nalaeram_logo.jpg
(2136)

அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன்

அவன்தமரே யென்றொழிவ தல்லால், - நமன்தமரால்

ஆராயப் பட் டறியார் கண்டீர், அரவணைமேல்

பேராயற் காட்பட்டார் பேர்.

பதவுரை

அரவு அணைமேல்

-

சேஷசயனத்தின் மீது வாழ்கிற

பேர் ஆயற்கு

-

இடைத்தனத்தில் குறைவின்றிப் பூர்ணமாயிருக்கிற ஸ்ரீகிருஷ்ணனுக்கு

ஆட்பட்டார் பேர்

-

அடிமைப்பட்டவர்களின் திருநாமத்தை வஹிக்குமவர்களும்

நமன் தமரால்

-

யமபடர்களாலே

“அவன் தமர் எவ்வினையர் ஆகிலும்

-

“ அந்த சர்வேச்வரனுடைய பக்தர்கள் எவ்வகையான செயலையுடையவராயிருந்தாலும்

எங்கோனவன் தமரே”-

-

எம்பெருமானுடைய பக்தர்களன்றோ”

என்று

-

என்று கொண்டாடிக் சொல்லி

ஒழிவது அல்லால்

-

(தாங்கள்) விலகிப்போவது தவிர,

ஆராயப்பட்டு அறியார்

-

ஆராயப்பட்டிருநக்க அறிய மாட்டார்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- யமபடர்கள் பாகவதர்திறத்திலே அஞ்சியிருக்கும்படியை அருளிச்செய்கிறார். யமன் நாட்டிலுள்ளாருடைய பாவங்களையெல்லாம் ஆராய்வதற்கு அந்த ஸர்வேச்வரனால் நியகிக்கப்பட்டவனே; ஆனாலும் தனக்கும் நியாமகனான அந்த ஸர்வேச்வரனுடைய பக்தர்கள் நற்காரியங்களைத் தவிர்ந்து தீயகாரியங்களையே செய்துவந்த போதிலும் அவர்களை யமகிங்கரர்கள் “நமது யஜமாநனான யமனையும் நியமிக்கும் வல்லமை யுடையவர்களன்றோ இந்த பாகவதர்கள்” என்று கொண்டாடி வணங்கி அப்பால் போய்விடுவார்களே தவிர, அவர்களுடைய குணா குணங்களை ஒருபோதும் ஆராய்ச்சி செய்யமாட்டார்கள்: ஏனெனில்; அப்படிப்பட்டவர்களை ஸம்ரக்ஷிப்பதில் புருஷகாரபூதையான பிராட்டியும் ஒருகால் ஏதேனும் குறை சொல்லிலும் அதையும் லக்ஷியஞ்செய்யாமல்

1. “ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்று சொல்லிக்கொண்டு ஸர்வேச்வரன் பரிந்து ரக்ஷிப்பவனன்றோ? இப்படிப்  பெரிய பிராட்டியாராலும் குறைகூரக்கூடாதவர்கள் விஷயத்தில் நம்மால் அணுகவும் முடியுமோ? என்கிற பயத்தினாலென்க. அன்றியும், யமன் தன்படர்களை நோக்கி ‘நீங்கள் வைஷணவர்கள் திறத்தில் அபசாரப்படவேண்டா; அவர்களைக்கண்டால் அநுவர்த்தித்திருங்கள்’ என்று கட்டளை யிட்டிருக்கின்றானென்பதை, “ திறம்பேன்மின் கண்டீர், திருவடி தன் நாமம், மறந்தும் புறந்தொழா மாந்தர்-  இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்களென்றான் நமனும் தன் , தூதுவரைக் கூவிச் செவிக்கு.” என்ற நான்முகந்துருவந்தாதிப் பாசுரத்தாலும், * ச்வபுருஷ மபிவீக்ஷ்ய பாசஹஸ்தம்வததி யம : கில தஸ்ய கர்ணமூலே – பரிஹர மதுஸூதநப்ரபந்நாந் ப்ரபுரஹமந்யந்ருணாம் . ந வைஷ்ணவாநாம்.” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராணவசநத்தாலும் அறிக. “கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்ன, நாளுங் கொடுவினைசெயுங் கூற்றின் தமர்களுங் குறுககில்லார்” என்ற திருவாய்மொழியும், “வென்றி கொண்ட வீரனார், வேறு செய்து தம்முளென்னை வைத்திடாமையால் நமன், கூறுசெதுகொண்டு இறந்த குற்ற மெண்ணவல்லனே” என்ற திருச்சந்தவிருத்தமும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

இப்பாட்டில் “ பேராயற்கு ஆட்பட்டார்பேர்” என்ற ஈற்றடிக்கு வேறுவகையாகவும் பொருளுரைக்க இடமுண்டாயினும், அழகியமணவாளப்பெருமாள் நாயனாரருளிச்செய்த திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்கியானத்தில் ஆழிமழைக்கண்ணா வென்னும் நாலாம் பாட்டின் அவதாரிகையில், “ அவன்தமரெவ்வினையராகிலும் இத்யாதி” என்று இப்பாசுரத்தையெடுத்து [” அரவணைமேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் ஆராயப்பட்டு அறியார் கண்டீர்= ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது, அவனையும் யமன் கோஷ்டியில் பட்டோலை பார்க்கப்பெறாது”] என்று வியாக்கியானித்தருளியிருக்கக் காண்கையாலே ‘பேராய்ற் காட்பட்டார்பேர்’ என்னுமளவை ஒருசொல்லாகக்கொண்டு (அன்மொழித் தொகையாகப் பாவித்து) எம்பெருமானுக்கு ஆட்பட்டவர்களுடைய பேரையுடையவர்கள் எனப் பொருள்கொள்ளூதல் சிறக்கும்.

English Translation

His devotees, whatever be their karmic record, are our master's servants," –so saying, the agents of yama disperse, know it. Those who lbecome devotees of the great serpent-reclining cowherd Lord, established such a name.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain