nalaeram_logo.jpg
(2085)

நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து

பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, - அறிவானாம்

ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,

ஆலமமர் கண்டத் தரன்.

பதவுரை

அன்று

-

முன்பொரு காலத்தில்,

ஆலமரம் நீழல்

-

ஆலமரத்தின் நிழலிலே

(இருந்துகொண்டு)

நால்வர்க்கு

-

அகஸ்தியர்,புலஸ்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர் என்கிற நான்கு சிஷ்யர்களுக்கு

அறம் உரைத்த

-

தருமோபதேசம் செய்தவனும்

ஆலம் அமர் கண்டத்து

-

விஷத்தைக் கழுத்தளவிலே அடக்கிக்கொண்டுள்ளவனுமான

அரன்

-

சிவன்

ஜந்து பொறி வாசல்

-

செவி வாய் கண் மூக்கு உடல் என்கிற ஐந்து இந்திரியங்கள் செல்லும்வழியில்

போர் கதவம் சார்த்தி

-

வலிய கதவுகளையிட்டு அடைத்து [இந்திரியங்கள் பட்டிமேய வொண்ணாதபடி அவற்றை வென்று]

நெறிவாசல் தானே ஆய் நின்றானை

-

உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை

அறிவான் ஆம்

-

அறிந்து விட்டதாகச் செருக்குற்றிருக்கிறானே! (இஃது என்ன அறிவு கேடு!.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [நெறிவாசல்.] எம்பெருமானுடைய இன்னருளால் ஞான விகாஸம் பெற்ற நானே அவனுடைய ஸ்வரூபம் குணம் சேஷ்டிதம் முதலியவற்றை நன்கு அறியமாட்டாமல், கடலிலே நீஞ்சிக் கரையேறமாட்டாதே கிடந்து அலைவாரைப்போலே அலையா நிற்க, தன் முயற்சியால் சிறிது ஞானம்பெற்ற சிவன் அவற்றை எங்ஙனே அறியவல்லான்? எனக்குத் தெரிந்தவற்றில் ஏகதேசமும் அறியமாட்டாத அவன் தன்னை ஸர்வஜ்ஞனாக நினைத்துக்கொண்டு பகவத் விஷயத்தைத் தான் உபதேசிக்கவல்லவன் போலச் சில சிஷ்யர்களைச் சேர்த்துக் கொண்டு ஆலமரத்தடியிலே உட்கார்ந்துகொண்டு ஆசார்யபதம் வஹித்து எம்பெருமானுடைய தன்மைகளை உபதேசிப்பதாக இழிந்துவிட்டானே! இஃது என்ன அறிவுகேடு! என்று ருத்ரனைப் பரிஹஸித்துப்பேசுகிறார் “அரன் அறிவானாம்” என்ற சொல்லின் காம்பீர்யத்தை நோக்குமின். நானே அறியமாட்டாதிருக்க அவனோ அறியப்போகிறான்; தான் தெரிந்து கொள்ளவும் ப்ரஸக்தியில்லாதிருக்கப் பிறர்க்குப் போதகாசிரியனாக வீற்றிருந்தானே! என்று கர்ஹிக்கிறபடி.

”அரன், நெறிவாசல் தானேயாய் நின்றானை அறிவானாம்” என்று அந்வயிக்க. நெறி என்று வழிக்குப் பேராகையாலே பலனைப் பெறுவிக்கும் வழியாகிய உபாயத்தைச் சொன்னபடி. வாசல் என்று புகுமிடத்துக்குப் பேராகையாலே இறுதியில் அடையத் தக்க பலனைச்சொல்லுகிறது; ஆகவே, உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை என்றதாயிற்று அன்றி, நெறி –ஸ்வரூபத்துக்கு ஏற்ற, வாசல்-உபாயம், தானேயாய் நிற்பவனை என்று முரைக்கலாம்.

சிவன் ஒரு காலத்திலே அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் என்கிற நான்கு முனிவர்களைச் சிஷ்யர்களாக அமைத்துக்கொண்டு ஆலமரத்தடியிலே ஸ்ரீமந்நாராயண தத்வோபதேசம் செய்தனனென்று நூல்கள் கூறும்; திருமழிசையாழ்வாரும் நான்முகன் திருவந்தாதியிலே-”ஆலநிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு, மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்- ஞால மளந்தானை ஆழிக்கிடந்தானை ஆல்மேல், வளர்ந்தானைத் தான் வணங்குமாறு” (17.) என்ற பாசுரத்தினால் இக்கதையை அநுஸந்தித்தமை காண்க.

ப்ரஹ்மஜ்ஞாநமில்லாத பாலாகி யென்பவன் ப்ரஹ்மஜ்ஞாநமுடையனான அஜாதசத்ரு வென்பவனுக்கு ப்ரஹ்மஜ்ஞாநத்தை உபதேசிக்கத் தொடங்கியதுபோலும் சிவனது உபதேசமும் என்ற இழிவுதோன்ற “அறிவானாம்”  என்று பழித்துக் கூறுகின்றார்.

[ “ஐந்து பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி”] ஒரு வாசலை அடைக்கத் தொடங்கினால் மற்றொரு வாசற்கதவு திறந்துகொள்ளும்படியாயுள்ள பஞ்சேந்திரியங்களாகிற யந்த்ரம் போன்ற ஐந்து வாசல்களையும் அடைத்தாலன்றி பகவத் தத்துவத்தை உபதேசிக்க வொண்ணாதென்பதும், அந்த வாசற்கதவுகளை அடைப்பது மிகவும் அருமை என்பதும் இவ்வாக்கியத்தில் தோன்றும் ஐந்து பொறி வாசற்கதவுகளை அடைக்கமாட்டாத் ருத்ரன் எங்ஙனே அறிவான்? என்றவாறு. போர்க்கதவம் என்றது- அடைக்கத் தொடங்குகிறவர்களின் முகத்திலே அறைகிற கதவு என்றபடியாய்; எப்படிப்பட்டவர்களையும் விஷயப்ரவணராக்கவல்ல இந்திரியங்களின் வன்மையைக் கூறியவாறு.

எம்பெருமான் திருப்பாற்கடலைக் கடையும்போது அதனின்றும் தோன்றிய விஷத்தை ஸ்ரீமந்நாராயணனுடைய கட்டளையாலே சிவன் தான் வாங்கி உண்ண அதனையறிந்த பார்வதி அஞ்சி அவ்விஷம் கழுத்துக்குகீழே இறங்காதபடி அவனது கழுத்தை இறுகப்பிடித்துக்கொள்ள விஷம் கழுத்தளவிலே நின்றுவிட்டது; அதனால் சிவன் கறுத்த கழுத்தையுடையனாய் காலகண்டனென்று பேர்பெற்றனன் என்ற வரலாறு தோன்ற “ஆலமமர்கண்டத்தான்” என்றார். ஆலம்-வஷம்; ஹாலாஹலமென்ற வடசொற் சிதைவு என்பர். சிவன் தனது தமோகுணத்துக்குத் தக்க செயலைச் செய்ய வல்லவனேயன்றி ஸாத்விகர் செய்யும்  செயல் அவனால் செய்யமுடியா தென்பதும் இவ்விசேஷணத்தின் கருத்தாம்.

ஹர: என்ற வடசொல் அரனெனத் திரிந்தது; ஸம்ஹாரகர்த்தா என்கை

English Translation

How the poison-throated siva tought Yoga to Daksha, Pulastya. Agastya and Markandeya under the peepul free! They closed the battle-gates of their five senses and realised you as their only path to freedom!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain