nalaeram_logo.jpg
(2106)

உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப்போதும்

வரைமேல் மரகதமே போல, - திரைமேல்

கிடந்தானைக் கீண்டானை, கேழலாய்ப் பூமி

இடந்தானை யேத்தி யெழும்.

பதவுரை

வரை மேல்

-

ஒரு மலையின்மேலே

மரகதமே போல

-

மரகதப்பச்சை படிந்தாற்போல

திரை மேல்

-

திருப்பாற்கடலிலே

கிடந்தானை

-

சயனித்திருப்பவனும்

கீண்டானை

-

இரணியனுடலைப் பிளந்தவனும்

கேழல் ஆய்

-

வராஹமூர்த்தியாகி

பூமி இடந்தானை

-

பூமியை உத்தரிப்பித்தவனுமான எம்பெருமானை.

என் உள்ளம்

-

எனது மனமானது

உரை மேற்கொண்டு

-

உரைப்பதில் ஊற்றங்கொண்டு

ஓவாது எப்போதும்

-

இடைவிடாமல் எப்போதும்

ஏத்தி

-

அப்பெருமானது சரிதைகளைப் (புகழ்ந்து)

எழும்

-

உஜ்ஜீவிக்கும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில், கண்ணபிரான் ஓயாமல் ஏங்கியழுத சீலகுணத்தை அநுஸந்தித்த ஆழ்வார், அவன் ஓயாமல் ஏங்கினதுபோலவே தாமும் ஓயாமல் அவனுடைய சீலகுணத்தைப் பேசுவதில் உத்ஸாஹங் கொண்டிருப்பதை இப்பாட்டிலருளிச் செய்கிறார்.

‘என்னுள்ளம் உரைமேற்கொண்டு ஏத்தியெழும்” என்றதனால் –நெஞ்சு தந்தொழிலாகிய சிந்தனையோடு நில்லாமல் வாக்கின் தொழிலையும்  ஏற்றுகொண்டமை கூறப்பட்டது. திருவாய்மொழியில் “முடியானே மூவுலகுந் தொழுதேத்தும்” என்ற பாசுரத்தை இங்கே நினைப்பது . “உரைமேற்கொண்டு” என்பதை ‘மேல் உரைகொண்டு” என்று மாற்றி மேலான சொற்களைக் கொண்டு என்று முரைக்கலாம்.

[வரைமேல் மரகதமேபோலத் திரைமேற்கிடந்தானை.] திருப்பாற்கடலிலே எம்பெருமான் பள்ளிகொண்டிருப்பது- வெண்ணிறமானதொரு மயிலில் மரகதக்கல்லைப் பதித்தாற் போன்றிருப்பதாக அபூதோபமை கூறப்பட்ட்தென்க.

[கீண்டானை.] ‘இரணியன் பார்வை’ என்பது மூலத்திலில்லையாயிலும் கீண்டா னென்னும்போதே ‘இரணியன் மார்வு’ ஞாபகத்திற்கு வந்துவிடும். இரணியனுடலைக் கீண்டது போலவே, குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமஸுரனது வாயைக் கீண்டதும் பகாஸுரனுடைய வாயைக் கீண்டது முண்டாதலால் அவையும் நினைவுக்குவரின் அவற்றையும் கொள்ளத் தட்டில்லை. அன்றியே, “ கேழலாய்க் கீண்டானை இடந்தானை” என்று சேர்த்து வராஹரூபியாய் அண்டபித்தியிலே ஒட்டின பூமியை அதனின்று ஒட்டு விடுவித்துப் பிறகு கோட்டாற் குத்தியெடுத்தவனை என்று பொருள் கூறுவதும் பொருந்தும். “திரைமேற்கிடந்தானைக் கீண்டானை” என்ற சேர்த்தியால்- எம்பெருமான் ‘நம் அடியார்க்கு எப்போது என்ன தீங்கு வருமோ’என்ற சிந்தனையுடனே சயனித்திருப்ப, துன்புற்ற அடியாரின் கூக்குரல் செவிப்பட்டவுடனே பதறி அத்துன்பத்தைத் தீர்க்க ஏற்றதொரு திருக்கோலங்கொண்டு இங்குத்தோன்றி ரக்ஷித்தருள்கிறானென்பது விளங்கும். இப்படிப்பட்ட எம்பெருமானை எனது நெஞ்சு இடைவிடாது துதித்து உஜ்ஜீவிக்கின்றது என்றாராயிற்று.

English Translation

With spoken words my heart sees the dark emerald gem of a mountain reclining in the ocean. He came as a boar and lifted the Earth, he parted the ocean. Forever I shall praise and offer worship.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain