nalaeram_logo.jpg
(1935)

மல்கிய தோளும் மானுரி யதளும் உடையவர் தமக்குமோர் பாகம்,

நல்கிய நலமோ? நரகனை தொலைத்த கரதலத் தமைதியின் கருத்தோ?

அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,

சொல்லியென் நம்பீ இவளைநீ யுங்கள் தொண்டர்கைத் தண்டென்ற வாறே.

பதவுரை

நம்பீ

-

ஸ்வாமிந்!

அல்லி அம் கோதை

-

செவ்விமாலையினாலே அழகுபெற்ற மயிர் முடியையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய

அணி

-

விலக்ஷணமான

நிறம்

-

மேனி நிறத்தை

கொண்டு

-

அபஹரித்தது மன்றி

முன்னே வந்து நின்று போகாய்

-

உருவெளிப்பாட்டாலே எப்போதும் இவள் கண்ணெதிரே தோற்றிப் புறம்பு போகிறாயில்லை

நீ

-

நீ

இவளை

-

இப்பெண்பிள்ளையை

உங்கள் தொண்டர்கை தண்டு என்ற ஆறு

-

அடியார் கையிலுள்ள தடியைப்போலே நினைத்திருக்கும் விதம் என்னே!

சொல்லி என்

-

(இவள் திறத்திலே உனக்கு உள்ள உபேக்ஷையைப்பற்றி விரிவாகச்) சொல்வதனால்

(இப்படி உபேக்ஷித்திருப்பதானது)

மல்கிய தோளும்

-

பணைத்த தோள்களையும்

மான் உரி அதளும்

-

மானின் உரிக்கப்பட்ட தோலையும்

உடையவர் தமக்கும்

-

உடையவரான சிவபிரானுக்கும்

ஓர் பாகம்

-

திருமேனியில் ஒரு பகுதியை

நல்கிய

-

(இடமாகக்) கொடுத்திருக்கிறோ மென்கிற

நலமோ

-

பெருமையை நினைத்தோ?

(அன்றி)

நாகனை

-

நாகாஸுரனை

தொலைத்த

-

கொன்றொழிப்பதற்கீடான

காதலத்து

-

கையிலுள்ள

அமைதியின் கருத்தோ

-

மிடுக்கை நினைத்தோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அஹங்காரியான ருத்ரனுக்கும் நாம் உடம்பிலே ஒரு கூறு கொடுத்திருக்கிறோமென்கிற சீலகுணத்தை நினைத்தோ, நரகாசுரனை முடித்த மிடுக்குடையோமென்று கையில் மிடுக்கை நினைத்தோ இவளை நீ உபேக்ஷித்திருக்கிறாய் என்கிறாள்.

சிவபிரானுக்குத் திருமேனியில் கூறுகொடுதத்தையும் நரகனைத் தொலைத்ததையும் இங்கு எடுத்துக் கூறுவதன் கருத்து யாதெனில், இப்பரகால நாயகியை உபேக்ஷித்ததனால் நமக்கு யாதொரு அபகீர்த்தியும் விளைந்திடாது, அஹங்காரியான ருத்ரனுக்கு உடம்பில் இடங்கொடுத்த சீலகுணம் உலகமெங்கும் பரவியிருக்கும்போது இதுவொரு அபகீர்த்தியாகுமோ நமக்கு? என்று நினைக்கிறாயோ, நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிறந்த பெருந்தேவிமார் இருக்க இவள் ஒரு பொருளோ என்று நினைக்கிறாயோ? என்பதாம்.

(அல்லியங்கோதை யணிநிறங்கொண்டு வந்து முன்னே நின்று போகாய்) அல்லியங்கோதை யென்பது பரகால நாயகியை, இவளுடைய அழகிய மேனி நிறம் விரஹ வேதனையினால் அழிந்தபோனது பற்றி ;அணிநிறங்கொண்டு; எனப்பட்டது. “முன்னே வந்து போகாய்“ என்றது உருவெளிப்பாட்டைச் சொன்னபடி. அதாவது, ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமாக உருவம் கண்ணுக்குத் தோற்றுகை. (வ்ருக்ஷே வ்ருக்ஷே பச்யாமி சீர க்ருஷ்ணாஜிநரம்பரம்“ என்று மாரீசனுக்கு இராமபிரானுடைய உருவம் எங்கும் தோற்றினது போல அன்பர்கட்கும் தோற்றுமென்க.

இவளை அலக்ஷியம் செய்கிற நீ உருவெளிப்பட்டாலே இவளை நோவப்படுத்துவது எதுக்கு? உன்னை மறந்தும் வாழவொட்டாதே இப்படி ஹிம்ஸிப்பாயோ என்றாளாயிற்று.

இவளை நீ உங்கள் தொண்டர்கைத் தண்டென்றவாறே - “சாபமாநய ஸௌமித்ரே“ என்று நினைத்தபோது வாங்கிக் காரியங் கொள்ளலாம்படி உரிய அடியார் கையில் ஆயுதத் தோபாதி நினைத்திரா நின்றாய்“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி. அடியவர்களின் கையிலுள்ள ஆயுதத்தை வாங்குதல் எப்படி அலக்ஷியமோ, அப்படி இவளையும் அலக்ஷியம் செய்கிறாயே! என்றவாறு.

English Translation

O Lord is it exulting in the goodness of your giving a place in your person to the deer-skin-wearer Siva, or you confidence in destroying Narakasura with bare hands, that you never deem it necessary to come and see this coiffured dame whose rouge you snatched then? Do not think she is as easy to retrieve as the proverbial bow from a servant;s hands. Alas, what use saying this?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain