nalaeram_logo.jpg
(2040)

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையி னெரிநின் றுண்ணும்

கொள்ளிமே லெறும்பு போலக் குழையுமா லென்ற னுள்ளம்,

தெள்ளியீர் தேவர்க் கெல்லாம் தேவரா யுலகம் கொண்ட

ஒள்ளியீர், உம்மை யல்லால் எழுமையும் துணையி லோமே.

பதவுரை

உள்ளமோ

-

மனமோவென்னில்

ஒன்றில் நில்லாது

-

ஒரு விஷயத்திலும் பொருந்தி நிற்கிறதில்லை;

ஓசையின் எரி

-

ஓசையோடு கூடின அக்னி

நின்று உண்ணும்

-

கவ்விநின்று உண்ணப்பெற்ற

கொள்ளிமேல்

-

கொள்ளியில் அகப்பட்ட

எறும்பு போல

-

எறும்பு போலே

என் தன் உள்ளம்

-

எனது நெஞ்சானது

குழையும்

-

கைகின்றது;

அல்

-

அந்தோ! ;

(இப்படியிருப்பதனால்):

தெள்ளியீர்

-

தெளிந்த ஸ்வபாவத்தை யுடையீராய்

தேவர்க்கு எல்லாம் தேவர் ஆய்

-

தேவாதி தேவனாயிருந்து வைத்து

ஒள்ளியீர்

-

தேஜஸ்வியானவரே!

எழுமையும்

-

எந்த நிலைமையிலும்

உம்மை அல்லால்

-

தேவரீரைத் தவிர்த்து

துணை இலோம்

-

வேறு துணையற்றவர்களாளிருக்கின்றோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாட்டார் எக்கேடு கெட்டாலும் கெட்டுப்போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப்போகாதே மருவி வாழப்பெற்றனே யென்று மகிழ்ந்து எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்யகதித்வத்தை வெளியிடுகிறார். என் உள்ளமானது ஜனனமரணங்களை நினைத்து உருகா நின்றது; இதற்கு நான் செய்து கொள்ளக்கூடிய பரிஹாரமொன்றுமில்லை; நீயே துணைநிற்க வேணும் என்று எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறார்.

உள்ளமோ ஒன்றில் நில்லாது = ஊர்வசீஸாலோக்யம் வேணுமென்று நாட்டங்கலும் தவம்புரியாநிற்க, அந்த ஊர்வசிதானே அர்ஜுநனிடம் வந்து நின்று ‘எனக்குநீ நாயகனாகக் கடவை‘ என்ன; கையெடுத்துக்கும்பிட்டு ‘மாதே! எனக்கு நீ தாய்முறையாகிறாய்; இந்த விருப்பம் உனக்குத் தகாது: ‘கடக்கநில்‘ என்றான் அர்ஜுநன் தானே கீதையில் கண்ணபிரானை நோக்கி ???????????????  சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண! என்கிறாள்; அவனே அவ்வார்த்தை சொல்லும்போது நாமெல்லாம் எந்த மூலைக்கு! என்கிறார் போலும், கெட்ட விஷயங்களையே பற்றினாலும் அவற்றிலாவது நெஞ்சு நிலைத்து நிற்கிறதோ; அதிலும் தோள்மாறுகின்றது, ஒன்றிலும் நிலைத்து நிற்பதில்லை; இப்படிப்பட்ட நெஞ்சைப் படைத்திருக்கையாலே தீக்கதுவின கொள்ளிக்கட்டையில் அகப்பட்டுக் கொண்ட எறும்புபோலே துடியாநின்றேன் என்கிறார்.

எனக்குக் கலங்குகை இயற்கையானாப் போலே தேவரீர்க்குத் தெளிந்திருக்கை இயற்கையன்றோ வென்கிறார் தெள்ளீயிர் என்ற விளியினால். ஒரு மேட்டைக் கொண்டு ஒரு பள்ளத்தை நிரப்புமாபோலே தேவரீருடைய தெளிவைக்கொண்டு என்னுடைய கலக்கத்தைத் தொலைக்க வேணுமென்பது உட்கோள். (தேவர்க்கெல்லாம் தேவராய் உலகங்கொண்ட ஒள்ளியீர்) அடியவர்கட்குக் காரியம் செய்வதென்று வந்துவிட்டால் தேவரீருடைய பெருமேன்மையைச் சிறிதும் பார்ப்பதில்லையன்றோ? ‘தேவாதி தேவனாகிய நானோ யாசகனாய்ச் செல்வேன்?‘ என்று இறாய்க்காதே, ‘எவ்விதத்தாலும் அடியாருடைய அபேக்ஷிதம் தலைக்கட்டுவதே நன்று‘ என்று திருவுள்ளம்பற்றினவரன்றோ தேவரீர்! அப்படி யாசகத் தொழில் செய்ததனால் உம்முடைய தேஜஸ்ஸுக்கு ஏதேனும் குறையுண்டாயிற்றே? அதனால் மேன்மேலும் தேசு பொலியப் பெற்றீரன்றோ, இப்படிப்பட்ட ஆச்ரித பக்ஷபாதத்தைத் தேவரீரிடத்திற் கண்டவர்கள் எற்றைக்குமேழேழ் பிறவிக்கும் வேறொருவரைத் துணையாகக் கொள்வரோ? என்றாராயிற்று.

English Translation

Alas, my heart does not stay at one place. I fear like ants caught between two burning ends of firewood.  O clear one! O Lord of gods, O Radiant one who took the Earth! Through seen lives, you alone are our refuge!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain