை மேற்கொண்டிருந்ததனால் இவனைக் கொல்லவேண்டாவென்று கொண்டு மூவடியிரந்து பெறுகிற இச்செயலிலேயே பூமியை இந்திரனுக்குச் சேர்ப்பித்தலும் மாவலியை அடக்குதலுமாகிற இரண்டும் எளிதிற் கைகூடுமென்று நினைத்துச் செய்த தந்திரம் அறிக.  இனி, வகையால் என்பதற்கு வடிவழகு, மழலைச்சொல், மனத்தைக் கவரவல்ல செயல் முதலிய வகைகளாலே என்றுரைக்கவுமாம்.

அவநி - வடசொல்.

என் பாக்கியத்தால் = நான் செய்த பாக்கியத்தால் என்று பொருளன்று எனக்கு நேர்ந்த பாக்கியத்தால் என்கை எம்பெருமானார் காலத்திலே திருவரங்கம் பெரிய கோயிலில் ஒருநாள் நம் பெருமாள் புறப்பாட்டை எதிர்பார்த்துக் கொண்டு பெரிய திருமண்டபத்துக்குக் கீழாக மஹாஜ்ஞாதாக்களான முதலிகளெல்லாரும் திரளவிருந்தவளவிலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் “நாம் அநாதிகாலமாக ஆர்வீட்டு வாசலிலே எவனுடைய புறப்பாட்டை எதிர்பார்த்துக்கொண்டு கிடந்தோமோ தெரியாது, இன்று ப்ராப்த சேஷியான பெருமாளுடைய புறப்பாடு பார்த்து வந்திருக்க என்ன பாக்கியம் பண்ணினோமோ!’ என்ன, அந்த ப்ரஸங்கத்திலே நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்தவனுக்கு ஒருநாள் பகவத் விஷயத்திலே ருசிபிறப்பதற்குக் காரணமென்ன?’ என்று விசாரிக்கச்செய்தே ‘யாத்ருச்சிகஸுக்ருதம்’ என்று சிலரும் ‘அஜ்ஞாதஸுக்ருதம்’ என்று சிலருமாய் இப்படி வார்த்தைகள் உண்டாக, அவ்வளவில் அங்கிருந்த கிடாம்பிப்பெருமாள் ‘நமக்கு பகவத் விஷயம் போலே ஸுக்ருததேவர் என்றும் ஒருவர் ஆச்ரயணீயருண்டோ?’ என்ன அதற்குப் பிள்ளை  திருநறையூரரையர் ‘ஸுக்ருத மென்று சொல்லுகிறதும் வேறொன்றையன்று. பகவத் விஷயத்தையே காண்’ என்றாராம்.  ஸ்ருஷ்டி அவதாரம் முதலியவற்றாலே எம்பெருமான் பண்ணின க்ருஷியின் பயனாகவே ஒரு நாளடைவில் நமக்கு பகவத் விஷயத்தில் ருசி பிறக்கிறபடியாலே அந்த பகவத் கடாக்ஷந்தன்னையே பாக்கியமென்கிறது.  இவ்வார்த்தத்தையே ஸ்ரீமத்வேதாந்த தேசிகனும் ரஹஸ்யத்ரயஸாரத்திலே “உபாய: ஸ்வப்ராப்தேருபநிஷததீத: ஸ பகவாந், ப்ரஸத்த்யை தஸ்யோக்தே ப்ரபதந நிதித்யாஸநகதீ ததாரோஹ: பும்ஸாம் ஸுக்ருத பரிபாகேந மஹதா. நிதாநம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாணநிபுண:” என்று தெளிவருளிச் செய்தார்.

1. “எதிர் சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததா லெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே” என்று - எம்பெருமான் ஸர்வலோக வ்யாபியானது தம்மைக் கைப்பற்றிக் கொள்வதற்காகவேயென்று நம்மாழ்வார் அநுஸந்தித்தது போல இவ்வாழ்வாரும் அநுஸந்திக்கின்றமை முதலடியிலே நன்கு விளங்கும்.

English Translation

O Lord who begged for land and measured the Earth! By my good fortune, the love that I earlier made to you with incense and flowers has grown to make me surrender to your worthy feet as my refuge.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain