(1964)

மல்லோடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணன்,

அல்லி மலர்த்தண் டுழாய்நி னைந்திருந் தேனையே,

எல்லி யின்மா ருதம்வந் தடுமது வன்றியும்,

கொல்லைவல் லேற்றின் மணியும் கோயின்மை செய்யுமே.

 

பதவுரை

மல்லொடு

மல்லர்களும்

கஞ்சனும்

கம்ஸனும்

துஞ்ச

முடியும்படி

வென்ற

வெற்றிபெற்ற

மணி வண்ணன்

நீலமணிவண்ணனான கண்ணபிரானுடைய

அல்லி தண் துழாய் மலரையே

இதழ்களை யுடையதாய்க்குளி திருந்துள்ள திருத்துழாய் மாலையையே

நினைந்திருந்தேனை

சிந்தித்துக்கொண்டிருக்கின்ற என்னை

எல்லியில் மாருதம்

அந்திப்போதில் வீசும் காற்றானது

வந்து

நானிருக்குமிடத்தில்வந்து வீசி

அடும்

நலிகின்றது

அது அன்றியும்

அதுவுந்தவிர

கொல்லை வல் ஏற்றின் மணியும்

வெளி நிலங்களில் நின்றும் மீண்டுவருகிற வலியகாளைகளின் கழுத்து மணியோசையும்

கோயின்மை செய்யும்

தெந்தரவுபடுத்தாநின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சாணூரன் முஷ்டிகன் முதலான மல்லர்களையும் கம்ஸனையும் தீர்க்க நித்திரை செய்யும்படியாகக் கொன்றொழித்த கண்ணபிரானுடைய கலவி கிடைக்கப் பெறாதொழியினும் அவனது திருமேனியில் ஸம்பந்தம் பெற்ற திருத்துழாய் மாலையாகிலும் சிறிது கிடைக்குமோவென்று அல்லும்பகலும் இதுவே சிந்தனையாகக் கிடக்கிற என்னை அந்திக்காற்றும் மாட்டின் கழுத்து மணியோசையும் வருத்துகின்றனவே யென்கிறாள்.

எம்பெருமானுடைய திருத்துழாய்ப் பிரசாதத்தை நான் கருதாமல் ஊராரோடொப்ப உண்டுடுத்துக் களித்துத் திரிந்தேனாகில் ஒன்றுக்கும் நான் வருந்த வேண்டியிராது; அதில் ஆசை வைத்தமையாலன்றோ பிறர்க்கு இன்பமளிப்பவற்றால் நான் துன்புறவேண்டிற்றாயிற்று என்கிறாள்.

மாருதம் - வடசொல் (கூ)

 

English Translation

The gem-hued Lord vanquished the wrestlers and killed kamsa, My mind keeps thinking of his cool Tulasi garland.  The evening breeze comes to kill me.  Not alone, the strong bull;s neck-bell sounds like a death-knell!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain