nalaeram_logo.jpg
(2033)

காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற

ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப

ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட

கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே.

பதவுரை

காற்றினை புனலை தீயை

-

காற்று நீர் தீ முதலான பஞ்ச பூதமயமான ஜகத்தை சரீரமாகவுடையவனும்

கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை

-

அரணாகப்போரும்படியான மதிளையுடைத்தான இலங்காபுரியை முடித்த காளைபோன்றவனும்

இமயம் மேய

-

இமயமலையில் (திருப்பிரிதியிலே) பொருந்தி வாழ்கிறவனும்

எழில் மணி திரளை

-

அழகிய மணித்திரள் போன்றவனும்

இன்பம் ஆற்றினை

-

(வடிவெடுத்த) ஆனந்த வெள்ளமாயிருப்பவனும்

அமுதம் தன்னை

-

போனவுயிரை மீட்கவல்ல அமுதம் போன்றவனும்

அவுணன்

-

(இரணியனென்னும்) அசுரனுடைய

ஆர் உயிரை

-

அருமையான உயிரை

உண்ட

-

கவர்ந்த

கூற்றினை

-

ம்ருத்யுவமான எம்பெருமானை

உள்ளம்

-

நெஞ்சமே!

குணம் கொண்டு

-

திருக்குணங்களை முன்னிட்டு

கூறு

-

அநுஸந்திக்கப்பார்;

(என்று தாம் சொன்னதும் அப்படியே அநுஸந்தித்த நெஞ்சை நோக்கி)

நீ கூறும் ஆறே

-

நீ அநுஸந்தித்த விதம் என்னே! (என்று ஈடுபடுகிறடி.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார்; நெஞ்சே! எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை அநுஸந்திக்கப்பார் என்றார்; அப்படியே அது அநுஸந்திக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு ‘நெஞ்சே! நீ அநுஸந்திக்கும் விதம் என்னே!‘ என்று ஈடுபடுகிறார்.

காற்றினைப் புனலைத் தீயை=பஞ்ச பூதங்களில் மூன்று பூதங்களைச் சொன்னது மற்ற பூமியும் ஆகாசமுமாகிற இரண்டு பூதங்களுக்கும் உபலக்ஷணமென்க. பஞ்சபூதங்களின் காரியமாகிய உலகங்களைச் சொல்லிற்றாய், உலகங்களைச் சரீரமாகக் கொண்டுள்ளவ னென்ற தாகிறது. சரீரத்தைச் சொல்லும்படியான சொற்கள் சரீரிபர்யந்தமாகச் சொல்லி நிற்குமென்பது வேதாந்திகளின் கொள்கை யென்றுணர்க.

கடிமதிளிலங்கைசெற்ற ஏற்றினை=பல மதிள்களை அரணாகக் கொண்டிருந்த இலங்காபுரியைச் சுடுகாடாக்கின. மஹாவீரன் என்றவாறு.- இந்த ப்ராக்ருதமான சரீரம் இலங்காபுரியாகக் கொள்ளத்தக்கது. அது கடலால் சூழப்பட்டிருக்கும்; இது ஸம்ஸாரமாகிற பெருங்கடலினால் சூழப்பட்டிருக்கும். அது பத்துத் தலைகளையுடையனான ஒரு பிரபுவினால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது; இது பத்து இந்திரியங்களாகிற தலைகளைக் கொண்ட மநஸ்ஸென்கிற ஒரு பிரபுவினால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது; அதில் சீதாபிராட்டி தீனதசையை யடைந்திருந்தாள், இதில் ஜீவாத்மா சிறைவைக்கப்பட்டு வருந்திக்கிடக்கிறான். அங்குச் சிறிய திருவடிவந்து ஸ்ரீ ராமகுணகீர்த்தநம்பண்ணி க்ரமேண சிறைவிடுத்ததுபோல, இங்கும் அத்திருவடியைப்போல் மஹாபண்டிதர்களும் விரக்தர்களுமான ஆசாரியர்கள் பகவத்குணங்களை உபதேசித்துச் சிறைவிடுவிக்க முயல்வார்கள். முடிவில் எம்பெருமானால் அவ்விலங்கை அழிந்ததுபோல இந்தப்ராக்ருதசரீரமும் எம்பெருமானருளால் தொலையும் என்றுணர்க.

இமயமேய எழில்மணித் திரளை=இமயம் என்று பொன்னுக்கப் பெயருண்டாதலால் அப்பொருளும் இங்குக் கொள்ளக்கூடியதே; அப்போது மேற்பதத்தை ‘ஏயு‘ என்று பிரித்து பொன்போலப் புகர்கொண்டவனென்று உரைத்துக் கொள்க. அன்றியே, “எண்கையான் இமயத்துள்ளான்“ என்ற விடத்துப் போல, இமயமலையின்கணுள்ள திருப்பிரிதியில் நித்யவாஸம் பண்ணுமவனென்னவுமாம். அழகிய நீல ரத்னங்களைக் குவித்து வைத்தாற்போல் இனியனாயிருப்பவனென்கிறது எழில் மணித்திரளை யென்றதனால்.

இன்பவாற்றினை = ஆனந்தவெள்ளமே வடிவெடுத்திருப்பவன். விடாய்த்தவர்களின் விடாயையெல்லாம் தீர்க்கும் ஆறு; எம்பெருமான் தாபத்ரயத்தையும் தணிப்பன். குளம் முதலானவை இருந்தவிடத்தே யிருந்து உதவும்; ஆறு அங்ஙனல்லாமல் வேண்டினவிடத்தே திறந்து பாய்ச்சி விளைவித்துக் கொள்ளலாம் படியிருக்கும்; எம்பெருமானும் அப்படியே. வேண்டுவோர் வேண்டுமிடங்களிலே யெழுந்தருளிக் காதல் கடல்புரைய விளைவிப்பன்.

அமுதந்தன்னை = அன்பர்கட்கு ஆராவமுதமாயிருப்பவன். கடலில் தோன்றிய உப்புச்சாறாகிற அமுதம் வாய்கொண்டு பருகலாயிருக்கும்; இவ்வாராவமுதம் கண்கொண்டு பருகத்தக்கது. ?????????????????  – ஏததேவாம்ருதம் த்ருஷ்டவாத்ருப்பந்தி“  என்றது காண்க.

அவுணானாயிரையுண்ட கூற்றினை = கீழ்ச் சொன்னபடியே அமுதமாயிருக்குந் தன்மை அன்பர்களின் திறத்தேயத்தனை; பிரதிகூலர் திறத்திலோ வென்னில் ம்ருத்யுவாயிருப்பன்; ப்ரஹலாதாழ்வானுக்குப் பரமபோக்யமான அமுதமாயிருந்தவன்தானே இரணியனுக்குக் கூற்றமாயிருந்தானிறே. அவுணனார் என்று அசுரவர்க்கத்தை யெல்லாம் சொல்லிற்றாகக்கொண்டு உரைத்தலுமாம். கூற்று-உடலையும் வேறு கூறார்க்கு யவன் என்று யமனுக்குக் காரணப்பெயர்.

உள்ளம் – அண்மைவிளி; உள்ளமே! என்றபடி. “உள்ளம்! குணங்கொண்டு நீ கூறு“ என்று அருளிச்செய்தவுடனே “நீ கூறுமாறு!“ என்று ஈடுபட்டு அருளிச் செய்திருத்தலால், இடையில் திருவுள்ளத்தில் ஒரு விலக்ஷணமான அநுஸந்தானம் சென்றமை தோன்றும். “உள்ளம்! குணங்கொண்டு நீ கூறுமாறே கூறு“ என்று ஒரு வாக்கியமாகவே அந்வயித்து, ‘நெஞ்சமே! எம்பெருமானுடைய திருக்குணங்களை உனக்கு அநுஸந்திக்கத் தெரிந்தவகையிலே அநுஸந்தானம் செய்‘ என்று உரைக்கலாமாயினும் அது அத்துணைச் சிறவாது.

English Translation

The Lord who is wind, water and fire, the strong one who destroyed the fortressed Lanka, the mountain like heap of beautiful gems, the sweet flood of ambrosia came as the death blow to Hiranya.  How can we praise him enough? Tell me, o Heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain