(1971)

வென்றி விடையுட னேழ டர்த்த அடிகளை,

மன்றில் மலிபுகழ் மங்கை மன்கலி கன்றிசொல்,

ஒன்று நின்றவொன் பதுமு ரைப்பவர் தங்கள்மேல்

என்றும் நில்லாவினை யொன்றும் சொல்லி லுலகிலே.

 

பதவுரை

வென்றி

வெற்றியைத் தொழிலாகவுடைய

விடை ஏழ்

ஏழு ரிஷபங்களை

உடன்

உடனே

அடர்த்த

திரஸ்காரித்த

அடிகளை

எம்பெருமான் விஷயமாக

மன்றில் மலி புகழ்

நாற்சந்திகளிலே நிறைந்த புகழையுடையரும்

மங்கை மன்

திருமங்கை நாட்டுக்குத் தலைவருமான

கலிகன்றி

ஆழ்வார்

சொல்

அருளிச்செய்த

ஒன்று நின்ற ஒன்பது

ஒன்றோடே கூடி நின்ற ஒன்பது பாட்டாகிய இத்திருமொழியை

உரைப்பவர் தங்கள்மேல்

அநுஸந்திப்பவாக்ளிடத்திலே

வினை ஒன்றும்

ஒருவகையான கருமமும்

என்றும்

ஒருநாளும்

நில்லா

நிற்கமாட்டாது

சொல்லில்

இன்னமும்பலனை விவாரித்து சொல்லப்புக்கால்

உலகிலே

அவாக்ளிருந்ததேசத்திலுங்கூட

வினை ஒன்றும் நில்லா

 

English Translation

This garland of ten songs by world famous Mangai king Kalikanri is praise for the Lord who subdued seven bulls victoriously. Those who sing it will be rid of all karmas. In fact, even the world will be rid of all karmas.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain