(1968)

காமன் றனக்கு முரையல் லேன்கடல் வண்ணனார்,

மாமண வாள ரெனக்குத் தானும் மகன்சொல்லில்,

யாமங்கள் தோறெரி வீசு மென்னிளங் கொங்கைகள்,

மாமணி வண்ணர் திறத்த வாய்வளர் கின்றவே.

 

பதவுரை

காமன் தனக்கு முறை அல்லேன்

மன்மதனால் நான் நலியப்பெறுதற்கு முறையுடையே னல்லேன்

சொல்லில்

ஏனென்னில்

கடல் வண்ணனார்

கடல்வண்ணரான கண்ணபிரான்

எனக்கு மா மணவாளர்

எனக்குச்சிறந்த நாயகராயிருக்கின்றார் (இவ்வழியாலே)

தான்

அந்த மன்மதன் தான்

எனக்கு மகன்

எனக்கு மகனாகப் பெற்றான் (அப்படியிருந்தும்)

யாமங்கள் தோறு

எப்போதும்

எரி வீசும்

நெருப்பைத் தூவுகின்றாள்

என் இள கொங்கைகள்

எனது இளமுலைகளோ வென்னில்

மா மணி வண்ணர் திறத்த ஆய்வளர்கின்ற

நீலமணிவண்ணரான அப்பெருமாளை நோக்கியே வளர்கின்றனவாயுள்ளன

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நான் கடல்வண்ணனான எம்பெருமானை எப்போதும் மணவாளனாகக் கொண்டேனோ அப்போதே மன்மதன் எனக்கு மகனாய்விட்டான்; (மன்மதனுக்குத் தந்தையன்றோ பகவான்). முகனானவன் பெற்றதாயை இங்ஙனே கொலை செய்வது வழக்கோ? ஐகயைப் பிடித்த கணவனார் என்ன நலிவுசெய்தாலும் பொறுக்கலாம்; வயிற்றிற் பிறந்த மகன் நலிவு செய்ய என்ன முறைமையுண்டு? என்கிறாள் முன்னடிகளில்.

மன்மதன் செய்கிற ஹிம்ஸை ஏதென்ன, யாமங்கடோறு எரிவீசும் என்கிறாள். ஸர்வகாலத்திலும் தபிக்கிறா னென்றபடி. மன்மதன் இப்படு நெருப்பை வீசச்செய்தேயும் எனது இளமுலைகள் தாம் கொண்ட கொள்கையை விடுகின்றில்; அப்பெருமானுக்கே அற்றுத்தீர்ந்தனவாய் விம்மி வளர்கின்றனவென்கிறாள்.

 

English Translation

This Madana, god of love, is no relative of mine.  The ocean-hued Lord alone being my bridegroom, through him, he is my son, But alas, the way he scorches me with lust-fire every hour of the day! My tender breasts have learnt to live with the pain from the Lord of gem hue.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain