nalaeram_logo.jpg
(2087)

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,

இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று

கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்

திருவரங்க மேயான் திசை.

பதவுரை

அன்று

-

அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத காலத்திலே

கரு அரங்கத்துள் கிடந்து

-

கர்ப்பப்பையாகிற ஸ்தானத்திலே இருந்துகொண்டு,

திருஅரங்கம்மேயான்

-

ஸ்ரீரங்கத்திலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெரிய பெருமாளுடைய

திசை

-

ஸ்வபாவங்களையெல்லாம்

கண்டேன்

-

ஸாக்ஷாத்கரித்தவனாய்

கைதொழுதேன்

-

அஞ்ஜலியும் செய்தவனாகிய நான்

ஓதம் நீர் வண்ணனை

-

வெள்ளம் பரந்த ஸமுத்ரஜலம்போலே குளிர்ந்த வடிவழகுள்ள அப்பெருமானை.

ஒன்றும் மறந்து அறியேன்

-

க்ஷணகாலமும் மறந்தறிய மாட்டேன்:

ஏழைகாள்

-

(விஷயாந்தரங்களை விரும்பித்திரிகிற) அறிவு கேடர்களே!

நான்

-

(அவனை மறக்கக்கூடிய கர்ப்பஸ்தானத்திருக்கச் செய்தேயும் மறவாதிருந்த) தான்.

இன்று

-

(மறக்க முடியாதபடி ஞானவிகாஸம் பெற்ற இக்காலத்திலே)

மறப்பனே

-

எப்படி மறப்பேன் [மறக்கவே மாட்டேன்.]

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [ஒன்றுமறந்தறியேன்.] கீழ் நான்காம் பாட்டில் “அரன் அறிவானாம்” என்று சிவபிரானை மாத்திரம் இழித்துக்கூறி விட்டீரே; அவனுக்கு பகவத் விஷயமே தெரியாதென்றும், தெரிந்தவனை போலப் பாவித்து சிஷ்யர்களுக்கு உபதேசிக்கவும் தொடங்கிவிட்டானே யென்று ஏசியும் பேசினிரே; அவனைக் காட்டிலும் நீர் பகவத் விஷயஜ்ஞானத்தில் சிறந்தவரோ? நீர் தாம் எம்பெருமானையறிந்து பிறர்க்கு உபதேசிக்கவல்லீரோ? பிரபந்த முகத்தால் உணர்த்தத் தொடங்கிவிட்டீரே, இஃது எங்ஙனே? என்று ஆழ்வாரை நோக்கி ஒரு கேள்வி பிறக்க ஆழ்வார் அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறதுபோலே யிருக்கிறது இப்பாட்டு. அந்த அரனுக்கும் எனக்கும் எவ்வளவோ வாசியுண்டு; அவன் ஸத்வகுணம் தலையெடுத்தபோது எம்பெருமானது திருவருளாலன்றி ஸ்வப்ராயத்நத்தாலெ அப்பெருமானது ஸ்வரூபஸ்வபாவங்களைச் சிறிது அறிந்து பரமஸாத்விகன்போல இருப்பன்; அடுத்த ஷணத்திலேயே ரஜோ குணமும் தமோ குணமும் தலையெடுக்கப் பெற்று ‘என்னைக் காட்டிலும் வேறொரு ஈச்வரன் உண்டோ? நானே ஸர்வேச்வரன்’ என்று செருக்குக் கொள்வன்; அவனை போலவோ நான்? நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிடித்து அப்பெருமானால் நிர்ஹேதுகமாகக் கடாக்ஷிக்கப் பெற்று, தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை யெல்லாம் அவன் தானே காட்டக் கண்டு, “ஜாயமாநம் ஹி புருஷம்யம் பச்யேத் மதுஸூதந:- ஸாத்விகஸ்ஸது விஜ்ஞேய: ஸவை மோக்ஷார்த்த சிந்தக:”- [கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவனைக் கடாஷித் தருள்வனொ அவனே ஸாத்விகன்; அவனே முமுக்ஷூவாவான்] என்கிறபடியே சித்த ஸாத்விகனாய் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணம் முதலியவற்றை ஸ்வயம் அநுபவிப்பதும் பிறர்க்கு எடுத்து உபதேசிப்பதுமாக இவற்றையே காலக்ஷேபமாகக் கொண்டிருந்தவன்; பெரும்பாலோர் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்திலுங்கூட அவனை மறவாது வாழ்த்திக் கொண்டிருந்த நான் இனி ஒரு காலாகிலும் மறக்க வழியுண்டோ? அரனுக்குப்போலே எனக்கும் முக்குணங்களும் மாறி மாறி வருமோ? ஸத்வகுணகார்யமே நிலை நின்றிருக்கப் பெற்ற வெனக்கு அவனை உணர்தலும் உணர்ந்தவற்றைப் பிறர்க்கு உபதேசித்தலும் உசிதமே என்றாராயிற்று.

ஓதநீர்வண்ணனை என்ற சொல்லாற்றலால்- அவனுடைய வடிவழகு நெஞ்சிலே ஊன்றப் பெற்றவர்கட்கு அவனை மறப்பது ஒருநாளும் ஸம்பாவிதமல்ல என்பது பெறப்படும். கர்ப்பவாஸ காலத்தில் வந்து ஸேவை ஸாதித்தது மாத்திரமே யல்லாமல் எப்போதும் கடாக்ஷித்து விஷயீகரிப்பதற்காகவே திருவரங்கம் முதலான திருப்பதிகளிலே ஸந்நிதனாயிரா நின்றா னென்பது தோன்றத் திருவரங்கமேயான் என்கிறார். மேயான் - மேவியிருப்பவன் திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருப்பவன்.

இப்பாட்டின் முடிவிலுள்ள திசை என்னும் பதத்திற்கு ‘திக்கு’  என்னும் பொருளாயினும் ‘தன்மை’ என்னும் பொருளில் அஃது இங்குப் பிரயோகிக்கப்பட்டது. இப்பிரயோகம் வட நூல்களிலே விசேஷமாகவுண்டு.

இதில் மூன்றாம் மடியில் ஒரு சங்கை பிறக்கும்; அதாவது –பொய்கையிலே ஒரு செங்கமலப் பூவிலே திருவவதரித்ததனால் அயோநிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸ மென்பது கிடையாதே; அப்படி யிருக்க கருவரங்கத்துள் கிடந்து” என்று இவர்தாம் எங்ஙனே அருளிச் செய்கிறார் என்று; இதற்கு உத்தரமாவது- “கருவரங்கத்துள் கிடந்து” என்ற விதனால், *தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையுமாய் வேண்டா நாற்றம்மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில் நின்றும் ஆழ்வார் பிறந்தாரென்று கொள்ளவேண்டிய அவசியம் யாதுமில்லை; எவ்விடத்தில் நின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்பஸ்தாநமாகும்; இந்தவாழ்வாருடைய வாழித்திருநாமத்தில் “வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே” என்றிருப்பதும் இவ்வர்த்தத்தை வற்புறுத்தும் ‘நான் இவ்விருள் தருமா ஞாலத்தில் வந்து தோன்றுவதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன்’ என்று சொல்லுவதே இங்கு விலக்ஷிதம் “அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்” என்றாற்போலுமாம்.

“கருவரங்கத்துள்” என்ற விடத்து அரங்கம் என்னும்சொல் ரங்கம் என்ற வடசொல்லின் விகாரம்; அச்சொல் –நர்தனம் செய்யுமிடம், போர் செய்யுமிடம் என்று சிறப்பிடப் பொருளதாயினும் இங்கே ‘இடம்’ என்னும் பொதுப் பொருளிலே நிற்கிறது .....

English Translation

All ye people! I can never forget the ocean-hued Lord! Then when I lay in the womb I folded my hands in worship. Now I note the southern Quarter which the lord of Arangam is facing, -Yama's Quarters.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain