nalaeram_logo.jpg
(2212)

பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,

குராநல் செழும்போது கொண்டு, - வராகத்

தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,

மணியுருவம் காண்பார் மகிழ்ந்து.

பதவுரை

பிரான் என்றும்

-

‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’

பெரு புலரி என்றும்

-

‘இன்றே நல்விடிவு’ என்றும் (கொண்டாடிக்கொண்டு)

நாளும்

-

நாள்தோறும்

நல்குரா

-

நல்ல மணம்மிக்க

செழு

-

அழகிய

போது கொண்டு

-

புஷ்பங்களைக் கொண்டு,

வராகத்து அணி உருவன் பாதம்

-

அழகிய வரா ஹவுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை

பணியுமவர் கண்டீர்

-

வணங்குபவர்களே

மணி உருவம்

-

(அப்பெருமானுடைய) திவ்யமங்கள விக்ரஹத்தை

மகிழ்ந்து காண்பர்

-

ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆபத்பந்துவான பகவானுடைய திருவடிகளில் செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி முதலிய புஷ்பங்களைப் பணிமாறித் தொழுமவர்கள் அப்ராக்ருதமான அப்பரமனது திருமேனியை ஸேவித்து நித்யாநந்தம் அநுபவிக்கப் பெறுவர்களென்கிறார்.

(பிரானென்னும் பெரும்புலரியென்றும் பணியுமவர் கண்டீர்.)  ஸ்ரீவசநபூஷணத்திலே - “அஜ்ஞரான மநுஷ்யர்கள் வாளா தந்தானென்றிருப்பர்கள்; ஜ்ஞாநவான்கள் ‘இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென்னுள்வைத்தான் - எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே - நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதன் - அறிய தனவறிவித்த அத்தா நீ செய்தன அடியேனறியேனே - பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய் - என்னைத் தீமனங்கெடுத்தாய் - மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்று ஈடுபடா நிற்பார்கள்” என்றருளிசி செய்தவை இங்கு அநுஸந்திக்கத்தக்கன.  பிரானே! என்றும் பெரும்புலரி என்றும் சொல்லிக் கொண்டு எம்பெருமான் பாதம்பணிய வேணுமென்கிறாரிவ்வாழ்வார்.  ‘இன்றளவும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து விஷயாந்தரங்களிலே ஆழ்ந்து உண்டியே உடையே  உகந்தோடித் திரிந்தவென்னை இன்று உன் திருவடிகளிலே கொண்டு கூட்டினையே!, இதனிலும் மிக்க வுபகாரமுண்டோ?, என் றுபெருநன்றி பாராட்டவேணுமென்பது “பிரானென்றும்” என்பதன் கருத்து. (பிரான் - உபகாரசன்; இங்கே இது ஸம்போதநம்.)

பெரும்புலரி என்றும் =1.  “பழுதே போயின” என்கிறபடியே பாழாய்க் கழிந்த பல நாள்களுக்குள்ளே பகவத் விஷயத்திலிழியும்படி விடிந்த இந்நாளே நல்ல நாள்! என்று நாளைக் கொண்டாட வேணுமென்கிறது.  கம்ஸன் தனது வேலைக்காரனான அக்ரூரனை யழைத்து ‘நீ போய்க் கண்ணபிரானை யழைத்து வா’ என்று கட்டளையிட்டனுப்ப அவனும் புறப்பட்டு வரும்போது ,. “அத்ய மேஸ பலம் ஜந்ம ஸுப்ரபாதாச் மே நிசா - யதுந்நித்ராப்ஜபத்ராக்ஷம் விஷ்ணோ!   த்ரக்ஷ்யாம்யஹம் முகம்.” கம்ஸன் சோறுண்டு வளர்ந்த வெனக்கும் இன்று எம் பெருமான் திருமுகத்திலே விழிக்கப்பெறும் பாக்கியம் நேர்கின்றமையாலே இன்றே என் பிறவி பயன்பெற்றது; இன்றே நல்விடிவு என்று கனிந்து கூறினது போலவும், “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” என்று ஆய்ச்சிகள் நாளைக் கொண்டாடினது போலவும்.

குராநற் செழும்போது = ‘குரா’ என்று பரிமளத்திற்கும் ஒரு புஷ்ப விசேஷத்திற்கும் பெயர்.  இங்கே அவ்விரண்டு பொருளுங்கொள்வர், காண்பர் மகிழ்ந்து = கண்டு மகிழ்வர் என்றவாறு.

English Translation

"Lord!", "O Good Day!", thus and thus, those who praise you and offer fresh flowers at the feet of your beautiful boar-form will surely see your radiant gem-form and rejoice.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain