(2044)

இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க, என்றன்

அரும்பி ணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு,

சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட,

கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே.

 

பதவுரை

இரும்பு

-

இரும்பானது

அனன்று

-

பழுக்கக் காய்ச்சப் பெற்று

உண்ட

-

உட்கொண்ட

நீரும்

-

ஜலமும்

போதரும்

-

வெளியிலே வந்துவிடும்;

கொள்க

-

(இதை) உறுதியாக நினையுங்கோள்;

என் தன்

-

என்னுடையவையாய்

அரு

-

போக்கமுடியாதவையாய்

பிணி பாவம் எல்லாம்

-

நோய்களுக்கு அடியான பாவங்களெல்லாம்

என்னை விட்டு அகன்றன

-

என்னை விட்டு நீங்கிப்போயின

கரும்பு அமர்

-

வண்டுகள் பொருந்திய

சோலை சூழ்ந்த

-

சோலைகளாலே சூழப்பட்ட

மா அரங்கம்

-

மாட்சிமைதங்கிய ஸ்ரீரங்கத்தை

கோயில் கொண்ட

-

இருப்பிடமாகக் கொண்டு வாழ்கிற

கரும்பினை

-

பரமபோக்யனான எம்பெருமானை

என் கண் இணை

-

எனது இரண்டு கண்களும்

கண்டு கொண்டு

-

பார்த்தவண்ணமாய்

களிக்கும் ஆறு ஏ

-

மகிழ்ச்சியடையும் விதம் என்னே! (என்று வியக்கிறார்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்மைவிட்டு ஒருகாலும் பிரிக்கக்கூடாமலிருந்த அரும்பிணி பாவமெல்லாம் அகன்றுபோன ஆச்சரியத்தினால் இரும்பனன்றுண்ட நீரும் போதரும் என்கிறார். இரும்பானது பழுக்கக் காயந்து நீரைக்குடித்தால் குடித்த நீரடங்கலும் இரும்பிலே சுவறிப்போமத் தனை யொழிய அந்த இரும்பில் நின்றும் வெளிப்படுத்தியெடுக்க முடியாதென்பது லோகாது பவஸித்தமே யாகிலும், அந்த நீரும் அந்த இரும்பில் நின்று வெளிப்பட்டுவிடுமென்று நிச்சயிக்கலாம்; ஏனென்றால், அனன்ற இரும்புபோன்ற என்னிடத்திலே தனித்துப் பிரித்துக் களைந்தொழிக்க வொண்ணாதபடி மங்கிக்கிடந்த அரும்பிணி பாவங்கள் வெளிப்பட்டனவன்றோ; ஆதலால் இதுபோல் அதுவும் நேரலாம் என்கிறாராயிற்று.

அரும்பிணி பாவமெல்லாம் அகலவே, திருவரங்கம் பெரிய கோயிலிலே நித்யஸந்நிதி பண்ணியிருக்கின்ற பரமபோக்யனான பெருமானைக் கண்ணாரக்கண்டு களிக்கப்பெற்றே னென்கிறார் பின்னடிகளில். தகாத விஷயங்களைக் கண்டுகளித்த என்கண்கள் இன்று ஸ்வரூபாநுரூபமான விஷயத்தைக் கண்டு களிக்கப்பெற்றமை என்ன பாக்கியம்! என்று அதிசயப்படுகிறார்.

 

English Translation

Even water slurped by a red hot iron is of use, take it from me.  All my terrible karmas have left me.  My eyes hover around the sweet-as-a-sugarcane-Lord of Arangam, -who has his temple amid bee-humming groves, -enjoying his form forever.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain