(1969)

மன்சுறு மாலிருஞ் சோலை நின்ற மணாளனார்,

நெஞ்சம் நிறைகொண்டு போயி னார்நினை கின்றிலர்,

வெஞ்சுடர் போய்விடி யாமல் எவ்விடம் புக்கதோ,

நஞ்சு உடலம் துயின்றால் நமக்கினி நல்லதே.

 

பதவுரை

மஞ்சு உறு

மேகமண்டலத்தைக் கிட்டி ஓங்கின (சிகரத்தையுடைய)

மாலிருஞ் சோலை

திருமாலிருஞ் சோலைமலையிலே

நின்ற

நித்யவாஸம் பண்ணுகிற

மணாளனார்

எம்பெருமான்

நெஞ்சம்

(எனது) நெஞ்சிலுள்ள

நின்ற

அடக்கத்தை

கொண்டு போயினார்

அபஹாரித்துக்கொண்டு போனவராய்

நினைகின்றிலர்

(இத்தலையை) மறந்தொழிந்தார்

வெம் சுடர்

ஸூர்யனானவன்

போய்

அஸ்தமித்துப்போய்

விடியாமல்

மறபடியும் உதியாமல்

எவ்விடம் புக்கதோ

எங்கே புகுந்தொனித்தாலே

இனி

இப்படியான பின்பு

நமக்கு

நம்முடைய

உடலம்

சரீரமானது

நஞ்சு

சிதிலமாகி

துயினறால்

முடிந்துபோமாகில்

நல்லது

நன்றாகும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமாலிருஞ் சோலைமலையிலே நித்யவாஸம் செய்தருளாநின்ற அழகப்பிரானார் பெண்மைக்கு ஈடாக என்னெஞ்சிலிருந்த அடக்கத்தைக் கொள்ளைக்கொண்டு போய் விட்டார்; போனவர் ‘ஒருத்தியை இப்படி ஸர்வஸ்வாபஹராம் பண்ணிவந்தோமே, அவன் எப்பாடுபடுகிறாளோ!’ என்று நெஞ்சில் இத்தனை இரக்கமு மற்றிராநின்றார். அவர்தாம் அப்படி இரக்கமற் றொழிந்தால் ஸூர்யபகவானும் இரக்கமற் றொழியவேணுமோ? ஆவன் அஸ்தமித்தால் மீண்டும் முப்பது நாழிகையிலே உதிக்கவேணுமென்று ஒரு நியதியில்லையோ! அந்த நியதியையுங் கடந்து அடியோடு முகங்காட்டாதே எங்கோ புக்கொளித்தானே! இங்ஙனே எம்பெருமானும் இரக்கமற்றவனாகி அவனுடைய பாரிஜநமும் இரக்கமற்றொழிந்ததான பின்பு ஏதுக்கு நாம் இந்தவுடலைச் சுமந்து வருந்தவேணும்? இவ்வடலம் சிதிலமாகி முடியப் பெறுமாகில் அதுவே நமக்குச்சிறந்த வாழ்ச்சியாகுமே யென்கிறாள்.

விரஹிகளுக்கு இரவு நீட்டித்துத் தோற்றுதல் இயல்பாதலால் “வெஞ்சுடர்போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ” என்னப்பட்டது.

நஞ்சு = ‘நைந்து’ என்பதன் போலி (‘ஐந்து’ என்பதற்கு ‘அஞ்சு’ என்று போலியாவது போல) ‘உடலம்’ என்றதில் அம்-சாரியை. துயின்றால்=தீர்க்க நித்திரையாகிய மரணத்தையுடைந்தால் என்றபடி உபசாரவழக்கு. எம்பெருமானை அநுபவிப்பதற்கு உபயோகப்படாத சாறிரம் ஒழிவதேநன்று என்கிறாள். “நகமிசைத் துயில்வான் போலுலகெல்லாம் நன்கொடுங்க, யோகணைவான் கவராத உம்பினால் குறைவிலமே” என்ற திருவாய்மொழியுங் காண்க.

 

English Translation

The bridegroom Lord residing in misty Malirumsolai robbed me of my heart;s peace. Without the slightest consideration, Where has the cruel Sun gone to, and hidden himself instead of rising? Now, if this body withers and falls, it will be good for us.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain