(1966)

அன்னை முனிவதும் அன்றி லின் குர லீர்வதும்,

மன்னு மறிகட லார்ப்ப தும்வளை சோர்வதும்,

பொன்னங் கலையல்கு லன்ன மென்னடைப் பூங்குழல்,

பின்னை மணாளர் திறத்த வாயின பின்னையே.

 

பதவுரை

அன்னை முனிவதும்

பெற்றதாய் சீறிச் சொல்லுவதும்

அன்றிலின்     குரல் ஈர்வதும்

அன்றிற்பறவையின்குரல் ஹிம்ஸிப்பதும்

மன்னு மறிகடல் ஆர்ப்பதும்

எப்போதும் அலைமடியப் பெற்ற கடல் கோஷிப்பதும்

வளை சோர்வதும்

கைவளைக்ள கழல்வதும் (ஆகிய இவையெல்லாம்)

அம்

அழகிய

பொன் கலை

பொன்னாடையணிந்த

அல்குல்

நிதம்பத்தையுடையவளும்

அன்னம் மென் நடை

அன்னத்தின்நடை போன்று அழகிய நடையையுடையவளும்

பூ குழல்

பூவணிந்த கூந்தலை யுடையவளுமான

பின்னை

நப்பின்னைப் பிராட்டியின்

மணாளர்

நாயகரான கண்ணபிரானுடைய

திறத்தம் ஆயின பின்னையே

விஷயத்தில் ஈடுபட்டோ மானபிறகே

(அதற்கு முன்பு இல்லை)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நான் பகவத் விஷயத்தில் கைவைப்பதற்கு முன்னம் தாயானவள் என்னை ஒருவார்த்தையும் பொடிந்து சொல்லியறியாள்; அன்றில் பறவையின் குரல் முன்பு கேட்கப்படும்போது செவிக்கு மிக இனிதாயிருந்தது; அப்போது கடலோசைதானும் காது கொடுத்துக் கேட்கலாயிருந்தது; உடலும் பூரித்து வளைகள் நெருக்குண்டிருந்தன. இப்போது அது பவிக்கிற கஷ்டங்களில் ஒன்றும் முன்பு நான் அநுபவித்ததேயில்லை; பின்னை மணாளரான எம்பெருமான் திறத்திலே நலிவுபடும்படியாகவும் கடலோசைக்கு நோவுபடும்படியாகவும் கைவளைகள் கழலும்படியாகவும் பெற்றேன் என்கிறாள்.

(அன்னை முனிவதும்). ‘தாய் தகப்பன்மார் சுற்றத்தர் முதலானோர் இருக்கும்போது அவாக்ளைக் கொண்டு தனக்குற்ற நன்மைகளைத் தேடிக்கொள்ள வேண்டியது தகுதியாயிருக்க, இச் சிறு பெண்பிள்ளை எல்லாரையும் திரஸ்காரித்துவிட்டுத் தான்றோன்றியாகத் தானே (பகவத் விஷயத்தில்) ஒரு நாயகனைக் காதலித்துப் புறப்பட்டாள்!; இப்படியும் ஒரு அநியாயமுண்டோ?’ என்பது தாய் சீறிச்செல்லும் வார்த்தையாமென்க.

மூன்றாமடி முழுதும் நப்பின்னைப் பிராட்டிக்கு அடைமொழி.

திறத்தம்-தன்மைப்பன்மைக் குறிப்புவினைமுற்று.

 

English Translation

Mother;s angry words, the Anril bird;s piercing call, the roaring of the sea, the slipping of bangles, all these began after we started getting interested in the games of our Lord, the husband of Dame Nappinnai, who wears a beautiful yellow cloth, has a swan-like gait and an adorable flower coiffure.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain