nalaeram_logo.jpg
(2083)

என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,

ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று

தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ

படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.

பதவுரை

கடல் கடைந்தது

-

(தேவர்களுக்காகக்) கடலைக் கடைந்தது

என்று

-

எந்த நாள்?

நீர் ஏற்றது

-

(மாவலி) தாரை வார்த்து தத்தஞ் செய்யப்பெற்றது

எ உலகம்

-

எந்த உலகம்?

அதனை

-

அவற்றை

நான் ஒன்றும் உணரேன்

-

நான் அடியோடு அரிகின்றிலேன்;

அது

-

அந்தக் கடலானது

அன்று

-

ஸ்ரீராமாவதார காலத்தில்

அடைத்து

-

மலைகளைக்கொண்டு திருவணைகட்டித் தூர்த்து

உடைத்து

-

(இராவணனை முடித்துத் திரும்புங்கால் அந்தத் திருவணையை) உடைத்து.

கண்படுத்த

-

எப்போதும் பள்ளிகொள்ளுமிடமாகக் கொண்டிருக்கப்பெற்ற

ஆழி

-

ஸமுத்ரமாம்;

இது

-

(நீரேற்றுப்பெற்ற) இவ்வுலகமானது

நீ

-

ஸர்வேச்வரனான உன்னாலே

படைத்து

-

ஸ்ருஷ்டிக்கப்பட்டும்

இடந்து

-

(வராஹாவதார காலத்தில் அண்டபித்தியில் நின்று) ஒட்டு விடுவித்தெடுக்கப்பட்டும்

உண்டு

-

(பிரளய வெள்ளம் கோத்தபோது) திருவயிற்றிலே வைத்துப் பாதுகாக்கப்பட்டும்

உமிழ்ந்த

-

பின்பு வெளிப்படுத்தப்பட்டதுமான

பார்

-

பூமியாகும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-[என்றுகடல்கடைந்து.] ஸர்வேச்வரனை அநுமாநத்தால் ஸாதிப்பது தோன்றக் கீழ்ப்பாட்டு அருளிச் செய்யப்பட்டது; அவனை அநுமாநங்கொண்டு ஸாதிக்கவேண்டிய வருத்தமில்லை; அவன் செய்தருளியிருக்கும் எல்லையற்ற அதிமாநுஷங்களான செயல்களே அவனுடைய உண்மையை ஸாதித்துக் கொடுக்கக்கூடியவை என்று வெளியிடக்கருதி, கடல் கடைந்தது உலகளந்தது முதலிய சில சேஷ்டிதங்களை அருளிச்செய்யும் முகத்தால் அவனுடைய உண்மையை மூதலிக்கின்றார்.

ஆளவந்தார் எம்பெருமானுடைய உண்மையை உணர்வதற்கு உரிய ஸாதநங்களை அருளிச் செய்யுமிடத்து “த்வாம் சீல ரூப சரிதை:” (ஸ்தோத்ரரத்நம்.) இத்யாதிகள் அருளிச் செய்ததும் அப்படியே ஆழ்வானும் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில்—”சித்ரைச்ச கைச்சிதுசிதை: பவதச் சரித்ரை:” என்றருளிச் செய்ததும் ஸ்மரிக்கத்தக்கன.

கடல்கடைந்து தேவர்களுக்குச் சாவாமருந்து எடுத்துத்தந்து அவர்களை ரக்ஷித்ததும், மாவலி பக்கல் மாணுருவாய்ச்சென்று மூவடி நீரேற்றுப்பெற்று உலகளந்து இந்திரனது துன்பத்தைத் தீர்த்தொழித்ததும் ஸ்ரீமந் நாராயணனுடைய உண்மையை விளக்கவல்லன காண்மின் என்கிறார்.

என்றுகடல்கடைந்தது? என்கிற கேள்வியும் எவ்வுலகம் நீரேற்றது? என்கிற கேள்வியும் கேள்வி கேட்பதில் நோக்குடையனவல்ல; கடல் கடைந்தபோது தோன்றிய திரையும் நுரையும் மாறாமல் இப்போதுதான் கடல் கடைந்ததுபோலத் தோன்றுகின்றதே!; உலகளக்கும் போது வைத்த அடிச்சுவடு மாறாமல் “வாமனன் மண்ணிது” என்னும்படி இதோ தோன்றுகின்றதே! என்று ப்ரத்யக்ஷஸமமாக்க் காட்டுபவர்போலச் சொல்லுகிறபடி. கடல் கடைந்ததும் உலகளந்ததும் என்றைக்கோ நிகழ்ந்ததாயினும் மயர்வற மதிநலமருளப்பெற்ற இவ்வாழ்வாரது அகக்கண்ணுக்கு அச்சரிதைகளெல்லாம் ஸ்பஷ்டமாகத் தோற்றி விளங்குதலால் இங்ஙனே அருளிச்செய்யக் குறையில்லை யென்க.

நெடுநாளைக்கு முன்னே நடந்த செயல்கள் ஆழ்வார்க்கு இன்று பரத்யக்ஷம்போல் தோற்றினாலும், ‘ஐயோ! கடல்கடைந்த வக்காலத்து நாம் நேரில்கண்டு மங்களாசாஸனம் செய்யப் பெறவில்லையே! உலகளந்த அக்காலத்திலே காடும் மேடும் தாவின திருவடிகளின் கீழே நம்முடைய தலையை மடுக்கப் பெற்றிலோமே!’ என்கிற வருத்தம் தோன்றி அவ்விழவு விளங்க ஒன்றுமதனையுணரேன்நான் என்கிறார்; அச்செயல்கள் நடந்தகாலத்திலே அவற்றை நான் அநுபவியா தொழிந்தேனே! என்றவாறு. நம்மாழ்வார் *மத்துறுகடை வெண்ணெய்களவினிலுரலிடையாப்புண்ட சரிதையை அநுஸந்தித்ததும்] “எத்திறம்!” என்று மோஹித்து கிடந்தது போல் இவரும் முதலடியில் அநுஸந்தித்த செயல்களிலே மோஹித்து “ஒன்றும் தனையுணரேன் நான்” என்கிறார் என்று முரைப்பர்.

முதலடியிலே கடல் கடைந்ததும் உலகளந்ததும் அநுஸந்திக்கவே அக்கடலிலும் அவ்வுலகத்திலும் எம்பெருமானுக்குள்ள ஸம்பந்தங்கள் திருவுள்ளத்திலே ஞாபகத்திற்கு வர அவற்றைப் பின்னடிகளிற் பேசி அநுபவிக்கிறார். கடலில் எம்பெருமான் செய்த காரியங்களை மூன்றாமடியிலும் உலகுக்காக அவன் செய்த காரியங்களை நான்காமடியிலும் அருளிச் செய்கிறார்.

இராவண ஸம்ஹாரம் செய்து பிராட்டியை மீட்டிக் கொணர்வதற்காக இலங்கைக் கெழுந்தருளும்போது 2.“மறிகடல் நெறிபட மலையால் அரிகுலம் பணிகொண்டு அலைகடலடைத்தான்” என்றபடி ஸேதுபந்தனம் பண்ணுனதும், பிராட்டியைக் கைக்கொண்டு மீண்டெந்தருளும்போது அதனை உடைத்ததும், 1. “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தயாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்ற” என்றபடி * தன்தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பிப் பள்ளிகொண்டிருத்தலுமாகிய கடலிலே செய்த காரியங்கள் அநுஸந்திக்கப்பட்டன.

ஆதியில் படைத்ததும், வராஹாவதாரத்தில் ஹிரண்யாக்ஷனைக் கொன்று இடந்ததும், ப்ரளயம் வந்தபோது திருவயிற்றினுள்ளே வைதிட்டதும், பிறகு வெளிப்படுத்தியதுமாகிய இவை உலகுக்காகச் செய்த செயல்களாக அநுஸந்திக்கப்பட்டன.

இப்படிப்பட்ட அதிமாநுஷ சேஷ்டிதங்களைச் செய்தருளின ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருளென்றும், அவனுடைய உண்மையை இச்செயல்களே ஸாதித்துத் தரவல்லன என்றும் இப்பாசுரத்தால் அறிவிக்கப்பட்டதாயிற்று.

English Translation

The ocean was churned, -when I do not know. The ocean you made a bridge on, parted, and slept on, -was it not that one? You took the Earth-gift, -where, I do not know, the Earth you made, lifted, ate and remade, -was it not this Earth?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain