nalaeram_logo.jpg
(2097)

பழுதே பலபகலும் போயினவென்று , அஞ்சி

அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன்,

கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண்

அடலோத வண்ணர் அடி.

பதவுரை

கடல் ஓதம்

-

கடலலையானது

கால்

-

தன்திருவடி வாரத்திலே

அலைப்ப

-

(துடைதட்டி உறங்கச் செய்வதுபோல) வீச

கண்வளரும்

-

யோகநித்திரை செய்கின்ற

செம்கண்

-

செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவரும்

அடல் ஓதம் வண்ணர்

-

அநுபவிக்க இழிந்தவர்களை அநுபவிக்கவொட்டாமல் அடர்கின்ற செளந்தரியமாகிற அலைகளோடு கூடிய வடிவையுடையவருமான பெருமாளுடைய

அடி

-

திருவடிகளை

அரவு அணை மேல்

-

சேஷசயனத்தின் மீது

கண்டு தொழுதேன்

-

கண்ணாரக்கண்டு (இன்று) ஸேவிக்கப்பெற்ற அடியேன்

பல பகலும்

-

“கீழ்க்கழிந்த கால மெல்லாம்

பழுதே போயின என்று

-

(இவ்விதமாகக் கழியாமல்) வீணாகக் கழிந்தனவே!” என்று

அஞ்சி அழுதேன்

-

மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-[பழுதேபலபகலும்.] கீழ்ப்பாட்டில்  முதலாய நல்லானருளல்லால் .... பல்லாரருளும் பழுது” என்றருளிச் செய்த ஆழ்வார் அவ்வெம்பெருமானுடைய அருள் தம்மிடத்தில் நெடுங்காலம் பயன்படா திருந்ததை நினைத்து,  ‘அந்தோ! நெடுங்காலம் பாழாய்ப் போய்விட்டதே!’ என்று அநுதாபப் படுகிறாரிதில்.

இப்பாட்டில், இறந்தகாலத்தைப்பற்றி வருத்தமும் நிகழ்காலத்தைப்பற்றி மகிழ்ச்சியும் எதிகாலத்தைப்பற்றி அச்சமும் ஆக மூன்றுகாலங்களைப்பற்றின  மூன்று விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. (எங்ஙனே யெனின்?) “கடலோதம் காவலைப்பக்கண்வளரும் செங்கணடலோத வண்ணரடியை அரவணை மேல் கண்டு (இன்று) தொழுதேன்”  என்றமையால் நிகழ்காலத்தில் பகவத்ஸேவை வாய்க்கப்பெற்ற ஆநந்தம் வெளியிடப்பட்டதாயிற்று; “பழுதே பலபகலும்

போயினவென்று அழுதேன்”  என்றமையால், கீழ்க்கழிந்த அநாதிகாலமெல்லாம் இவ்விதமாக ஆநந்தமயமாய்க் கழியவில்லையே யென்கிற வருத்தம் காட்டப்பட்டது”, “அஞ்சியழுதேன்” என்றமையால் – இனிமேல் வரப்போகிற காலமும் கீழ்க்கழிந்த காலம்போலே வீணாகக்கழிந்து விடுமோ வென்கிற அச்சம் காட்டப்பட்டது.

“கண்டு தொழுதேன்” என்னப்பெற்ற பின்பு எதிர்கால நிலைமைக்கு அஞ்ச வேண்டுவானேன்? என்னில்; தாம் இருப்பது இருள்  தருமாஞாலத் திலாகையாலே 1. “விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறுமைம்புலனிவை. மண்ணுளென்னைப் பெற்றால் என் செய்யா?” என்கிறபடியே இந்த லீலா விபூதியின் ஸ்வபாவத்தை நினைத்து அஞ்சாதிருக்க முடியாதிறே. பரம பக்தனாயிருந்த ப்ரஹ்லதழ்வானையுமன்றோ ஒருகால் எதிரியாக்கிற்று இம்மண்ணுலகம் .2 . ”ஆற்றங்கரை வாழ்மரம்போ லஞ்சுகின்றேன்” என்றாரே திருமங்கையாழ்வாரும்.

கீழ் ஆறாம்பாட்டில் “ ஒன்று மறந்தறியேன் ஓதநீர்வண்ணனை நான்” என்றும் “அன்று கருவரங்கத்துக்கிடந்து கைதொழுதேன் கண்டேன்” என்றும் கர்ப்பவாஸகாலம் முதற்கொண்டே தாம் பகவத் விஷயப்ரவணராயிருப்பதாகச் சொல்லிக்கொண்ட இவ்வாழ்வார்  இங்கே * பழுதே பலபகலும் போயினவென்று அழுவதாகச் சொல்லிக்கொள்வதேன் என்னில்; இப்பிறவிக்கு முன்னே * மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து போந்த காலங்களில் நாள்கள் பலவும் பழுதாயினவே யென்று வருந்துகிறபடி. இப்பிறவியிலும் ஆதியே பிடித்து இங்ஙனே பாசுரம் பேசி அநுபவிக்க ப்ராப்தியிருந்தும் கீழே பலநாள்கள் பாழாயினவேயென்று வருந்துவதாகக் கொள்ளவுமாம்.

பேயாழ்வார் “ 1.சென்றநாள் செல்லாத செங்கண்மாலெ கண்மாலென்ற நாள் எந்நாளும் நாளாகும்” என்கிறார்; (அதாவது) நிகழ்கால நிலைமை நன்றாயிருக்கப் பெற்ற ஆனந்த மிகுதியினால் இறந்தகால எதிர்கால நிலைமைகளிற் கவலையற்று எல்லாக் காலமும் எனக்கு நல்லகாலமே யென்றார்; அஃதொரு சொற்சமத்கார விசேஷமென்க.

அடலோத வண்ணர்= ஓதம் என்று கடலுக்கும் அலைக்கும் பெயர்; இவ்விடத்தில்  அலை என்னும் பொருள் விவக்ஷிதம்; அதாவது திருமேனியிலே பரவுகின்றலாவண்ய தரங்கங்களைச் சொன்னபடி. அநுபவிக்க வருமவர்களை அடர்த்துத் தள்ளுகிற லாவண்ய தரங்கங்களோடு கூடிய திருமேனியையுடையவர் என்ற தாயிற்று.

English Translation

The wasted days gone by!, -I feared and wept.  Then I saw the ocean-hued red-eyed Lord reclining on a serpent bed, -his feet caressed by lapping waves, -and offered worship to him.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain