(1941)

வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மைநின் றெம்பெரு மானை,

வாட்டிறல் தானை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்,

தோட்டலர் பைந்தார்ச் சுடர்முடி யானைப் பழமொழி யால்பணிந் துரைத்த,

பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே வெண்டுறை.

 

பதவுரை

வேட்டந்தை கருதாது

மேன்மேலே பெருகி வருகிற காமனைகளைக் கொள்ளாமல்

அடி இணை வணங்கி

தன் திருவடியிணைகளையே (பரமப்ரயோஜனமாக்க் கொண்டு) வணங்கிநிற்க

மெய்ம்மை நின்ற

(அப்படிப்பட்ட பசுமை காந்திகளுக்கு) உண்மையாகத் தன்னைக் காட்டிக் கொடுக்குமவனும்

தோடு அலர் பை தார் சுடர் முடியானை

இதழ்களானவை விரிந்து விகஸிக்கப்பெற்ற பசுமைதங்கிய (திருத்துழாய்) மாலையை ஒளிமிக்க திருமுடியிலே அணிந்துள்ளவனுமான

எம் பெருமானை

எம்பெருமானை நோக்கி,

வாள் திறல் தானே

வாள் வலி கொண்ட சேனையையுடையவரும்

மங்கையர் தலைவன்

திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும்

மானம் வேல்

பெருமைதங்கிய வேற்படையையுடைய வருமான

கலியன்

திருமங்கையாழ்வாருடைய

வாய் ஒலிகள்

ஸ்ரீஸூக்தியாய்

பழமொழியால் பணிந்து உரைத்த

பழமொழிகளைக் கொண்டு விநயத்துடன் அருளிச் செய்தவையான

பாட்டு இவை பாட

இப்பாசுரங்களைப் பாடவே

சித்தம்

(பாடுமவர்களது) நெஞ்சானது

பத்திமை பெருகி

பரமபக்திதலையெடுக்கப் பெற்று

திருவொடு மிகும்

(எம்பெருமானது திருவடிகளில் நித்ய கைங்கரிய விருப்பமாகிற) செல்வமும் விஞ்சிவளரப்பெறும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வேட்டமாவது ஆசைப்பெருக்கம். இஹலோகத்து ஐச்வரியம் ஸ்வர்க்கலோகத்து ஐச்வரியம கைவல்ய மோக்ஷம் முதலானவற்றை விரும்பாமல் ஸ்வயம் ப்ரயோஜநமாகத் திருவடி பணியுமவர்கள் பக்கலிலே உண்மையாக்க் கடாக்ஷித் தருள்பவன் எம்பெருமான் என்கிறது முதலடி. வணங்கி – எச்சத்திரிவு, வணங்க என்றபடி. நின்ற எம்பெருமான், நின்றெம்பெருமான், தொகுத்தல் விகாரம். மெய்ம்மை நிற்றலாவது – விரைவில் அழியக் கூடியவைகளும் அற்பங்களுமான பலன்களைக்கொடுத்துவிடாதே சாச்வதமாய்ச் சிறந்த்தான பரம புருஷார்த்த்த்தை அளிப்பவனாக அமைதல்.

இத்திருமொழியில் பாசுரந்தோறும் ஒவ்வொரு பழமொழியை யிட்டு அருளிச்செய்திருக்கையாலே பழமொழியால் பணிந்துரைத்த பாட்டிவை எனப்பட்டது.

 

English Translation

This garland of proverb-songs by sharp-spear-wielding Mangai king kaliyan is praise offered of the feet of the Lord of Tulasi garland-wreath without any desire for immediate returns.  By signing it, the heat will be filled with Bhakti and the wealth of joy.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain