(1963)

பூங்கு ருந்தொசித்து ஆனை காய்ந்தரி மாச்செகுத்து,

ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டுவன் பேய்முலை

வாங்கி யுண்ட,அவ் வாயன் நிற்கஇவ் வாயன்வாய்,

ஏங்கு வேய்ங்குழல் என்னோ டாடும் இளமையே.

 

பதவுரை

பூ குருந்து ஓசித்து

பூத்திருந்த குருந்தமரத்தை முறித்தொழித்தவனாயும்

ஆனை காய்ந்து

ரிஷபங்களைச் சீறிமுடித்தவனாயும்

அரி மா

(கேசியென்ற) சத்துருவான குதிரையை

செகுத்து

கொன்றவனாயும்

ஆங்கு

கம்ஸனது அரண்மனை வாசலிலே

வேழத்தின்

குவலயாபீடமென்கிற யானையினுடைய

கொம்பு கொண்டு

தந்தத்தைப் பறித்தெறிந்தவனாயும்

வன்பேய்

(பூதனையென்னும்) வலிய பேய்ச்சியினுடைய

முலை

(நஞ்சு தீற்றிய) முலையை

வாங்கி

கையிற்பிடித்து

உண்ட அவ் வாயன்

உறிஞசியுண்ட அப்படிப்பட்ட திருப்பவளத்தை யுடையவனாயுமிருக்கிற கண்ணபிரான்

நிற்க

உதாஸீநனாயிருக்க

ஆயன்

அந்த கோபாலகிருஷ்ணனுடைய

வாய்

வாயிலே

ஏங்கு

ஒலிக்கின்ற

இ வேய் குழல்

இந்த வேய்ங்குழலானது

என்னோடு

என்திறத்திலே

இளைமை ஆடும்

சில சிறுச்சேவகங்கள் செய்யாநின்றது!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானுடைய வேணுகானம் செவிப்பட்டுப்  பிரிவாற்றாதே வருந்திப் பேசுகிற ஒரு ஆய்ப்பெண்ணின் நிலைமையிலே நின்று பேசும் பரசுரமாயிற்றிது. ஸர்வசக்தனான எம்பெருமான் வாளாகிடக்க, அவனுடைய வேய்ங்குழல் என்னோடே தோள் வலிகாட்டி வருகின்றதே யென்கிறாள். முதலடியில் ‘ஆனைக் காய்ந்து’ என வலிமிகாதது வழுவன்று; வடமொழியில் சாந்தஸப்ரயோகம்போலக் கொள்ளத்தக்கது.

 

English Translation

The Lord broke the Marudu trees, killed the bulls, fore the horse;s Jaws, pulled out the elephant;s fusk and sucked the ogress breast with his lips, Alas, the cowherd playing his flute makes my heart flutter!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain