nalaeram_logo.jpg
(2066)

கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும்,

அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,

சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,

மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே.

பதவுரை

கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ்

-

கல்லாலே செய்யப்பட்டு ஓங்கின பெரிய திருமதின்களாலே சூழப்பட்ட

கச்சி

-

காஞ்சீபுரத்திலே

கடல் கிடந்த கனி யே என்றும்

-

திருப்பதாற்கடலில் கண்வளர்ந்தருளுகிற கனிபோன்ற வனே! என்றும்.

அல்லி அம் பூ மலர் பொய்கை

-

தாதுகள்மிக்குப் பரிமளமுடையனவாய் அழகியவான புஷ்பங்களையுடைய தடாகங்களையும்

பழனம்

-

நீர்நிலங்களையும்

வேலி

-

சுற்றும் வேலியாகவுடைய

அணி அழுந்தூர்

-

அழகிய திருவழுந்தூரிலே

நின்று

-

நின்றருளி

உகந்த

-

திருவுள்ளமுவந்திருக்கின்ற

அம்மான் என்றும்

-

ஸ்வாமியே! என்று (சொல்லி)

சொல் உயர்ந்த

-

நாதம் மிக்கிருப்பதாய்

நெடு

-

இசை நீண்டிருப்பதான

மேய

-

எழுந்தருளியிருக்கிற

களிறுஎன்றும்

-

மதயானை போன்றவனே! என்றும்

வீணை

-

வீணையை

முலை மேல்

-

தனது தனங்களின் மீது

தாங்கி

-

தாங்கிக் கொண்டு

தூ முறுவல்

-

பரிசுத்தமான மந்தஹாஸத்தாலே

நகை

-

பல்வரிசை

இறையே தோன்ற

-

சிறிதே விளங்கும்படியாக

நக்கு

-

சிரித்து

மெல் விரல்கள்

-

(தனது) மெல்லியவிரல்கள்

சிவப்பு எய்த

-

சிவக்கும்படியாக

தடவி

-

(அந்தவீணையைத்) தடவி

ஆங்கே

-

அதற்குமேலே

என்பேதை

-

என்பெண்ணானவள்

மென் கிளிபோல்

-

கிளிப்பிள்ளைபோலே

மிக மிழற்றும்

-

பலபடியாகப் பாடாநின்றாள்ஃ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** கீழ்ப்பாட்டில், கிளிப்பிள்ளை திருநாமங்களைச் சொல்லக்கேட்டு ஆச்வாஸமடைந்து அதனையும் கௌரவித்தபடியைச் சொல்லி நின்றது. அந்த நிலைமைபோய்த் தன் வாயாலே திருநாமத்தைச் சொல்லி அது தன்னை வீணையிலே ஏறிட்டு ஆலாபித்தாள்; அந்த வீணையானது ஸம்ச்லேஷதசையிலே தன் படிகளையும் அவன்படிகளையும் இட்டு வாசிக்கப் பெறுவதாகையாலே அந்த வீணைமுகத்தாலே அவன்வடிவை ஸாக்ஷாத்கரித்து அந்த வீணையை அவனாகவேகொண்டு, அவனோடு ஸம்ச்லேஷிக்குமிடத்திற் பண்ணும் வியாபார விசேஷங்களை இவ்வீணையிலே பண்ணா நின்றாள்; இவள் உணர்ந்தாள் என்னவாய்த் தலைக்கட்டப் புகுகிறதோ வென்று திருத்தாய் இன்னாப்போடே பேசும் பாசுரம் இது.

கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சிமேய களிறென்றும் = கல்லாலே செய்யப்பட்டுப் பிரதிகூலர்க்கு அணுகவொண்ணாதபடி ஓக்கத்தையுடைத்தாய், உள்ளுக்கிடக்கிற யானைக்கு யதேச்ச விஹாரம் பண்ணுதற்குப் பாங்கான விஸ்தாரத்தையுமுடைத்தான திருமதிளாலே சூழப்பட்ட திருக்கச்சிமாநகரில் நித்யவாஸஞ்செய்கின்ற மத்தகஜமே! என்றும்.

இங்குக் கச்சிமேயகளிறு என்கிறது திருப்பாடகத்து நாயனாரை என்பர் பெரியவாச்சான்பிள்ளை. திருவத்திமாமலையில் நின்றருளாநின்ற பேரருளாளப் பெருமாளை என்று அருளிச்செய்திருக்கலாம்; அவருடைய திருவுள்ளமங்ஙனே நெகிழ்ந்தபடி. திருப்பாடகத்து நாயனாராக அருளிச்செய்தற்கு ஒருபொருத்தமுண்டு ; “நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து, அன்று வெஃகாணைக் கிடந்தது – என்று திருமழிசைப்பிரான் அநுபவித்தபடியை இம் மூன்றுஸ்தலத்திலும் அநுபவிக்கிறாள் இவள்“ என்றுமேலே நிர்வஹித்தருளுகையாலே அதற்குப் பொருந்தும், திருவழுந்தூரில் நின்ற திருக்கோலமும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருக்கோலமுமாக அநுபவிக்கிறாரென்று நிர்வஹிப்பதில் ஒரு சமத்கார அதிசயமுண்டு காணும்.

கடல்கிடந்த கனியே யென்றும் = கச்சிமேய களிறு தோன்றினவிடம் திருப்பாற்கடல் போலும். அதிலே பழுத்த பழம்போலே கண்வளர்ந்தருளுகிற பரமபோக்யனே! கனியானது கண்டபோதே நுகரத்தக்கதும் புஜிப்பாரைப் பெறாதபோது அழிந்துபோவதுமாயிருக்கும்; அப்படியே தன்னை யநுபவிப்பார் தேட்டாமாய் அவர்களைப் பெறாதபோது தான் அழியும்படியா யிருப்பன் எம்பெருமான். போக்தாக்களைக் குறித்து அவஸா மெதிர்பார்த்திருப்பவன் எனக்கு முகங்காட்டாதொழிவதே! என்றும்“, போக்தர்களைப் பெறாதபோது அழியும்படியாயிருக்கிறவன் தன்னைப் பெறாதபோது முடியும்படியாயிருக்கிற வெனக்கு முகங்காட்டாதொழிவதே! என்றும் வருந்துவது தோன்றச் சொல்லுகிறபடி.

அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழனவேலியணியழுந்தூர் நின்ற கந்த வம்மானென்னும் = தாதுமிக்கு நறுமணங் கமழ்ந்து அழகியவாயிருந்துள்ள புஷ்பங்களை யுடைத்தான தடாகங்களையும் நீர்நிலங்களையும் வேலியாகவுடையதாய், பிரதிகூலர்க்கு அணுகவொண்ணாததாய் அநுகூலர்க்குத் தாபஹரமாய்ப் பரமபோக்யமாயிருந்துள்ள திவ்யதேசத்திலே ஸம்ஸாரிகள் ஆச்ரயிக்கலாம்படி நின்று, அவர்கள் தன் நிலையழகையும் அதுக்கடியான திருக்குணங்களையு மநுஸந்தித்துத் திருவடிகளைக் கிட்டினால் உகப்பானும் தானேயாயிருக்கும் பெருமானே! – என்றிங்ஙனே சில திருநாமங்களை யிட்டுப்பாடி.

சொல்லுயர்ந்த நெடுவீணைமுலைமேல்தாங்கி = ‘கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ்கச்சிமேய களிறு‘ இத்யாதிகளை வீணையிலேட்டுப் பாடினாள்; வீணையை ஸ்வர்சித்வாறே நாயகன் ஸம்ச்லேஷதசையில் தன்னுடைய போக்யதையையும் இவளுடைய யோக்யதையையும் வீணையிலேறிட்டு வாசிக்கும்படியை ஸாக்ஷாத் கரித்து, அதைத் தடவும் திருக்கையை ஸாக்ஷாத்கரித்து, அதுக்கு ஆச்ரயமான திருத்தோளை ஸாக்ஷாத்கரித்து, அதுக்கு ஆச்ரயமான வடிவையும் ஸாக்ஷாத்கரித்து அவனை ஸம்ச்லேஷதசையிலே தன்மார்பில் ஏறிட்டுக்கொள்ளுமாபோலே வீணையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டாள்; “க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பார்த்து; கரவிபூஷணம் – பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்“ (ஸ்ரீராமாயணம், ஸுந்தரகாண்டம் 3-4.) என்னு   ங் கணக்கிலேயாருற்று இதுவும். திருவடி தந்த திருவாழி மோதிரத்தைக் கைநீட்டி வாங்கிக் கண்ட ஸ்ரீராமபிரானையே கண்டதாக மகிழ்ந்தது போல.

தூமுறுவல் நகை இறையே தோன்ற நக்கு = வீணையை முலைமேல் தாங்கினவாறே அவனையே ஸ்பர்சித்ததாக நினைக்கையாலுண்டான மகிழ்ச்சியால் பல்வரிசைகள் சிறிதே பிரகாசிக்கும்படி புன்முறுவல் செய்து, ஸுருமாரமாய் இயற்கையாகவே சிவந்துள்ள விரல்கள் இன்னமும் சிவப்புமல்கும்படி தந்திக்கம்பிகளை வெருடி அதுக்குமேலே கிளிபோல வும் மிக மிழற்றத் தொடங்கினாள் என்றாளாயிற்று.

என்பேதையே = என்வயிற்றிற்பிறந்த சிறுபெண் இவையெல்லாம் எங்கே கற்றாள்! என்றவாறு.

English Translation

My daughter rests her big ornate Vina on her bosom, with a smile that reveals jasmine-like teeth, She plays over the frets till her slender fingers redden, sinking softly like a parrot, "O Elephant residing in Kanchi surrounded by high masonry walls, O sweet fruit reclining in the ocean, O Lord standing in beautiful Alundur Surrounded by water tanks with lily blossoms".

2066

கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய

களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும்,

அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி

அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,

சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித்

தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,

மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே

மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே.

My daughter rests her big ornate Vina on her bosom, with a smile that reveals jasmine-like teeth, She plays over the frets till her slender fingers redden, sinking softly like a parrot, "O Elephant residing in Kanchi surrounded by high masonry walls, O sweet fruit reclining in the ocean, O Lord standing in beautiful Alundur Surrounded by water tanks with lily blossoms".

கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ்

-

கல்லாலே செய்யப்பட்டு ஓங்கின பெரிய திருமதின்களாலே சூழப்பட்ட

கச்சி

-

காஞ்சீபுரத்திலே

கடல் கிடந்த கனி யே என்றும்

-

திருப்பதாற்கடலில் கண்வளர்ந்தருளுகிற கனிபோன்ற வனே! என்றும்.

அல்லி அம் பூ மலர் பொய்கை

-

தாதுகள்மிக்குப் பரிமளமுடையனவாய் அழகியவான புஷ்பங்களையுடைய தடாகங்களையும்

பழனம்

-

நீர்நிலங்களையும்

வேலி

-

சுற்றும் வேலியாகவுடைய

அணி அழுந்தூர்

-

அழகிய திருவழுந்தூரிலே

நின்று

-

நின்றருளி

உகந்த

-

திருவுள்ளமுவந்திருக்கின்ற

அம்மான் என்றும்

-

ஸ்வாமியே! என்று (சொல்லி)

சொல் உயர்ந்த

-

நாதம் மிக்கிருப்பதாய்

நெடு

-

இசை நீண்டிருப்பதான

மேய

-

எழுந்தருளியிருக்கிற

களிறுஎன்றும்

-

மதயானை போன்றவனே! என்றும்

வீணை

-

வீணையை

முலை மேல்

-

தனது தனங்களின் மீது

தாங்கி

-

தாங்கிக் கொண்டு

தூ முறுவல்

-

பரிசுத்தமான மந்தஹாஸத்தாலே

நகை

-

பல்வரிசை

இறையே தோன்ற

-

சிறிதே விளங்கும்படியாக

நக்கு

-

சிரித்து

மெல் விரல்கள்

-

(தனது) மெல்லியவிரல்கள்

சிவப்பு எய்த

-

சிவக்கும்படியாக

தடவி

-

(அந்தவீணையைத்) தடவி

ஆங்கே

-

அதற்குமேலே

என்பேதை

-

என்பெண்ணானவள்

மென் கிளிபோல்

-

கிளிப்பிள்ளைபோலே

மிக மிழற்றும்

-

பலபடியாகப் பாடாநின்றாள்ஃ

*** கீழ்ப்பாட்டில், கிளிப்பிள்ளை திருநாமங்களைச் சொல்லக்கேட்டு ஆச்வாஸமடைந்து அதனையும் கௌரவித்தபடியைச் சொல்லி நின்றது. அந்த நிலைமைபோய்த் தன் வாயாலே திருநாமத்தைச் சொல்லி அது தன்னை வீணையிலே ஏறிட்டு ஆலாபித்தாள்; அந்த வீணையானது ஸம்ச்லேஷதசையிலே தன் படிகளையும் அவன்படிகளையும் இட்டு வாசிக்கப் பெறுவதாகையாலே அந்த வீணைமுகத்தாலே அவன்வடிவை ஸாக்ஷாத்கரித்து அந்த வீணையை அவனாகவேகொண்டு, அவனோடு ஸம்ச்லேஷிக்குமிடத்திற் பண்ணும் வியாபார விசேஷங்களை இவ்வீணையிலே பண்ணா நின்றாள்; இவள் உணர்ந்தாள் என்னவாய்த் தலைக்கட்டப் புகுகிறதோ வென்று திருத்தாய் இன்னாப்போடே பேசும் பாசுரம் இது.

கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சிமேய களிறென்றும் = கல்லாலே செய்யப்பட்டுப் பிரதிகூலர்க்கு அணுகவொண்ணாதபடி ஓக்கத்தையுடைத்தாய், உள்ளுக்கிடக்கிற யானைக்கு யதேச்ச விஹாரம் பண்ணுதற்குப் பாங்கான விஸ்தாரத்தையுமுடைத்தான திருமதிளாலே சூழப்பட்ட திருக்கச்சிமாநகரில் நித்யவாஸஞ்செய்கின்ற மத்தகஜமே! என்றும்.

இங்குக் கச்சிமேயகளிறு என்கிறது திருப்பாடகத்து நாயனாரை என்பர் பெரியவாச்சான்பிள்ளை. திருவத்திமாமலையில் நின்றருளாநின்ற பேரருளாளப் பெருமாளை என்று அருளிச்செய்திருக்கலாம்; அவருடைய திருவுள்ளமங்ஙனே நெகிழ்ந்தபடி. திருப்பாடகத்து நாயனாராக அருளிச்செய்தற்கு ஒருபொருத்தமுண்டு ; “நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து, அன்று வெஃகாணைக் கிடந்தது என்று திருமழிசைப்பிரான் அநுபவித்தபடியை இம் மூன்றுஸ்தலத்திலும் அநுபவிக்கிறாள் இவள்“ என்றுமேலே நிர்வஹித்தருளுகையாலே அதற்குப் பொருந்தும், திருவழுந்தூரில் நின்ற திருக்கோலமும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருக்கோலமுமாக அநுபவிக்கிறாரென்று நிர்வஹிப்பதில் ஒரு சமத்கார அதிசயமுண்டு காணும்.

கடல்கிடந்த கனியே யென்றும் = கச்சிமேய களிறு தோன்றினவிடம் திருப்பாற்கடல் போலும். அதிலே பழுத்த பழம்போலே கண்வளர்ந்தருளுகிற பரமபோக்யனே! கனியானது கண்டபோதே நுகரத்தக்கதும் புஜிப்பாரைப் பெறாதபோது அழிந்துபோவதுமாயிருக்கும்; அப்படியே தன்னை யநுபவிப்பார் தேட்டாமாய் அவர்களைப் பெறாதபோது தான் அழியும்படியா யிருப்பன் எம்பெருமான். போக்தாக்களைக் குறித்து அவஸா மெதிர்பார்த்திருப்பவன் எனக்கு முகங்காட்டாதொழிவதே! என்றும்“, போக்தர்களைப் பெறாதபோது அழியும்படியாயிருக்கிறவன் தன்னைப் பெறாதபோது முடியும்படியாயிருக்கிற வெனக்கு முகங்காட்டாதொழிவதே! என்றும் வருந்துவது தோன்றச் சொல்லுகிறபடி.

அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழனவேலியணியழுந்தூர் நின்ற கந்த வம்மானென்னும் = தாதுமிக்கு நறுமணங் கமழ்ந்து அழகியவாயிருந்துள்ள புஷ்பங்களை யுடைத்தான தடாகங்களையும் நீர்நிலங்களையும் வேலியாகவுடையதாய், பிரதிகூலர்க்கு அணுகவொண்ணாததாய் அநுகூலர்க்குத் தாபஹரமாய்ப் பரமபோக்யமாயிருந்துள்ள திவ்யதேசத்திலே ஸம்ஸாரிகள் ஆச்ரயிக்கலாம்படி நின்று, அவர்கள் தன் நிலையழகையும் அதுக்கடியான திருக்குணங்களையு மநுஸந்தித்துத் திருவடிகளைக் கிட்டினால் உகப்பானும் தானேயாயிருக்கும் பெருமானே! என்றிங்ஙனே சில திருநாமங்களை யிட்டுப்பாடி.

சொல்லுயர்ந்த நெடுவீணைமுலைமேல்தாங்கி = ‘கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ்கச்சிமேய களிறு‘ இத்யாதிகளை வீணையிலேட்டுப் பாடினாள்; வீணையை ஸ்வர்சித்வாறே நாயகன் ஸம்ச்லேஷதசையில் தன்னுடைய போக்யதையையும் இவளுடைய யோக்யதையையும் வீணையிலேறிட்டு வாசிக்கும்படியை ஸாக்ஷாத் கரித்து, அதைத் தடவும் திருக்கையை ஸாக்ஷாத்கரித்து, அதுக்கு ஆச்ரயமான திருத்தோளை ஸாக்ஷாத்கரித்து, அதுக்கு ஆச்ரயமான வடிவையும் ஸாக்ஷாத்கரித்து அவனை ஸம்ச்லேஷதசையிலே தன்மார்பில் ஏறிட்டுக்கொள்ளுமாபோலே வீணையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டாள்; “க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பார்த்து; கரவிபூஷணம் பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்“ (ஸ்ரீராமாயணம், ஸுந்தரகாண்டம் 3-4.) என்னு ங் கணக்கிலேயாருற்று இதுவும். திருவடி தந்த திருவாழி மோதிரத்தைக் கைநீட்டி வாங்கிக் கண்ட ஸ்ரீராமபிரானையே கண்டதாக மகிழ்ந்தது போல.

தூமுறுவல் நகை இறையே தோன்ற நக்கு = வீணையை முலைமேல் தாங்கினவாறே அவனையே ஸ்பர்சித்ததாக நினைக்கையாலுண்டான மகிழ்ச்சியால் பல்வரிசைகள் சிறிதே பிரகாசிக்கும்படி புன்முறுவல் செய்து, ஸுருமாரமாய் இயற்கையாகவே சிவந்துள்ள விரல்கள் இன்னமும் சிவப்புமல்கும்படி தந்திக்கம்பிகளை வெருடி அதுக்குமேலே கிளிபோல வும் மிக மிழற்றத் தொடங்கினாள் என்றாளாயிற்று.

என்பேதையே = என்வயிற்றிற்பிறந்த சிறுபெண் இவையெல்லாம் எங்கே கற்றாள்! என்றவாறு.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain