(1938)

ஆழியந் திண்டேர் அரசர்வந் திறைஞ்ச அலைகடல் உலகம்முன் ஆண்ட,

பாழியந் தோளோ ராயிரம் வீழப் படைமழுப் பற்றிய வலியோ?

மாழைமென் னோக்கி மணிநிறங் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,

கோழிவெண் முட்டைக் கென்செய்வ தெந்தாய் குறுந்தடி நெடுங்கடல் வண்ணா.

 

பதவுரை

நெடுங்கடல்வண்ணா எந்தாய்!

முன்

முற்காலத்து,

திண்

வலிமைபொருந்திய

ஆழி

உருளையோடு கூடின

அம் தேர்

அழகிய தேரையுடையரான

அரசர்

ராஜாக்கள்

வந்து இறைஞ்ச

வந்து வணங்கும்படியாக

அலை கடல் உலகம்

அலைகடல் சூழ்ந்த உலகங்களை

ஆண்ட

ஆட்சிபுரிந்த

ஓர் ஆயிரம் பாழி அம் தோள் விழ

(கார்த்தவீரியனுடைய) வலிமிக்க ஓராயிரந் தோள்கள் இற்று விழும்படியாக

வடை மழு பற்றிய வலியோ

கோடாலிப்படையை எந்திய மிடுக்கை நினைத்தோ

மாழை மெல்நோக்கி

மானினுடைய அழகிய நோக்குப் போன்ற நோக்கையுடையளான பெண்பிள்ளையினுடைய

மணி நிறம் கொண்டு

அழகிய மேனி நிறத்தைக் கொள்ளை கொண்டது மன்றி

முன்னே வந்து நின்று போகாய்

உருவெளிப்பாட்டாலே இவள் கண்ணெதிரே தோற்றி நின்று புறம்பு போகிறாயில்லை,

கோழி வெண்முட்டைக்கு

(தன்டையே உடைந்து போக்க்கூடியதான) கோழி முட்டையை உடைப்பதற்கு

குறு தடி

சிறிய தடிதானும்

ஏன் செய்வது

ஏதுக்கு?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கடல் வண்ணனே! மாழைமான் மடநோக்கியான இப் பரகால நாயகியின் மேனி நிறத்தைக் கவர்ந்துகொண்டாய், இதுசெய்த நீ இவளை அடியோடு முடித்துவிடலாமே, இவளைச் சித்திரவதம் பண்ணவேணுமென்று கருதியோ உருவெளிப்பாட்டாலே நலிகின்றாய்! கார்த்தவீர்யார்ஜுநனுடைய ஆயிரந் தோள்களையும் (பரசுராமாவதாரத்தில்) கோடாலிப்படையினால் அறுத்துத் தள்ளின வீரத்தை நீ இவள் திறத்திலே காட்டுகின்றாய்போலும், இவளை மாய்ப்பதற்கு இத்தனை ப்ரயாஸங்கொள்ள வேணுமோ! தன்னடையே உடைந்துபோகக் கூடியதான கோழிமுட்டையைத் தகர்ப்பதற்குச் சிறியதடி தானும் வேணுமோ! எதுக்கு இவ்வளவு வீண் ப்ரயாஸங் கொள்ளுகிறாய் என்கிறாள்.

கார்த்தவீரியார்ஜுநனுடைய பெருமையைக் கூறுவது முதலடி, அரசர்களனைவராலும் வணங்கப்பட்டுக் கடல் சூழ்ந்த வுலகம் முழுவதையும் ஆண்டு வந்தவனும் அவன்.

 

English Translation

O Lord of deep ocean hue! The strong king kartavirya Arjuna ruled the world worshipped by big charioted kings in yore. You wielded your battleaxe and felled his thousand arms.  Is this a sign of your strength that you steal our fawn-eyed girl;s rouge and do not show yourself to her?  Like the proverb, why use a stick to hatch a hen;s egg?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain