nalaeram_logo.jpg
(2064)

கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும்,

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே. என்றும்,

அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும்,

சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.

பதவுரை

(இப்பெண்பிள்ளை)

கல் மாரி

-

(இந்திரன் பெய்வித்த) கல் மழையை

கல் எடுத்து

-

ஒருமலையை யெடுத்துப் பிடித்து

காத்தாய் என்றும்

-

தடுத்தவனே! என்றும்,

நாமரு பூகச்சி ஊரகத்தாய் என்றும்

-

விரும்பத்தக்கதாய் அழகிய தான காஞ்சீபுரத்தில் திருவூரகத்தில் நின்றருளினவனே! என்றும்,

அட்டாய் என்றும்

-

ஒழித்தவனே! என்றும்

மாகீண்ட

-

குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியை கீண்டொழித்த

கைத்தலத்து

-

திருக்கைகளையுடைய

என் மைந்தா என்றும்

-

எனது மைந்தனே! என்றும்

தன் கிளியை

-

தன்னுடைய கிளியை நோக்கி

வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்

-

வில்லைமுறித்துப் பிராட்டியைக் கைப்பிடித்தவனே! என்றும்,

வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும்

-

திருவெஃகாவில் பள்ளி கொண்டருளும் பிரபுவே! என்றும்,

அன்று

-

முன்பொருகாலத்தில்

மல்லரை

-

மல்லர்களை

மல் அடர்த்து

-

வலிமையடக்கி

சொல் எடுத்து

-

திருநாமத்தின் முதற்சொல்லையெடுத்துக் கொடுத்து

சொல் என்று

-

(மேலுள்ளதை நீயே) சொல் என்று சொல்லி,

(அது சொல்லத் தொடங்கினவாறே)

துணை முலை மேல்

-

உபயஸ்தரங்களிலும்

துளி சோர

-

கண்ணீர் பெருகப் பெற்று

சோர்நின்றாள்

-

துவளாநின்றாள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகிற் பெண்மணிகளெல்லாம் ஒரு பைங்கிளியை வளர்த்துப் போதுபோக்குதல் இயல்பு. அப்படியே இப்பரகால நாயகியும் ஒரு கிளியை வளர்த்திருந்தாள்; அதற்கு எம்பெருமான் திருநாமங்களைக் கற்பித்திருந்தாள். இவள் உல்லாஸமாயிருக்குங் காலங்களிலே அக்கிளி அருகிருந்து இன்சொல் மிழற்றும்; இப்போது இவள் தளர்ந்திருப்பது கண்டு கிளி தானும் தளர்ந்திருந்தமையால் ஒரு மூலையிலே பதுங்கிக் கிடந்தது. தாயானவள் அக்கிளியை மகளின் முன்னே கொணர்ந்து விட்டு இவள் உகக்கும்படியான சில திருநாமங்களைச் சொல்லி மகிழ்விக்குமாறு ஏவினாள்; ஏவினவிடத்தும் அது பரகாலநாயகியின் முகத்திலு பயிர்ப்பைக்கண்டு ஒன்றும் வாய்திறக்க மாட்டிற்றில்லை; அவள் தானே கிளியை நோக்கி ‘நான் கற்பித்த திருநாமங்களைச் சொல்லாய், சொல்லாய்‘ என்ற விடத்தும் அது வாய்திறவாதிருக்க, முன்புதான் கற்பித்த திருநாமங்களின் தலைப்பை எடுத்தெடுத்துக் கொடுத்து ‘இதைச்சொல், இதைச்சொல்‘ என்ன அதுவும் அப்படியே சொல்ல. அதுசொன்ன திருநாமங்களைக் கேட்டுக் கண்ணுங் கண்ணீருமாய் நின்றபடியை எடுத்துறைக்கிறாள் திருத்தாய்.

கண்ணபிரான் * சோலைசூழ்ந்த பெரியகுன்றை யெடுத்து ரக்ஷித்திருக்க இவள் “கல் எடுத்து“ என்று ஒரு சிறிய கல்லையெடுத்தானாகச் சொல்லுவது எங்ஙனேயெனின்; அவ்வளவு அநாயஸமாக எடுத்தமை சொன்னபடி. “கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமுழிந்தில வாடிற்றில, வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்“ என்ற பெரியாழ்வார் திருமொழியுங் காண்க. வீரபத்நியாகை யாலே “பொல்லாவாக்கனைக் கிள்ளிக்களைந்தானை“ என்றாற்போலே சொல்லுகிறாளென்க.

“நல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்“ என்ற சொல்நயத்தை நோக்கி பட்டர் அருளிச்செய்வாராம்- ‘கல்மழையாகையாலே கல்லையெடுத்து ரக்ஷித்தான், நீர் மழையாகில் கடலை யெடுத்து ரக்ஷிக்குங்காணும்“ என்று. இதனால், இன்னதைக் கொண்டு இன்னகாரியஞ் செய்வதென்கிற நியதி எம்பெருமானுக்கில்லை யென்பதும் ஸர்வசக்தனென்பதும் விளக்கப் பட்டதாம். “பிறரால் வந்த ஆபத்திலோ ரக்ஷிக்கலாவது? உன்னால்வந்த ஆபத்தில் ரக்ஷிக்க லாகாதோ? கல்வர்ஷத்திலகப்பட்டாரையோ ரக்ஷிக்கலாவது? அவ்வூராகப் பட்ட நோவை ஒருத்திபட்டால் ரக்ஷிக்கலாகாதோ? என்னுடைய ரக்ஷணத்துக்கும் ஏதேனும் மலையை யெடுக்கவேணுமோ? மலையை யெடுத்த தோளைக் காட்டவமையாதோ?“ என்ற பரமபோக்யமான வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

காமருபூங்கச்சியூரகத்தாயென்றும்=கல்லெடுத்துக் கல்மாரிகாத்த காலத்தை இழந்து பிற்பட்டவர்களுக்கும் ஸர்வஸ்வதானம் பண்ணுகைக்காகவன்றோ திருவூரகத்திலேவந்து அந்த க்ருஷ்ணாவதாரத்திற்குத் தோள்தீண்டியான த்ரிவிக்ரம் வேஷத்தோடே நி்ன்றருளிற்று; இதுவும் பாவியேனுக்குப் பயன்படாதொழிவதே! என வருத்தந் தோற்றக் கூறுகிறபடி.

இப்பாட்டில், விபவாவதார சேஷ்டிதங்களைக் கூறுவன சில அடிகளும் அர்ச்சாவதார நிலையைக் கூறுவன சில அடிகளுமுள்ளன; இவை மாறி மாறிக் கோக்கப்பட்டிருக்கின்றன; அவதாரங்களை ஒரு கோர்வையாகவும் திருப்பதிகளை ஒரு கோர்வையாகவும் அநுபவிக்கலாமே, அப்படி அநுபவியாமல் கலசிக்கலசி அநுபவிக்கிறார்; ஏனென்னில் ; பிடிதோறும் நெய்வார்த்து உண்பாரைப்போலே திருப்பதிகளையொழியத் தமக்குச் செல்லாதபடியாலே திருப்பதிகளைப்பேசுகிறார். திருப்பதிகளின் அடிப்பாடு சொல்லவேண்டுகையாலே அவதாரத்திலிழிகிறார். மற்றையாழ்வார்களுக்கும் இவர்க்குமுண்டான வாசி இது காண்மின்; அவர்கள், மேன்மையை அநுபவிக்கவேண்டில் அவதாரங்களைப் பேசுவர்கள்; அந்த நீர்மையை ஸாக்ஷாத்கரிக்கைக்காகத் திருப்பதிகளிலே இழிவர்கள். இவ்வாழ்வார், மேன்மையை யநுபவிப்பதும் திருப்பதிகிறே நீர்மையை திருப்பதிகளிலே, அதை ஸாக்ஷாத்கரிப்பதும் திருப்பதிகளிலே.

வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாயென்றும்=‘இவ்விலை முறித்தார்க்கு இவளை விவாஹம்பண்ணிக் கொடுக்கக்கடவேன்‘ என்று ஜநகன் சொல்லி வைத்திருக்கையாலே இராமபிரான் வில்லை யெடுத்து நாணேற்றி வளைக்கப் புக்கவளவிலே வில் முறிந்தது; அவ்வளவிலே நெடுநாளைய குறைதீரப் பெற்ற ஜநக மஹாராஜன் பொற்கிண்டியைக் கொணர்ந்து தாரை வார்த்துத் தத்தம் பண்ணப்புக, அதுகண்ட இராமபிரான் ‘நான் ஏதேனும் நெடுநாளைய ப்ரஹமசாரியாயிருந்து பெண் கொடுப்பாராருமில்லையே யென்று தடுமாறிப் பெண்தேடி வந்தேனோ; ராஜகுமாரனாகையாலே வீரவாசி கொண்டாட வந்தேனத்தனை; உமக்குப் பெண் விவாஹஞ்செய்ய வேண்டியிருந்தால் அதுவிஷயம் நமக்குத் தெரியாது; வஸிஷ்டாதிகளையும் நமதுஐயரையும் கேட்டுக்கொள்வது‘ என்று கம்பீரமாகச் சீர்மையுங் கண்டு பிராட்டி நீராயுருகினாள்; வில்முறித்த ஆயாஸந்தீர அவளது தோளிலே தோய்ந்தானிராமபிரான்; அதைப் பேசுகிறாள் வில்லிறத்து மெல்லயல்தோள் தோய்ந்தாய்! என்று. இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “.........வில்லைமுறித்த ஆண்பிள்ளைத் தனத்தையும் வார்த்தை சொன்ன சீர்மையையுங் கண்டு நீராடினாள் பிராட்டி“ எனத் திருக்திக்கொள்க. தோய்தல் நீரிலேயாகையாலே இங்குத் ‘தோய்ந்தாய்‘ என்ற சொல் நயத்துக்கு ஏற்ப ‘நீரானாள்‘ என்றது.

வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே! என்றும் = பிராட்டியைப் பாணிக்ரஹணம் பண்ணி வந்து அந்த இளைப்புத்தீரவும் அந்த மணக்கோலம் விளங்கவும் துயிலமர்ந்தவிடத் திருவெஃகா வென்கிறாள். ஒரு ராஜகுமாரன்வந்து கிடக்கிறான் என்னலாம்படி யிருக்கிறதாயிற்று.

(மல்லடர்த்து இத்யாதி.)  மஹாபாபிகளான மல்லர்கள் ஏதேனுமொரு வியாஜத்தாலே உன்னுடைய தோளோடே அணையப் பெற்றார்கள், அவ்வளவு பாக்கியமும் எனக்குக் கிடைக்கவில்லையே! என்கிற கிலாய்ப்புத்தோற்றச் சொல்லுகிறபடி. நானும் இத்தன்மை நீங்கிப் பிரதிகூலர் வடிவெடுத்து வந்தேனாகில் உன் தோளோடே அணையப் பெறலாம் போலும் என்கிறாளென்றுங் கொள்க.

மாகீண்ட கைத்தலத்து என்மைந்தா! என்றும் =  திருவாய்ப்பாடியில் ஆய்ச்சிகளுக்கு முற்றூட்டான திருமேனியைப் பாதுகாத்துக் கொண்டாய்; அதை எனக்கு ஒருநாள் காட்டினால் போதுமே, இதுவும் அரிதாயிற்றே! என்று நொந்து பேசுகிறபடி.

சொல்லெடுத்து = ஆக இப்படிப்பட்ட திருநாமங்களின் ஆதியை யெடுத்துக் கொடுத்துக் கிளியைச் சொல்லுவிக்க, அவற்றின் பொருள் நெஞ்சில் உறைக்கவே இப்படி ஆபத்துக்களுக்கு உதவுமவனாகப் புகழ்பெற்றவன் இன்று நம்மளவிலே உதவாதொழிவதே! என்று கண்ணுங் கண்ணீருமாயிருந்து கரைகிறபடியைத் திருத்தாயார் கூறினாளாயிற்று.

English Translation

"O Lord who stopped a halistorm holding up a mount!", she calls, then "O Lord of Urakam in kanchi surrounded by fragrant groves!", then again, "O Lord who embraced the silm Sita after wielding the bow!  O My king who reclines in the temple of Venka! O wrestler who vanquished the mighty wrestlers. O Mighty-armed one who ripped apart the horse kesin's Jaws!". Word  by word she teaches her pet parrot to speak, then weeps over the tight breasts!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain