nalaeram_logo.jpg
(1978)

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள்

என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்?

பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன்மேய,

அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே.

பதவுரை

கண்ணன்

கண்ணபிரான்

மனத்துள்ளே

(என்) நெஞ்சினுள்ளே

நிற்கவும்

எழுந்தருளியிருக்கச்செய்தேயும்

கை வளைகள்

(எனது) கையில்வளைகளானவை

என்னோ கழன்று

ஏனோ கழன்று போயினவே!

இவை என்ன மாயங்கள்

இவை என்ன ஆச்சரியம்!

பெண் ஆனோம்

பெண்குடியிலே பிறந்துள்ளநாம்

பெண்மையோம்

வெகு அழகாகப் பெண்மையை உடையவர்களாயிருக்கின்றோம்

நிற்க

இது நிற்க

ஆவன்மேய

(அந்த எம்பெருமான் விரும்பி வர்த்திக்குமிடமாய்

அண்ணல்

சிறந்ததான

மயலயம்

திருவேங்கட மலையையும்

ஆரங்கமும்

திருவரங்கத்தையும்

பாடோமே

பாடுகைக்குத் தடையுடையரா யிருக்கிறோமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவாய்மொழியில் (4-7-6) “நோக்கி நோக்கியுன்னைக் காண்பான் யானென தாவியுள்ளே, நாக்குநீள்வன் ஞானமிலலை நாடோறுமென்னுடைய, ஆக்கையுள்ளுமாவியுள்ளுமல்ல, புறத்தினுள்ளும் நீக்கமின்றியெங்கும் நின்றாய் நின்னையறிந்தறிந்தே” எனற் பாசுரத்தின் கருத்தை ஈண்டு அறிந்து கொள்ளுதல் வேண்டும். எம்பெருமான் தம்முடைய ஸகல அவயவங்களிலும் புகுந்து நிற்கச் செய்தேயும் அதில் த்ருப்தி பெறாதே கண்ணாற் காணப் பெற வேணுமென்று ஆசைப்பட்டு வருந்தின நம்மாழ்வாரைப்போலே இப்பரகால நாயகியும் தனது நெஞ்சினுள்ளே எம்பெருமான் உறையப்பெற்று வைத்தும் திருப்தியடையாதே வளையிழக்கிறாள் காண்மின்.

எம்பெருமான் தூரஸ்தனாயிருந்தால் விரஹம் பொறாதே மேனி மெலிந்து வருந்துதல் தகுதியே; அவன் என் மனத்தினுள்ளே யிருந்து ஸந்நிஹிதனாய் நிற்கச்செய்தேயும் இங்ஙனே என் மேனி மெலிவதற்கு என்ன காரணமோ? இது ஆச்சரியமான ஸம்பவமாயிருக்கின்றதே! என்கிறாள் முன்னடிகளில். பணப் பையிலே ஏராளமான பணம் கடக்கச் செய்தேயும் புறங்கால் வீங்குவாரைப்போலே யாயிற்று இந்த நாயகியின்படியும். சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களுமாய்க் கண்ணெதிரே வந்தருளி ஸேவை ஸாதியாமல் உள்ளே யுறைந்து மறைந்துகிடக்குமதனால் என்ன பயன்? என நினைத்திருக்கிறாளாயிற்று.

பெண்ணானோம் பெண்மையோம்=பெண்ணாய்ப் பிறந்த நாம் பெண்மையை நன்றாகக் காப்பாற்றிக் கொண்டோமானோம்; கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கைகளை கழலப்பெறுகின்ற நமக்கும் பெண்மைக்கும் வெகுதூரமுண்டு என்றபடி. (நிற்க) இந்த விஷயமெல்லாம் ஒருபுறமிருக்கட்டும், “குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி, அளியத்த மேகங்காள்! ஆவி காத்திருப்பேனே” என்றாற்போலே உள்ளவரையில் ஆவியகை; காத்திருப்பதற்காக, அவன் விரும்பியுரையும் திவ்ய தேசங்களைப் பாடுகையில் ஒரு தடையுடையராயிருந்தோமோ? கைவளைகள் கழன்றொழிந்தா லொழியட்டும் பெண்மைக்குக் கேடு வந்தால் வரட்டும்; அவன் விரும்பியுறையும் திருமலையையும் திருவரங்கத்தையும் பாடுதும் என்றாளாயிற்று.

மூன்றாமடிக்கு வேறு வகையாகவும் பொருள் கூறுவர் பெண் ஆனோம்-பெண்ணாய்ப் பிறந்த நாம், பெண்மையோம் நிற்க-பெண்மைக் குணத்தை வழுவாதபடி யுடையராய்க கொண்டு ஸத்தைபெற்று நிற்கும்படியாக – என்று.

English Translation

Even though we have placed krishna in our hearts, I wonder why the bangles on our hands do not stay! What mysteries are these? Well have we girls taken care of our femininity ! And yet, we shall not fall to sing the praises of Venkata and Arangam, where he resides.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain