nalaeram_logo.jpg
(2037)

மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட,

கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப்

பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப்

பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே?

பதவுரை

மூவரில்

-

த்ரி மூர்த்திகளுள்

முதல்வன் ஆய ஒருவனை

-

முதற் கடவுளாகிய அத்விதீயனும்

உலகம் கொண்ட கோவினை

-

(மாவலியிடத்தில்) உலகங்களை இரந்து பெற்ற ஸ்வாமியும்

குடந்தை மேய

-

திருக்குடந்தையில் நித்ய வாஸம் செய்பவனும்

குரு மணி திரளை

-

சிறந்த நீலரத்னக்குவியல் போன்றவனும்

இன்பம் பாவினை

-

இன்பந்தரும் பாட்டுக்களைப் போலே சுவைமிக்கவனும்

பச்சை தேனை

-

பசுந்தேன்போலே நாவுக்கு இனியனும்

பைம் பொன்னை

-

பசும்பொன்போல் விரும்பத்தக்க கவனும்

அமரர் சென்னி பூவினை

-

நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருப்பவனுமான பெருமானை

புகழும்

-

புகழ்கின்ற

தொண்டர் தாம்

-

தொண்டர்கள்

என் சொல்லி புகழ்வர்

-

எதைச் சொல்லிப் புகழ்வார்கள்?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பகவத் விஷயத்தை அநுபவிக்கப் புகுமவர்கள் வாயாலே ஏதோசில பாசுரங்களைச் சொல்லிப் புகழ்கின்றார்களே, என்ன பாசுரஞ் சொல்லிப் புகழ்வது! பெருவெள்ளத்திலே புகுந்து முழுகுமவர்கள் குமிழ்நீருண்டு கிடக்குமத்தனைபோல, பகவத்விஷய ஸாகரத்திலும் அழுந்திக் கிடக்கலாமேயொழிய ஏதேனும் பாசுரமிட்டுச் சொல்லப்போமோ? என்கிறார்.

மூவரில் முதல்வனாயவொருவனை - ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹாரங்களுக்குக் கடவர்களென்றும் த்ரிமூர்த்திகளென்றுஞ் சொல்லப்படுகிற அரி அயன்  அரன் என்னுமிவர் தம்முள் முழுமுதற்கடவுளாயிருப்பவன். அன்றியே, ?????????????????? என்ற சுருதியின்படி இந்திரனைக் கூட்டி மூவராக்கி அம்மூவர்களிற்காட்டிலும் முழுமுதற் கடவுளாயிருப்பவன் என்றும் பொருள் கூறுவர்.

உலகங்கொண்ட கோவினை – மூவர்க்கும் முதற்கடவுளாயிருந்தால் அவர்களுக்கு ஆகவேண்டிய காரியத்தைத் தலைக்கட்டிக் கொடுக்கவேணுமே; அவர்களுள் ஒருவனான இந்திரனுக்குக் காரியஞ்செய்து கொடுத்தமை சொல்லுகிறது. மஹாபலி அபகரித்த பூமியை மீட்டுக்கொடுத்தமை சொன்னடி.

குடந்தைமேய் குருமணித்திரளை – இன்னும் ஸம்ஸாரிகள் இடர்ப்பட்டாருண்டாகிலும் துவளலாகாதென்று அவர்கட்குக் கதியாகத் திருக்குடந்தையிலே படுக்கை பொருந்திப் பள்ளிகொள்ளும் நிலையை நோக்குங்கால் சிறந்த நீல ரத்னங்களைக் குவிந்திருக்குமா போலே புகர்த்து விளங்கும்படி. ‘???????’ என்னும் வடசொல் குருவென்று கிடக்கின்றது. சிறந்தவென்று பொருள்.

இன்பப் பாவினை – ”அந்தமிழினின்பப் பாவினை” என்றார் குலசேகரப் பெருமாளும். அருளிச் செயல்போலே செவிக்குத் தித்திப்பவன் எம்பெருமான் என்றவாறு. பச்சைத் தேனை – செவிக்குமாத்திரமன்றியே நாவுக்கும் இனியனா யிருப்பவன்; நாள்பட்ட தேன் போலல்லாமல் அப்போதுண்டான தேன்போலே பரமபோக்யன். பைம்பொன்னை – உடம்புக்கு அணையலாம்படி விரும்பத்தக்கவனென்க. அமரர் சென்னிப்பூவினை-நித்யஸூரிகள் தலைமேற் புனைந்து கொண்டாடும் தத்துவம். ”எம்மாவீட்டுத் திறமும் செப்பம், நின்செம்மா பாதபற்புத் தலைசேர்த்து ........ அம்மா வடியேன் வேண்டுவதே” என்று நாமெல்லாரும் பிரார்த்தித்துப் பெறவேண்டிய பேறு சிலர்க்குக் கைவந்திருக்கின்றதே யென்று தலைசீய்க்கிறார். ஆக இப்படிப்பட்ட எம்பெருமானைப் புகழ்கின்ற தொண்டர்கள் என்சொல்லிப் புகழ்வரென்கிறார். இத்தால், தாம் பாசுரம் பேசுவதும் எம்பெருமானுடைய பெருமையின் எல்லையைக்கண்டன்று; போதுபோக்க வேண்டியத்தனை என்றதாம்.

English Translation

The first-among-the-Tri-murti-Lord, who took the Earth as his, is our king who resides in Kudandai. He is precious as a heap of gems, sweet like music and pure honey.  He is the flower worn by the gods on their heads. Oh, with what words can devotees praise him fully?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain