nalaeram_logo.jpg
(2032)

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,

கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் ஆண்ட மாளும்,

மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த,

விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே!

பதவுரை

நிதியினை

-

(அன்பர்கட்கு) நிதிபோன்றவனும்

பவளம் துணை

-

பவளம்போல் இனியேனும் தூண் போல் தாரகனும்

நெறிமையால்

-

ஒரு நெறிப்பட்டுச் சிந்திக்கவல்ல வர்களுக்குப் பரம கதியாயிருப்பவனும்

முன்

-

முன்பு

கஞ்சன் மாளகண்டு

-

கம்ஸன் முடிந்துபோம்படி செய்து

அண்டம்

-

உலகங்களை

ஆளும்

-

ரக்ஷித்தருளினவனும்

மதியினை

-

(அடியவர்களை எப்போதும்) நினைத்துக் கொண்டே யிருப்பவனும்

மாலை

-

அடியார்திறத்தில் வியாமோஹமே வடிவெடுத்தவனும்

வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை

-

நான் வாழ்த்திவணங்கும் படியாக என்னெஞ்சிலே வந்து நின்ற பாக்ய ஸ்வரூபியுமான எம்பெருமானை

கண்டு கொண்ட

-

ஸேவிக்கப்பெற்ற

தொண்டனேன்

-

அடியேன்

விடுகிலேன்

-

(இனி ஒருநாளும்) விடமாட்டேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய பெருமைகளைப் பன்னியுரைத்து, என்னெஞ்சிலே வந்து புகுந்த இப்பெருமானை இனி நான் ஒருநாளும் விடமாட்டுகின்றிலே னென்கிறார்.

நிதியினை = புதைந்து வைக்கப்படும் பொருள் நிதியெனப்படும். ????????????????? என்ற தைத்திரீய உபநிஷத்தினால் எம்பெருமான நிதியாக அறியப்படுவன்; “வைத்தமாநிதியாம் மதுசூதன்“ என்பர் நம்மாழ்வாரும். நிலத்தினுள் புதைந்துவைத்து ஆளவேண்டியதா யிருக்கும் நாட்டிலுள்ள நிதி; எம்பெருமானுகிற நிதி அங்ஙனல்லாமல் நெஞ்சிலே புதைந்து ஆளத்தக்கதென வாசி காண்க.

நிதியானது தன்னையுடையவர்களை இரவும் பகலுங் கண்ணுறங்கவொட்டாது; எந்த வேளையில் யார் கொள்ளை கொள்வாரோவென்று துஞ்சாதிருப்பர் நிதியுடையார்; எம்பெருமானை யுடையவர்களும்படியே, “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள் துஞ்சுதலே” என்கிறபடியே காண்பதற்கு முன்பும், உறக்கமில்லை; கண்டாலும் கையாலே உறக்கமில்லை.

நிதியானது ஸித்தாஞ்ஜனமணிந்த சில பாக்யசாலிகளுக்கே கிடைக்கும்; எம்பெருமானும் பக்திஸித்தாஞ்ஜனம் பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்யவான்களுக்கே- இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டுகொள்க.

பவளத்தூணை=தூணானது பலவற்றையும் தரித்துக் கொண்டிருந்து தன் கீழே ஒதுங்குவார்க்கு நிழல் கொடுக்குமாபோலே எம்பெருமானும் ஸகலலோக யோகக்ஷம துரந்தரனாய்த் தன்னடிச் சார்ந்தாரெல்லார்க்கும் தரபுங்களைத் தணிக்குமவனா யிருத்தலால் தூண் என்றது. கல்தூண் தூண் என்பதற்காகப் பவளத்தூண் என்றது.

நெறிமையால் நினையவல்லார் கதியினை = மற்ற பொருள்களை நினைப்பதற்கும் எம்பெருமானை நினைப்பதற்கும் நெடுவாசியுண்டு; “நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்துகும்“ என்கிறபடியே எம்பெருமானைச் சிந்தித்தமாத்திரத்திலே * உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து உடம்பெலாங் கண்ணநீர் சோரநிற்கை ப்ராப்தமாகையாலே இவ்வண்ணமாக நினைத்தலே நெறிமையால் நினைத்தலாம்; அப்படி நினைப்பார்க்கு உபாயமாயிருப்பவன் எம்பெருமான் என்க.

கஞ்சன்மாளக் கண்டுமன் அண்டமாளும் =* சாதுசனத்தை நலியுங் கஞ்சன் உயிரோ டிருக்குமளவும் எம்பெருமானுடைய ஆட்சி குன்றிநின்றமையால் அவனை உயிர்மாய்த்துத் தன்னுடைய ஜகத்ரக்ஷகவத்தை நிலை நிறுத்திக்கொண்டானென்கிறது. “நாட்டை ஈரக்கையாலே தடவிக் கம்ஸனால்பட்ட நோவுதீர ரக்ஷித்து“ என்ற வியாக்கியான வாக்கியம் நோக்கத்தக்கது.

மதியினை=மதியென்பது வடசொல்; புத்தியென்று பெயர். “எய்ப்பென்னை வந்து நலியும் போது அங்கேதும் நானுன்னை நினைக்கமாட்டேன், அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தே னரங்கத்தரவணைப் பள்ளயானே!“ என்றும் “ஆமிடத்தேயுன்னைச் சொல்லி வைத்தேன்“ என்றுஞ் சொல்லுகிறபடியே நாம் பாங்காயிருக்கும்போது எம்பெருமானைச் சிந்தித்துவைத்தால் பிறகு நாம் சிந்திக்கப்பெறாத குறைதீர அவன்றானே நம்மைச் சிந்தித்துக் கொண்டிருப்பவனேன்றவாறு. வராஹ சரமச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது. புத்திக்கு வாசகமான மதி யென்னுஞ் சொல் இவ்வளவு அர்த்தத்தைத் தருவது லக்ஷணையால். புத்தியின் காரியமாகிய நினைத்தலைத் தானே செய்பவனென்றபடி.

மாலை=மால்        என்னுஞ்சொல்-பெருமையுள்ளவன் கருநிறம் உள்ளவன், (அடியாநீடத்தில்) வியாமோஹமுள்ளவன் என்ற பல பொருள்களைக் கொண்டது. ”ஆசரலேக்ஷமுடையார்பக்கல் வ்யாமுக்தனாயிருக்குமவனை” என்பது வியாக்கியான வாக்கியம். அடியார்க்கு எத்தனை உபகரணங்கள் செய்திருந்தாலும் ஒன்றும் செய்திலனாகவே தன்னை நினைத்துக்கொண்டு ‘என்செய்வோம், என்செய்வோம்‘ என்றே பாரிப்புக் கொண்டிருக்கையாய்த்து எம்பெருமானுடைய வியாமோஹத்தின் பரிசு.

வாழ்த்தி வணங்கி என்மனத்துவந்த விதியினை=‘வணங்கி‘ என்றதை எச்சத் திரிபாகக் கொள்க: வணங்க என்றபடி; நான் வாழ்த்தி வணங்கும்படியாக என் மனத்தே வந்து சேர்ந்தவிதியை என்றவாறு. அன்றியே, “என்மனத்து வந்த விதியினை வாழ்த்தி வணங்கி விடுகிலேன்“ என்று அந்வயிக்கவுமாம். விதி யென்னும் வடசொல் பாக்கியத்தைச் சொல்லும். தம்முடைய பாக்கியமே எம்பெருமானாக வடிவெடுத்ததென்கிறார். ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை இன்று காணப்பெற்ற அடியேன் இனி விடமாட்டேனென்றோ ராயிற்று.

English Translation

I have found my treasure, my coral pillar, the Lord who is sole refuge of those who seek him through worship.  The one who destroyed Kamsa, the Lord who rules the universe from yore, the adorable one.  He is the divinity that enters my heart with love, I worship him, I shall never leave him now.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain