nalaeram_logo.jpg
(2103)

அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்,

பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய், - வெறிகமழும்

காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை,

தாம்பேகொண் டார்த்த தழும்பு.

பதவுரை

பொறிகொள் சிறை

-

பலநிறங்களையுங்கொண்ட சிறகுகளையுடைய

உவணம்

-

கருடாழ்வானை

ஊர்ந்தாய்

-

ஏறி நடத்தும் பெருமானே!

காம்பு ஏய் மென் தோளி

-

மூங்கிலையொத்த மெல்லிய தோள்களையுடைய யசோதையினாலே

கடை

-

கடையப்பட்டு

வெறி கமழும்

-

பரிமளம் வீசப்பெற்ற

வெண்ணெய்

-

வெண்ணெயை

உண்டாயை

-

(களவிலே) அமுது செய்த வுன்னை

தாம்பேகொண்டு

-

(கையில் கிடைத்ததொரு) தாம்பைகொண்டு

ஆர்த்த

-

கட்டியதனா லுண்டான

தழும்ப

-

காய்ப்பை (அறிபவன்)

யானேயும் அல்லேன்

-

நானொருவனே யன்று;

உலகு எல்லாம் அறியும்

-

உலகத்திலுள்ளாரெல்லாரும் அறிவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய ஸெளலப்ய குணத்தையறியாதார் ஆருமில்லை யென்கிறார். “ ஆங்கொருநாள் ஆய்ப்பாடி, சீரார்கலையல்குல் சீரடிச்செந்துவாவாய், வாரார்வனமுலையாள்  மத்தாரப்பற்றிக்கொண்டு, ஏராரிடைநோவ எத்தனையோர்போதுமாய்ச், சீரார் தயிர்கடைந்து வெண்ணெய் திரண்டதனை, வேரார் நுதல்மடவாள் வேறோர்கலத்திட்டு நாராருறியேற்றி நன்கமைய வைத்ததனைப், போரார்வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம் ஒராத வன்போல் உறங்கியறிவுற்றுத், தாராந் தடந்தோள்களுள்ளளவுங் கைநீட்டி, ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த, மோரார்குடமுருட்டி முன்கிடந்ததானத்தே, ஓராதவன்போல் கிடந்தானைக்கண்டவளும் வாராத் தான்வைத்தது காணாள் வயிறடித்திங்கு, ஆரார் புகுதுவார் ஐயரிவரல்லால், நீராமிது செய்தீரென்றோர் நெடுங்கயிற்றால் ஊரார்களெல்லாருங் காணவுரலோடே, தீராவெகுளியளாய்ச்சிக்கன ஆர்த்து அடிப்ப” (சிறிய திருமடல்) என்ற திருமங்கை யாழ்வாரருளிச்செயல் இங்கே பரமபோக்கியமாக அநுஸந்திக்கத்தக்கது.

வெண்ணெயுண்ட குற்றத்திற்காக யசோதைப்பிராட்டி உன்னைக்கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டிவைத்திருந்தனால் உன்னுடம்பு தழும்பேறிக்கிடக்குஞ் செய்தியை நானொருவன் மாத்திரமேயோ அறிவேன், உலகமெல்லா மறியாதோ என்கிறார்.

ஸெளலப்யகுணம் பாராட்டத் தகுந்ததாயினும் பரத்வமுள்ளவிடத்தில் அஃது இருந்தால்தான் பாராட்டத்தகும்; காஷ்டம், லோஷ்டம் முதலிய குழைச்சரக்குகள் ஸுலபமாயிருந்தாலும் அந்த ஸெளலப்யம் மெச்சத்தக்கதன்று, அங்குப் பரத்வமில்லாமையால் இப்படியே ஸெளலப்யத்தோடு கூடியிராத பரத்வமும் புகழத்தக்கதன்று; மேருமலையில் பரத்வ முள்ளதெனினும் அங்கே ஸெளலப்யமில்லாமையால் அப்பரத்வத்தைப் பாராட்டுவாரில்லை. ஆகையால் ஸெளலப்யத்தோடுகூடின பரத்வமும், பரத்வத்தோடுகூடின ஸெளலப்யமுமே போற்றத்தக்கனவாம்; இவை  யிரண்டுங்கூடி எம்பெருமானிடத்திலுள்ளன என்று காட்ட வேண்டி,  “பொறிகொள் சிறையுவணமூர்ந்தாய்!” என்கிறார், கருடனை வாஹனமாகக் கொண்டிருத்தல் பரத்வலக்ஷணமென்றுணர்க. வடமொழியில் கருடனுக்கு ‘ஸுபர்ண;’ என்று பெயர்; அதுவே தமிழில் உவணம் எனச் சிதைந்து கிடக்கின்றது.

வெறிகமழும் என்பது வெண்ணெய்க்கு விசேஷணமாகவுமாம், காம்பேய்மெந்தோளி [யசோதை]க்கு விசேஷணமாகவுமாம். காம்பு என்ற பலபொருளொருசொல் இங்கு மூங்கிலெனப் பொருள்படும்; பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் மூங்கிலைத் தோளுக்கு உவமை கூறுவர். உண்டாயை- உண்டான்’ என்பதன் முன்னிலையின் மேல் இரண்டனுருபு ஏறியிருக்கிறதென்க. தழும்பு-வடமொழியில் கிணம் எனப்படும்.

English Translation

It is known to the whole world, -not just me, - O Lord who rides the Garuda bird! You ate the fragrant butter churned by the Bamboo-slim arms of the Gopis, and were fethered by a rope that left your stomach with a mark.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain