nalaeram_logo.jpg
(2098)

அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல,

முடியும் விசும்பளந் ததென்பர், - வடியுகிரால்

ஈர்ந்தான் இரணியன தாகம், இருஞ்சிறைப்புள்

ஊர்ந்தா னுலகளந்த நான்று

பதவுரை

இரணியனது

-

ஹிரண்யாஸுரனுடய

ஆகம்

-

மார்வை

வடி உகிரால்

-

கூர்மையான நகங்களாலே

ஈர்ந்தான்

-

கிழித்தெறிந்தவனும்

இரு சிறை புன் ஊர்ந்தான்

-

பெரிய சிறகையுடைய கருடனை ஏறிநடத்து பவனுமாகிய எம்பெருமான்

உலகு அளந்த நான்று

-

உலகளந்த காலத்திலே

அடியும்

-

திருவடி

படி கடப்ப

-

பூமியை அளந்துகொள்ள

தோள்

-

திருத்தோள்கள்

திசைமேல் செல்ல

-

திக்குகளிலே வியாபிக்க

முடியும்

-

கிரீடம்

விசும்பு

-

மேலுலகத்தை

அளந்தது

-

அளவுபடுத்திக்கொண்டது

என்பர்

-

என்று சொல்லுவர்கள்.

(ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெறவில்லையே!!)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [அடியும்படிகடப்ப.] கீழ்ப்பாட்டில் “பழுதே பல பகலும் போயின””’’’’’’’’’”””“ என்றருளிச் செய்ததையே விவரிக்கிறது இப்பாட்டு. இப்போது ஒரு மனிதனாகப் பிறந்திருக்கிற நான் திடீரென்று பிறந்துவிடவில்லை; ஜீவாத்மாவுக்குப் புதிதாக ஸ்ருஷ்டியென்பது இல்லை யாகையால் “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து”  என்கிறபடியே அநாதிகாலமாகவே பல பல பிறவிகள் பெற்று ஸம்ஸாரியாய் வந்துகொண்டிருக்கிறேன்; எம்பெருமான் உலகளந்தருளின காலத்திலும் நான் ஏதோ ஒரு ஜந்துவாகப் பிறந்திருந்தவனேயொழிய அன்று நான் இல்லாமலிருக்கவில்லை; அப்போது நான் விவேகியாயிருந்து அந்த திவ்யசரிதையிலே ஈடுபட்டிருந்தேனாகில் அப்போதே இந்த ஸம்ஸாரத்தில் நின்றும் விடுபட்டு முக்தனாய்ப் போயிருப்பேன்; அன்று நான் அறிவிலியாய்க்கிடந்து வாணாளை வீணாளாகப் போக்கிவிட்டேன்; ஆகவே பழுதே பலபகலும் போயினவென்று கதறியழவேண்டியதாயிற்று- என்பதே இப்பாட்டின் உட்கருத்தாகும். “முடியும் விசும்பளந்தது என்பர்” என்ற சப்தஸ்வாரஸ்யம் நோக்கத்தக்கது. என்பர் என்கையாலே- உலகளந்தவாற்றை நான் இன்று பிறர்சொல்லக் கேட்கவேண்டியதாயிற்றேயொழிய நேரிலிருந்து ஸேவிக்கப் பெறவில்லையே யென்கிற அநுதாபம் நன்கு விளங்குமிறே.

கீழ் இரண்டாம்பாட்டில் “என்று கடல் கடைந்த்து “ என்று கடல் கடைந்த்து எவ்வுலகம் நீரேற்றது” என்று புராதன சரிதங்களெல்லாம் ப்ரத்யஷம்போலப் பேசப்பட்டிருந்தாலும், கிரம்மாக அவை கடந்தகாலத்திலே அவற்றைத் ஹ்டாம் ஸேவிக்கப்பெறவில்லையே என்கிற வருத்தம் ஸம்பாவிதமேயன்றே.

கீழ் இரண்டாம்பாட்டில் “ என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது “ என்று புராதன சரிதங்களெல்லாம் ப்ரத்யக்ஷம்போலப் பேசப்பட்டிருந்தாலும், கிரமமாக அவை நடந்தகாலத்திலே அவற்றைத் தாம் ஸேவிக்கப்பெறவில்லையே என்கிற வருத்தம் ஸம்பாவிதமேயன்றோ.

அடியும்படிகடப்ப “கோலமாமென் சென்னிக் கமலமன்ன குரைகழலே”

என்றாற்போல அடியவர்களுக்கு சிரோபூஷணமாக அமையவேண்டிய திருவடிகளைக்கொண்டு கல்லும் கரடுமான உலகங்களையளப்பதே! என்கிற வருத்தமும். [தோள் திசைமேல் செல்ல] பிராட்டியை அணைக்கவேண்டிய திருத்தோள்களைக்கொண்டு திசைகளின்மேல் வியாபரிப்பதே! என்கிற வருத்தமும், [முடியும் விசும்பளந்தது] எங்கள் கண்முன்னே விளங்கி 2. “முடிச் சோதியாய் உனது முகச்சோதிமலர்ந்ததுவோ?” என்று நாங்கள் பாசுரம் பேசவேண்டும் படியான திருமுடியை அஹங்காரிகளும் பகவத் விஷயச்சுவடறியாதவர்களுமான தேவதைகளுள்ள விடங்களிலே நிமிர்ப்பதே! என்கிற வருத்தமும் உள்ளுறையும்.

பின்னடிகளின் கருத்தையும் ஆழ்ந்து நோக்கினால், இரணியனைப்பிளந்து ப்ரஹ்லாதனுக்கு அருள்செய்தகாலத்திலும், ஸ்ரீகஜேந்திராழ்வானைக் காத்தருளப் பெரியதிருவடியின் மீதேறி அரைகுலையத் தலைகுலைய விரைந்தோடி வந்தகாலத்திலும் நேரில் ஸேவித்து வாழா தொழிந்தேனே! என அநுதாபப்படுவதும் தோன்றும்.

English Translation

The Lord rides the Garuda bird.  He fore into Hiranya's chest with his sharp nails, They say when he measured the Earth, his feet straddled the land, while his arms stretched out and measured the Quarters. Even his crown measured the space above.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain