(2051)

வானவர் தங்கள் கோனும் மலர்மிசை அயனும், நாளும்

தேமலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை,

மானவேல் கலியன் சொன்ன வண்டமிழ் மாலை நாலைந்தும்,

ஊனம தின்றி வல்லார் ஒளிவிசும் பாள்வ ர் தாமே.

 

பதவுரை

வானவர் தங்கள் கோனும்

தேவேந்திரனும்

மலர்மிசை அயனும்

பூவிற்பிறந்த பிரமனும்

நாளும்

நாள்தோறும்

தே மலர் தூவி

தேன்மிக்க புஷ்பங்களைப் பணிமாறி

ஏத்தும்

துதிக்கும்படியாகவுள்ள

சே அடி

செவ்விய திருவடிகளை யுடையனாய்

செம் கண்

செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையனான

மாலை

ஸர்வேச்வரனைக்குறித்து,

மானம் வேல்

பெருமைதங்கிய வேற்படையை யுடையரான

கலியன்

திருமங்கையாழ்வார்

சொன்ன

அருளிச்செய்த

வண் தமிழ்  செந்தமிழினாலாகிய

மாலை நாலைந்தும்

இப்பாசுரமிருபதையும்

ஊனம் அது இன்றி

குறையொன்று மில்லாமல்

வல்லார் தாம்

கற்றுவல்லவர்கள்

ஒளி விசும்பு

பரமபதத்தை

ஆள்வர்

ஆளப்பெறுவர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தேவர்கட்கு இறைவனான இந்திரனும் திருநாபிக் கமலத்தில் தோன்றிய நான் முகக் கடவுளும் இடைவிடாது நன்மலர்களைப் பணிமாறித் துதிக்கப் பெற்றிருக்கின்ற செங்கண்மால் விஷயமாகக் கொற்றவேற்பரகாலன் கலியன் சொன்ன இவ்விருபது பாசுரங்களையும் ப்ரயோஜநாந்தரங்களை விரும்புதலாகிற ஊனமின்றியே அநந்யப்ரயோஜநராய்க் கற்று வல்லவர்கள் தெளிவிசும்பான திருநாட்டை ஆளப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

 

English Translation

This fragrant garland of Tamil songs by spear-wielding Kalian extols the adorable. Lord with lotus eyes and lotus feet whom Brahma and indra worship with nectared flowers.  Those who master it perfectly will rule over the radiant sky-worlds.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain