(1970)

காமன் கணைக்கோ ரிலக்க மாய்நலத் தில்மிகு,

பூமரு கோலநம் பெண்மை சிந்தித்தி ராதுபோய்

தூமலர் நீர்கொடு தோழி நாம்தொழு தேத்தினால்

கார்முகில் வண்ணரைக் கண்க ளால்காண லாங்கொலோ.

 

பதவுரை

தோழி

வாராய்தோழீ

காமன்கணைக்கு

மன்மதபாணங்களுக்கு

ஓர்இலக்கம் ஆய்

இலக்காகி யிருப்பதனாலே

நலத்தின் மிகு

நன்மைமிக்கதாய்

பூமரு

விரும்பத்தக்கதாய்

கோலம்

அழகியதான

நம் பெண்மை

நமது பெண்மைக்குணத்தை

சிந்தித்து

நினைத்துக்கொண்டு

இராது

இவ்விடத்திலேயே இருந்திடாமல்

போய்

புறப்பட்டுப்போய்

கார்முகில் வண்ணரை

காளமேகச்யாமரான பெருமாளை

தூ மலர் நீர் கொடு

பரிசுத்தமான புஷ்பங்களையும் தீர்த்தங்களையும் கொண்டு

நாம் தொழுது ஏத்தினால்

நாம் வணங்கித் துதித்தால்

கண்களால் காணல் ஆம் கொலோ

(அவரை) கண்ணாலே ஸேவிக்கப் பெறலாமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானை யநுபவிப்பதற்குப் பாங்கல்லாத இந்தப்பாழும் சாறிரம் முடிந்து போவதே நல்லதென்றாள் கீழ்ப்பாட்டில்; சாறிரம் இருப்பதும் போவதும் நம்முடைய இஷ்டத்தைப் பொறுத்ததன்றே. அது எம்பெருமானுடைய ஸங்கல்பத்தின்படியே ஆகக்கடவதாயிற்றே. “கண்ணாளாகடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு, தண்ணாவாதடியேனைப் பணிகண்டாய் சாமாறே” என்று பிரார்த்தித்தவிடத்திலும் உடனே அது ஸித்தித்ததில்லையே இவ்வாழ்வாரை எம்பெருமான் இன்னமும் இவ்வுலகத்திலே வைத்துப்பல உபகாரங்களைச் செய்விக்கத் திருவுள்ளம் பற்றினவனதலால் ஆழ்வாருடைய எண்ணப்படி உடலம் ஒழியப் பெற்றதில்லை; எவ்வகையினாலாவது எம்பெருமானைக் கண்களால் காண ஆசை அதிகாரித்ததனால், தோழி! நம்முடைய ஸவரூபத்தை அழித்துக்கொண்டு அதிப்ரவ்ருத்தி செய்தாகிலும் அவரைக் கண்டுவிடுவதே யாகுங்கொல்; என்கிறாள்.

மன்மதனுடைய அம்புகட்கு இரையாகி இங்ஙனே பரிதபித்திருப்பதிற் காட்டிலும், நம்முடைய பெண்மைக் குணத்தைத் திரஸ்காரித்தொழித்தாகிலும் புறப்பட்டுச் சென்று அவர் திருவுள்ளத்திற்கு உகப்பான உபசாரங்களைச் செய்வோமாகில் அவரைக் கண்களால் காணப்பெறுவோமோ வென்றளாயிற்று.

இலக்கம்- ‘லசஷ்யம்’ என்ற வடசொல்விகாரம்.

(நலத்தின்மிகு இத்தியாதி) ஸ்வாமியான அவன்தானே வந்து கைக்கொள்ளப் பார்த்திருக்கயைர்கிற ஸ்திரீத்வத்தை மீறியாகிலும் அதிப்ரவ்ருத்தி செய்யக்கோலுவது அத்தலையில் வைலக்ஷணயாதிசயத்தையும் ஆசை மிகுதியையுங் காட்டுமென்க.

 

English Translation

O sister! Rather than contemplate our flower-like beauty and feminity, -and become forgets for Madana;s arrows, -let us go and worship the dark cloud-hued Lord with fresh flowers and pure water.  At lest shall we not be seeing him with out eyes, then?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain