(2118)

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள், நாளும்

புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, - திசைதிசையின்

வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம்

ஊதியவாய் மாலுகந்த வூர்.

 

பதவுரை

வகை அறு

-

அற்ப பலன்களையும் பரம புருஷார்த்தத்தையும் உட்புகுந்து இன்னவகை இன்னவகை என்று அறுதியிடுவதற்குறுப்பான

நுண் கேள்வி வாய்வார்கள்

-

ஸூக்ஷ்மார்த்தச்ரவணமுடையவர்களான

வேதியர்கள்

-

வைதிகர்கள்

நாளும்

-

நித்தியமும்

புகை விளக்கும்

-

தூபதீபங்களையும்

பூ புனலும்

-

புஷ்பங்களையும் தீர்த்தத்தையும்

ஏந்தி

-

தரித்துக்கொண்டு

திசை திசையின்

-

பலதிக்குக்களில் நின்றும்

சென்று

-

வந்து சேர்ந்து

இறைஞ்சும்

-

வணங்குமிடமான

வேங்கடம்

-

திருவேங்கடமலையானது,

வெண்சங்கம் ஊதிய வாய் மால்

-

வெளுத்த சங்கைத் திருப்பவளத்திலே வைத்து ஊதின எம்பெருமான்

உகந்த

-

திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கப்பெற்ற

ஊர்

-

திவ்யதேசமாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மூன்று பாசுரங்களாலே திருமலையை அநுபவிக்கிறார். எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடம் திருவேங்கடமலை யென்கிறார். அத்திருமலை எப்படிப்பட்ட தென்னில்; தினந்தோறும் பல பல திசைகளினின்றும்  வைதிகர்கள் வந்து  தூபதீபம் முதலிய திருவாராதநஸாமக்ரிகளைக்கொண்டு ஆச்ரயிக்கப்பெற்றது – என்கிறார். அந்த வைதிகர்கட்கு விசேஷணமிடுகிறார் வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் என்று  ஸூக்ஷ்மமான சாஸ்த்ரார்த்தங்களையும் அலகலகாக நிச்சயித்தறியக் கூடிய கேள்வி வாய்ந்தவர்கள்- பஹூச்ருதர்கள் என்றபடி.

வெண்சங்க மூதியது பாரதப்போரில்.

 

English Translation

Your favoured abode is venkatam, O Lord Tirumal who blows the white conch Panchajanyal vedic seers of high merit and learning gather from all Quarters with lamp, incense and water to offer worship.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain